வெங்காயம்

போட்ரிடிஸ் இலை கருகல் நோய்

Botryotinia squamosa

பூஞ்சைக்காளான்

5 mins to read

சுருக்கமாக

  • இலைகளில் சிறிய, வெள்ளை மற்றும் நீளமான புள்ளிகள் தோன்றும், இவை பெரும்பாலும் வெளிர் பச்சை நிற ஒளிவட்டத்தால் சூழப்பட்டிருக்கும்.
  • காலப்போக்கில், இந்த புள்ளிகள் மூழ்கி வைக்கோல் நிறமாக மாறும், மேலும் இதன் மையப்பகுதியில் சிறப்பியல்பு கொண்ட நீளமான வெட்டு காணப்படும்.
  • இலைகள் கருகிபோகுதல் மற்றும் இறந்து போகுதல் போன்றவற்றாலும் தாவர இறப்பு ஏற்படலாம்.
  • இறக்கும் தாவரங்களின் பெரிய மஞ்சள் திட்டுகளை வயலில் காணலாம்.

இதிலும் கூடக் காணப்படும்

2 பயிர்கள்
வெள்ளைப் பூண்டு
வெங்காயம்

வெங்காயம்

அறிகுறிகள்

நோய்த்தொற்று எந்த வளர்ச்சிக் கட்டத்திலும் ஏற்படலாம் மற்றும் இவை பொதுவாக முதிர்ந்த இலைகளில் முதலில் உருவாகும். ஆரம்ப அறிகுறிகள் இலை மேற்பரப்பில் சிறியதாக (1-5 மி.மீ), வட்ட அல்லது நீளமான வெள்ளை புள்ளிகளாகத் தோன்றும். தனிப்பட்ட புள்ளிகள், பின்னர் புள்ளிகளின் குழுக்கள் வெளிர் பச்சை அல்லது வெள்ளிநிற ஒளிவட்டத்தால் சூழப்பட்டு இருக்கும், இவை ஆரம்பத்தில் நீர் தோய்த்த தோற்றத்தைக் கொண்டிருக்கும். காலப்போக்கில், காயங்களின் எண்ணிக்கை அதிகரித்து, முதிர்ந்த புள்ளிகளின் மையப்பகுதி மூழ்கி வைக்கோல் நிறமாகிறது, இது திசு இறப்பு உருவாவதற்கான அறிகுறியாகும். காயத்தில் நீளமாக நோக்குநிலை கொண்ட சிறப்பியல்புடைய பிளவு பிந்தைய கட்டங்களில் தோன்றக்கூடும். இலை நுனிகள் மற்றும் ஓரங்கள் மென்மையாகி, படிப்படியாக சிதைந்து, கருகிப்போகிறது மற்றும் நுனியிலிருந்து பின்பக்கமாக இறந்து போகிறது. சாதகமான சூழ்நிலைகளில்,நோயானது குமிழ்த்தண்டுகளையும் பாதித்து, அதன் அளவு மற்றும் தரத்தை பாதிக்கிறது. நோய் மேலும் பரவுகையில், இறக்கும் தாவரங்களின் பெரிய மஞ்சள் திட்டுகளை வயலில் தூரத்திலிருந்தே கண்காணிக்கலாம்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

இந்த நோய்க்கு சிகிச்சையளிக்க தற்போது எந்த உயிரியல் சிகிச்சையும் கிடைக்கவில்லை. உங்களுக்கு ஏதேனும் தெரிந்தால் எங்களை தொடர்பு கொள்ளவும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால் தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். தொற்று அபாயத்தைக் குறைக்க நல்ல வயல்வெளி நடைமுறைகள் அவசியம். பூஞ்சைக் கொல்லிகள் தேவைப்பட்டால், ஃப்ளூடியோக்ஸோனிலுடன் இணைந்து இப்ரோடியோன், பைரிமெத்தனில், ஃப்ளூயசினம் அல்லது சைப்ரோடினில் ஆகியவற்றைக் கொண்ட தயாரிப்புகள் தெளிப்பு முறையில் பயன்படுத்தும்போது சிறந்த முடிவுகளைத் தருகின்றன. குளோர்தலோனில் மற்றும் மான்கோசெப் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட பிற தயாரிப்புகளும் வேலை செய்கின்றன, ஆனால் அவை குறைந்த செயல்திறன் கொண்டவை. காற்றில் உலாவும் பாகங்கள் மீது தெளிப்பு முறை பயன்படுத்துவதை விட நிலத்தடி புகையூட்டல் மூலம் பூசண கொல்லிகளைப் பயன்படுத்துவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இது எதனால் ஏற்படுகிறது

போட்ரிடிஸ் ஸ்குவாமோசா என்ற பூஞ்சையால் இந்த நோய் ஏற்படுகிறது, இது பாதிக்கப்பட்ட குமிழ்த்தண்டுகள் அல்லது வயலில் எஞ்சியிருக்கும் மற்ற தாவர குப்பைகள் அல்லது சேமிப்பு வசதிகளில் உயிர்வாழ்கிறது. நிலைமைகள் சாதகமாக இருக்கும்போது, இந்த திசுக்களில் பூஞ்சை வித்துக்கள் உற்பத்தியாகி, காற்று மூலம் அண்டை தாவரங்களுக்கு பரவி, இது நோய்த்தொற்றின் முதன்மை ஆதாரமாக செயல்படுகிறது. 10 முதல் 20 ° செல்சியஸ் வரையிலான வெப்பநிலை, அதிக மழை, நீண்ட கால இலை ஈரப்பதம் அல்லது அதிக ஈரப்பதம் ஆகியவை பூஞ்சையின் வாழ்க்கைச் சுழற்சியை ஆதரிக்கின்றன. அறிகுறிகளானது வறட்சி அழுத்தம், ஆலங்கட்டி மழையால் ஏற்படும் காயம், இலைப்பேன் தொற்று அல்லது களைக்கொல்லி சேதம் போன்ற பிற நோயியல் அல்லது கோளாறுகளுடன் குழப்பமடையக்கூடும்.


தடுப்பு முறைகள்

  • சான்றிதழ் பெற்ற ஆதாரங்களிலிருந்து பெற்ற ஆரோக்கியமான விதைகள் அல்லது நடவுப் பொருளைப் பயன்படுத்தவும்.
  • விரைவாக முதிர்ச்சியடையும் வகைகளைத் தேர்ந்தெடுக்கவும்.
  • நல்ல காற்றோட்டத்தை உறுதிப்படுத்த வரிசையாக நடவு செய்ய பரிந்துரைக்கப்பட்ட இடைவெளியைப் பின்பற்றவும்.
  • வெங்காய உற்பத்தி தளங்களுக்கு அருகில், விதை உற்பத்தி செய்வதற்கு நடவு செய்ய வேண்டாம்.
  • மண்ணின் நல்ல வடிகாலினை உறுதி செய்து, அதிகப்படியான நீர்ப்பாசனம் செய்வதை தவிர்க்கவும்.
  • உச்சிப்பகுதி உலரும்போது, பருவத்தின் பிற்பகுதியில் உரங்களை பயன்படுத்த வேண்டாம்.
  • நோய்க்கான அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என உங்கள் தாவரங்கள் அல்லது வயல்களை தொடர்ந்து கண்காணிக்கவும்.
  • வயல்களில் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள களைகள் மற்றும் தானே வளரும் தாவரங்களை அகற்றவும்.
  • பாதிக்கப்பட்ட தாவரங்கள் மற்றும் தாவர பாகங்களை அகற்றி, அவற்றை எரிப்பதன் மூலம் அழித்து விடவும்.
  • அறுவடைக்குப் பிறகு, தாழ்தரப்பொருள்களின் குவியல்களை அகற்றி வெங்காயத்தின் உச்சிப்பகுதியை வெட்டி எரிப்பதன் மூலம் அவற்றை அழிக்கவும்.
  • பிற நோய்கள் மூலம் ஏற்படும் நோய்த்தொற்று அபாயத்தை அதிகரிப்பதைத் தவிர்க்க 2 ஆண்டுகளுக்கு பயிர் சுழற்சி செய்வது பரிந்துரைக்கப்படுகிறது.
  • பாதிக்கப்பட்ட தளங்களிலிருந்து மற்ற வயல்கள் அல்லது பண்ணைகளுக்கு குமிழ்த்தண்டுகளை கொண்டு செல்ல வேண்டாம்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க