மாதுளை

செர்கோஸ்போரா பழ மற்றும் இலைப்புள்ளி நோய்

Pseudocercospora punicae

பூஞ்சைக்காளான்

5 mins to read

சுருக்கமாக

  • புல்லிவட்டங்கள் மற்றும் இலைகளில் அடர் நிறத்தில், சிறிய புள்ளிகள்.
  • புல்லிவட்டங்களில் உள்ள புள்ளிகள் பெரிதாகி, அடர் நிறமாக மாறும்.
  • இலைகளில் உள்ள புள்ளிகள் மஞ்சள் நிற ஓரங்களைக் கொண்டிருக்கும்.
  • இலைகள் வெளிறிய பச்சை நிறமாகி, பிறகு மஞ்சள் நிறமாக மாறி, உதிரும்.
  • சிறுகிளைகள் கூட நோய்த்தொற்றால் பாதிக்கப்படலாம்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

மாதுளை

அறிகுறிகள்

அறிகுறிகளை முதலில் பூவின் புல்லிவட்டங்களில் காணலாம். சிறிய, வட்ட வடிவிலான, பழுப்பு முதல் கருப்பு நிற புள்ளிகள் அதில் தோன்றும். புள்ளிகள் பின்னர் பெரிதாகி, ஒன்றிணைந்து அடர் நிறமாக மாறும். வடிவம் ஒழுங்கற்றதாகி, திட்டுகள் 1 முதல் 12 மிமீ விட்டம் வரை விரிவடையலாம். பழத்தில், புள்ளிகளானது பாக்டீரியா கருகல் நோயின்போது போது காணப்படும் காயங்களை ஒத்திருக்கின்றன, ஆனால் இவை அடர் கருப்பு நிறத்தில், தனித்தன்மை வாய்ந்தவையாக, பல்வேறு அளவுகளில், விரிசல்கள் இல்லாமல் மற்றும் ஒட்டும் தன்மை இல்லாமல் காணப்படும். இலைகளில், புள்ளிகள் சிதறி, வட்ட வடிவில் அல்லது ஒழுங்கற்ற வடிவில், அடர் செம்பழுப்பு முதல் கிட்டத்தட்ட கருப்பு நிறத்தில் பரவிய மஞ்சள் ஓரங்களுடன் காணப்படும். புள்ளிகள் 0.5 முதல் 5 மிமீ விட்டத்துடன், ஒன்றிணையாமல் இருக்கும். புள்ளிகளை உடைய இலைகள் வெளிறிய பச்சை நிறமாகி, மஞ்சள் நிறமாக மாறி விழும். கருப்பு நீள்வட்ட புள்ளிகள் சிறுகிளைகளில் தோன்றும், இது உப்பிய ஓரங்களுடன் காணப்படும். பாதிக்கப்பட்ட சிறு கிளைகள் உலர்ந்து, இறந்துவிடும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

மன்னிக்கவும், இந்த நோய்க்கான உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள் பற்றி எதையும் எங்களால் கண்டுபிடிக்க இயலவில்லை. இந்த இடைவெளியை நிரப்ப நாங்கள் எதிர்நோக்குகிறோம்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். பொருளாதார வரம்பை அடைந்தால், கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பழம் உருவான பிறகு பூஞ்சைக்கொல்லிகளை 15 நாட்கள் இடைவெளியில் இரண்டு முதல் மூன்று முறை தெளிப்பது நோயைக் கட்டுப்படுத்துகின்றன. மான்கோசெப், கொனஸோல் அல்லது கிடாசின் போன்றவை இவற்றின் செயல்பாட்டு பொருள்கள் ஆகும். மாதுளைக்காக உண்மையாக பதிவு செய்யப்பட்ட பூஞ்சைக்கொல்லிகளை மட்டுமே தெளிக்கவும். குறிப்பிடப்பட்டுள்ள செறிவுகளைப் பின்பற்றுவது மற்றும் எதிர்ப்புத்திறனை தடுக்க பல்வேறு வகையான செயல்பாடுகளை உடைய பூஞ்சைக் கொல்லிகளைப் பயன்படுத்துவது முக்கியம். காத்திருக்கும் காலத்தை மதிப்பதும் மிகவும் முக்கியம்.

இது எதனால் ஏற்படுகிறது

சூடோசெர்கோஸ்போரா புனிசியே என்ற பூஞ்சையால் அறிகுறிகள் ஏற்படுகின்றன. இது தாவர குப்பைகள் மற்றும் தாவரத்தின் பாதிக்கப்பட்ட தண்டு பகுதிகளில் உயிர்வாழும். இது காற்றினால் பரவும் வித்துக்களால் பரவுகிறது. மழை மற்றும் நீர் நிறைவுற்ற மண் இந்த நோய் ஏற்படுவதற்கு சாதகமான சூழலாகும். எனவே ஈரப்பதமான சூழல் மற்றும் மழை பெய்யும் சூழலில் நோய்த்தொற்று செயல்முறை மற்றும் நோய் பரவுதல் வேகமாக இருக்கும். இலை புள்ளிகள் மறைமுகமாக விளைச்சலைக் குறைக்கும். ஒளிச்சேர்க்கைக்கு ஆற்றலை உருவாக்கக்கூடிய பகுதியை இவை குறைக்கின்றன. பாதிக்கப்பட்ட இலைகளை தேயிலை உற்பத்திக்காகவோ அல்லது வேறு எதற்காகவும் விற்க முடியாது. பழத்தில் காணப்படும் புள்ளிகள் சந்தை உற்பத்தியின் பொருளாதார இழப்பை ஏற்படுத்துகின்றன. பாதிக்கப்பட்ட பழங்களையும் விற்க முடியாது.


தடுப்பு முறைகள்

  • சான்றளிக்கப்பட்ட ஆதாரங்களில் இருந்து பெறப்பட்ட நோய்க்கிருமி இல்லாத தாவர பொருட்களை பயன்படுத்தவும்.
  • உங்கள் பகுதியில் கிடைக்கும் சகிப்புத்தன்மை கொண்ட வகைகளைப் பயன்படுத்தவும்.
  • விளைச்சலில் ஏற்படும் பாதிப்பைத் தவிர்க்க உங்கள் பயிருக்கு முறையாக உரமிடவும்.
  • வயல்களில் நல்ல வடிகாலினை அமைக்கவும்.
  • எந்தவொரு வளர்ச்சிக் கட்டத்திலும், குறிப்பாக பூக்கும் காலத்தில் நோய்க்கான அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என உங்கள் தாவரங்கள் அல்லது வயல்களை சரிபார்க்கவும்.
  • நல்ல வயல் சுகாதாரம் பூஞ்சையை கட்டுப்படுத்த உதவுகிறது.
  • நோயுற்ற பழங்களை சேகரித்து அழிக்க வேண்டும்.
  • நோயுற்ற கிளைகளை சீர்திருத்தம் செய்து, அழித்து விடுவது பரிந்துரைக்கப்படுகிறது.
  • உதிர்ந்த இலைகளை கிளறி எடுத்து அப்புறப்படுத்த வேண்டும்.
  • மாதுளையை 5 ° செல்சியஸ் வெப்பநிலை மற்றும் 92% க்கும் அதிகமான ஒப்பு ஈரப்பதத்தில் எட்டு முதல் பன்னிரண்டு வாரங்களுக்கு சேமிக்கவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க