கம்பு

புல்லரிசி வகையின் பழுப்பு நிற துரு நோய்

Puccinia recondita

பூஞ்சைக்காளான்

5 mins to read

சுருக்கமாக

  • அறிகுறிகளானது இலை பரப்பின் இரு புறங்களிலும் சிறிய, வட்ட வடிவ, ஆரஞ்சு-பழுப்பு நிற கொப்புளங்களாக ஆங்காங்கே சிதறி காணப்படும்.
  • திசுக்கள் படிப்படியாக மஞ்சள் நிறமாகவும் பின்னர் பழுப்பு நிறமாகவும் மாறிவிடும்.

இதிலும் கூடக் காணப்படும்

0 பயிர்கள்

கம்பு

அறிகுறிகள்

அறிகுறிகளானது இலை பரப்பின் இரு புறங்களிலும் சிறிய, வட்ட வடிவ, ஆரஞ்சு-பழுப்பு நிற கொப்புளங்கள் ஆங்காங்கே சிதறி காணப்படும். இவை புல்லரிசி வகை தாவரங்களுக்கு இடையே தொற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய வித்துக்களை கொண்டிருக்கும். மந்தமான மஞ்சள் அல்லது வெளிர் பழுப்பு நிற திட்டுக்கள் பெரும்பாலும் இலைகளில் பரவி, பின்னர் இவை படிப்படியாக சிதைந்து போகும். இந்த திட்டுக்கள் வித்துக்களை கொண்டிருக்கும். இந்த வித்துக்களானது பின்னர் தானே வளரும் தாவரங்கள் அல்லது மாற்று புரவலன்களில் வாழ்ந்து மீண்டும் தனது வாழ்க்கை சுழற்சியை தொடங்கும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

பேசில்லஸ் சப்டிலிஸ் என்னும் பாக்டீரியா, டிரிகோடெர்மா ஹாரிஜானியம் என்னும் பூஞ்சை அல்லது சக்கரோமைசிஸ் செரிவிசே என்னும் நுரைமம் உள்ளிட்டவை உயிரியல் கட்டுப்பட்டு முகவர்களுள் அடங்கும். இவை புல்லரிசி வகையில் ஏற்படும் பழுப்பு நிற துரு நோயை குறிப்பிடத்தக்க வகையில் கட்டுப்படுத்தி, தானிய விளைச்சலை அதிகரிப்பதற்கு உதவும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். பிராத்தியோகோனாஜொல் என்பவற்றை அடிப்படையாக கொண்ட தடுப்பு பூஞ்சைக்கொல்லிகளை சரியான நேரத்தில் தெளித்தல் புல்லரிசி வகையில் ஏற்படும் பழுப்பு நிற துரு நோயை பொதுவாக கட்டுப்படுத்தும். புல்லரிசி வகையில் ஏற்படும் இலை துரு நோய்க்கு சிகிச்சை அளிக்க பல விதமான இலை திரள் பூஞ்சைக்கொல்லிகள் உள்ளன. சிறந்த அடக்குமுறைக்கு, அறிகுறிகள் முதலில் கண்டறியப்பட்டவுடன் அவற்றைப் பயன்படுத்துங்கள்.துரு நோய்கள் ஏற்படுவதற்கு சூழ்நிலைகள் சாதகமாக இருக்கும்போது கூடுதல் பயன்பாடுகள் அவசியமாக இருக்கக்கூடும்.

இது எதனால் ஏற்படுகிறது

இந்த நோய்க்கான அறிகுறிகளானது புசினியா ரெகாண்டிடா என்னும் பூஞ்சையால் ஏற்படுகிறது. இது பச்சை நிற தாவரங்களில் மட்டுமே வாழக்கூடியது, ஏனெனில் இவை வாழ்வதற்கு வாழும் உயிரணுக்கள் தேவை. காட்டு புல்லரிசி வகை, கோதுமை மற்றும் தானே வளரும் தாவரங்கள் போன்றவை இந்த நோய்கிருமியின் பல வகையான மாற்று புரவலன்களுள் அடங்கும். மேலும் இந்த பூஞ்சை முளைக்கும் செயல்முறைக்கு இலை ஈரப்பதம் தேவைப்படுகிறது, மேலும் 100% ஈரப்பதம் மற்றும் வெதுவெதுப்பான வெப்பநிலை (15º - 22º செல்சியஸ்) இவற்றுக்கு சிறந்த சூழ்நிலையாகும். இருப்பினும், சூடான, வறண்ட காலநிலையில் இந்த வித்துக்களால் உயிர் வாழ முடியாது. புல்லரிசி வகையின் பழுப்பு நிற துரு நோயின் கடுமையான தாக்குதல்கள் முக்கியமாக பருவகாலத்தின் பிற்பகுதியில் ஏற்படும், குறிப்பாக அதிகப்படியான தழைச்சத்து பயன்படுத்தும்போது ஏற்படும். தாமதமாக விதைக்கப்படும் பயிர்களை விட, சீக்கிரம் விதைக்கப்படும் பயிர்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்படுகின்றன, குறிப்பாக இரவுகள் வெதுவெதுப்பாக இருக்கும்போது இன்னும் பாதிக்கப்படுகின்றன.


தடுப்பு முறைகள்

  • எதிர்ப்பு திறன் கொண்ட தாவர வகைகளை தேர்ந்தெடுப்பதே நோயை தடுக்க கூடிய சிறந்த வழியாகும்.
  • நோய்க்கான அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என வயலை தொடர்ந்து கண்காணிக்கவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க