மற்றவை

புற்களின் இலை துருநோய்

Puccinia coronata

பூஞ்சைக்காளான்

5 mins to read

சுருக்கமாக

  • பெரிய, நேர்கோட்டு, லேசான ஆரஞ்சு கொப்புளங்கள் இலைகளின் மேற்புறத்தில் மற்றும் அவ்வப்போது இலை உறைகள், மஞ்சரிக்காம்புகள் மற்றும் கதிர்கள் ஆகியவற்றில் காணப்படும்.
  • மேலும் அதிகமான பச்சையசோகை மற்றும் இலைகளின் முதிர்ச்சி பெரும்பாலும் இந்த கொப்புளங்களோடு தொடர்புபடுத்தப்படுகின்றன.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்
பார்லிகோதுமை

மற்றவை

அறிகுறிகள்

பெரிய, நேர்கோட்டு, லேசான ஆரஞ்சு கொப்புளங்கள் இலைகளின் மேற்புறத்தில் தோன்றும். அதிகமான நோய்தொற்றின் போது, இவை இலை உறைகள், மஞ்சரிக்காம்புகள், தூரிகை முடி மற்றும் கதிர்கள் ஆகியவற்றிலும் காணப்படும். இந்தக் கொப்புளங்கள் பெரும்பாலும் கொத்துக்களாக இருக்கும். காலப்போக்கில், இவை லேசான பழுப்பு நிற, ஆழமான பச்சையசோகையாக மாறும் மற்றும் இலை முதிர்ச்சியும் இலைகளில் ஏற்படும். எனினும், இந்த தொற்று அரிதாகவே முழு தாவரங்களையும் அழிக்கும். திசுஅழுகல் ஒளிச்சேர்க்கை விகிதங்களை குறைத்து, இதனால் வளர்ச்சி மற்றும் விளைச்சல் பாதிக்கப்படுகிறது. தானியங்கள் அடிக்கடி வாடி, அதன் தரம் குறைகிறது. கடுமையான தொற்று தாவரங்களை வறட்சியான நிலைமைகளுக்கு பெரிதும் ஆளாக்கி, பாதகமான வானிலையின் போது அதனை இறக்க செய்துவிடுகிறது.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

இந்த நோய்க்கு எதிரான உயிரியல் சிகிச்சைகள் இல்லை. உங்களுக்கு ஏதேனும் தெரிந்திருந்தால், தயவுசெய்து எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள், நாங்கள் அவற்றை அறிய மகிழ்ச்சியுடன் காத்திருக்கிறோம்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். இந்த நோய்த்தொற்றுக்கு எதிராக செயல்படும் வணிகரீதியாக கிடைக்கக்கூடிய பல தயாரிப்புகளை பயன்படுத்தலாம். பிராப்பிகொனாஜொல் அடிப்படையிலான கலவைகள் மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது. பூஞ்சைகளுக்கு ஏற்ற சூழ்நிலைகள் அமையாதபட்சத்தில் தெளிப்பான்கள் பரிந்துரைக்கப்படுகிறது.

இது எதனால் ஏற்படுகிறது

இந்த நோய்க்கான அறிகுறிகள் புசினியா கரோனேட்டா என்னும் பூஞ்சையால் ஏற்படுகிறது. பருவக்காலங்களுக்கு இடையில் இவை மாற்று புரவலன்கள், வயல்களில் எஞ்சியுள்ள தாவரக் கழிவுகள் ஆகியவற்றில் வாழும். இவற்றின் சாதகமான சூழ்நிலைகளான வசந்த காலங்களில், பூஞ்சைகள் மீண்டும் வளரத் துவங்கி, சிதல்களை உற்பத்தி செய்யும், இது முதலாம் நிலை நுண்ணுயிர் மூலவித்தாக விளங்குகிறது. இலைகளில் உருவாகும் கொப்புளங்கள் மற்றொரு வகை சிதல்களை உற்பத்தி செய்யும், இது காற்றினால் பரவக்கூடியது (இது இரண்டாம் நிலை நுண்ணுயிர் மூலவித்தாக விளங்குகிறது). இந்த பூஞ்சையின் வளரும் பருவத்தில், பல்வேறு சுழற்சிகளை கொண்ட இனப்பெருக்கம் நடைபெறுகின்றன. இது பார்லி மற்றும் புல்லரிசி போன்ற பயிர் செய்யப்பட்ட இனங்கள் மற்றும் பல்வேறு புல் வகைகள் மற்றும் குறிப்பாக, வற்றாத களைகள் என்று பொதுவாக அழைக்கப்படும் பக்தார்ன் (ராம்னாஸ் காதர்டிக்கா) ஆகியவற்றை பாதிக்கிறது. மிதமான வெப்பநிலை (20 முதல் 25 டிகிரி செல்சியஸ் வரை) கொண்ட பகல் பொழுது மற்றும் பனித்துளி உருவாவதற்கான போதுமான ஈரப்பதத்தைக் கொண்ட இலேசான இரவுகள் (15 முதல் 20 டிகிரி செல்சியஸ் வரை) இந்த பூஞ்சைக்கு சாதகமான சூழ்நிலையாகும்.


தடுப்பு முறைகள்

  • நோய் எதிரிப்பு திறன் கொண்ட தாவர வகைகளை தேர்வு செய்வதே இந்த நோயை தவிர்க்க சிறந்த வழி ஆகும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க