கடுகு எண்ணெய்

கருங்கால் நோய்

Plenodomus lingam

பூஞ்சைக்காளான்

5 mins to read

சுருக்கமாக

  • இலைகளில் கரு நிற புள்ளிகளுடன் வட்ட வடிவிலான, வெளிர் சாம்பல் நிற காயங்கள் மற்றும் அடர் நிறத்தில் சிதைந்த காயங்கள் என இரண்டும் காணப்படும்.
  • இரண்டு வகையான காயங்களும் வெளிர் நிற ஒளிவட்டத்தால் சூழப்பட்டிருக்கும்.
  • தண்டுகளில் சாம்பல் நிற காயங்கள் காணப்படும், இவை சொறி நோயாக மாறும்.
  • இவை வளருகையில், சொறி நோய்கள் தண்டுகளை குடைந்து, அதனை பலவீனப்படுத்தும்.
  • இதன் விளைவாக தாவரங்கள் சாயக்கூடும் மற்றும் இறந்தும்கூட போகலாம்.

இதிலும் கூடக் காணப்படும்

3 பயிர்கள்
முட்டைக்கோசு
கடுகு எண்ணெய்
பூக்கோசு.

கடுகு எண்ணெய்

அறிகுறிகள்

அறிகுறிகளின் தீவிரம் நீங்கள் தேர்வு செய்யும் பயிர் அல்லது அதன் வகை, நோய்க்கிருமி மற்றும் நிலவும் சுற்றுச்சூழல் நிலைமைகளைப் பொறுத்து பரவலாக மாறுபடும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும், முக்கிய அறிகுறிகள் இலைகள் மற்றும் தண்டுகளில் மட்டுமே தெரியும். கருப்பு நிற புள்ளிகளுடன் வட்ட வடிவிலான, வெளிர் சாம்பல் நிற காயங்கள் மற்றும் அடர் நிறத்தில் சிதைந்த காயங்கள் ஆகிய இவை இரண்டும் இலைகளில் காணப்படும் காயங்களில் அடங்கும். அந்த காயங்களை சுற்றி இலை நரம்புகள் மஞ்சள் நிறமாகுதல் அல்லது முழு திட்டுக்களின் நிறமாற்றம் ஆகியவையும் பொதுவாக காணப்படும் (வெளிறிய ஒளிவட்டம்). தண்டுகளில் சாம்பல் நிற காயங்களும் தென்படும், இது சிறிய, நீள்வட்டமான, பழுப்பு நிற புள்ளிகள் முதல் முழு தண்டையும் குடையக்கூடிய சொறி நோய் வரை இருக்கும். கருப்பு நிற புள்ளிகளையும் அவற்றில் காணலாம். அவை வளருகையில், சொறி நோய் தண்டினை குடைந்து, பலவீனப்படுத்துகின்றன, இது சீக்கிரம் பழுத்தல், தாவரம் சாயுதல் மற்றும் அவற்றின் இறப்புக்கு வழிவகுக்கும். காய்களில் கருப்பு நிற ஓரங்களுடன் பழுப்பு நிற காயங்கள் வடிவில் அறிகுறிகள் தென்படும், இதன் விளைவாக முன்கூட்டியே கணிதல் மற்றும் விதை தொற்று போன்றவை ஏற்படலாம்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

இந்த நோய்களை எதிர்த்துப் போராட உயிரியல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எதுவும் இல்லை போல தெரிகிறது. உங்களுக்கு ஏதேனும் தெரிந்தால் எங்களை தொடர்பு கொள்ளவும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். பூஞ்சையானது தண்டினை அடைந்து விட்டால், பூச்சிக்கொல்லிகள் குறைவான விளைவையே வழங்கும். மேலும், அதிக மகசூல் எதிர்பார்க்கப்படும் வயல்களில் மட்டுமே சிகிச்சை நியாயமாக இருக்கும். புரோத்தியோகோனசோல் என்பவற்றை இலைத்திரள் தெளிப்பானாக பயன்படுத்தலாம். திரமில் சேர்க்கப்பட்ட புரோக்ளோராஸ் கொண்டு மேற்கொள்ளப்படும் செயல்பாட்டு விதை சிகிச்சையானது விதை மூலம் பரவும் ஃபோமா நோய்த்தொற்றால் ஏற்படும் நாற்று நோய்த்தொற்றுகளைக் குறைக்கும்.

இது எதனால் ஏற்படுகிறது

கருங்கால் நோய் (ஃபோமா தண்டு சொறிநோய் என்றும் அழைக்கப்படுகிறது) உண்மையில் இரண்டு வகையான பூஞ்சைகளால் ஏற்படுகிறது, அதாவது லெப்டோஸ்பேரியா மேக்குலான்ஸ் மற்றும் எல். பிக்லோபோசா. இவை விதைகள் அல்லது வயலில் எஞ்சியிருக்கும் பயிர்த்தாள்கள் மற்றும் பயிர்க்குப்பைகளில் குளிர்காலத்தை செயலற்ற நிலையில் கழிக்கும். வசந்த காலத்தில் வெதுவெதுப்பான மற்றும் ஈரப்பதமான வானிலை தொடங்கும் போது இவை வித்துக்களை உற்பத்தி செய்யத் தொடங்குகின்றன. இந்த வித்துக்கள் காற்று அல்லது மழை சாரல் மூலம் ஆரோக்கியமான தாவர பாகங்களுக்கு, குறிப்பாக கீழ்ப்புற இலைகள் மற்றும் தண்டின் அடிப்பகுதிக்கு பரவும். வித்துக்களின் முளைப்பு மற்றும் தாவர திசுக்களில் பூஞ்சையின் வளர்ச்சி அறிகுறிகளின் தோற்றத்தைத் தூண்டுகிறது. விதையிலைகள் பாதிக்கப்பட்டிருந்தால், நாற்றுகள் பருவத்தின் ஆரம்பத்தில் இறக்கக்கூடும் (நாற்றழுகல் நோய்). பூஞ்சையானது இளம் இலைகளிலிருந்து தண்டு வரை பரவுகிறது, மேலும் இவை வளரும் இடங்களில் இலைக்காம்பு மற்றும் தண்டுக்கு இடையேயான சந்திப்பில் அல்லது உச்சிப்பகுதியை சுற்றி சொறி நோயை ஏற்படுத்துகிறது. இது தண்டு வழியாக நீர் மற்றும் ஊட்டச்சத்து போக்குவரத்தை கட்டுப்படுத்துவதனால், தாவர இறப்பு அல்லது தாவரம் சாய்ந்து கீழே விழுதல் போன்றவை ஏற்படலாம். ரேப் விதை (எண்ணெய் வித்து பயிர் செடி வகை) மற்றும் பிராசிக்கா குடும்பத்தின் பிற பயிர்களில் (கனோலா, டர்னிப், ப்ரோக்கோலி, பிரஸ்ஸல்ஸ் முளைகள், முட்டைக்கோஸ்) இது முக்கியமான நோயாக கருதப்படுகிறது.


தடுப்பு முறைகள்

  • இந்த நோய்க்கு எதிரான மிக முக்கியமான நடவடிக்கை, நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பயிருக்கு கிடைக்கப்பெற்றால், எதிர்ப்புத்திறன் கொண்ட வகைகளைப் பயன்படுத்துவதேயாகும்.
  • புரவலன் அல்லாத பயிர்களை கொண்டு பயிர் சுழற்சி செய்யவும்.
  • பயிர் குப்பைகளை அறுவடைக்குப் பிறகு நிலத்தை உழுது புதைக்கவும்.
  • மேலோட்டமான உழவு பூஞ்சை கீழ்ப்புற இலைகள் மற்றும் தண்டுகளை அடைவதற்கு இடையூறாக இருக்கும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க