சோளம்

சோளத்தின் மூடிய தானியக் கரிப்பூட்டை நோய்

Sporisorium sorghi

பூஞ்சைக்காளான்

5 mins to read

சுருக்கமாக

  • சோளத் தட்டையில் பல சோள தானியங்களுக்குப் பதிலாக கூம்பு அல்லது நீள் வட்ட வடிவில் வித்துக்களை உற்பத்தி செய்யும் அமைப்புகள் காணப்படும்.
  • கரிப்பூட்டை சோரி என்றழைக்கப்படும் இவை வெள்ளை முதல் சாம்பல் அல்லது பழுப்பு நிறத்தில், சில சமயங்களில் கோடுகளுடன் காணப்படும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

சோளம்

அறிகுறிகள்

சோளத் தட்டையில் உள்ள சோள தானியங்களுக்கு பதிலாக, கரிப்பூட்டை சோரி என்றழைக்கப்படும் கூம்பு அல்லது நீள் வட்ட வடிவில், வித்துக்களை உற்பத்தி செய்யும் அமைப்புகள் காணப்படும். இவை விடாப்பிடியான மேற்புற பூச்சுகளினால் சூழப்படுகிறது மற்றும் அவற்றின் அளவினைப் பொறுத்து இது சுமார் 1 சென்டி மீட்டருக்கு மேலாக நீளம் கொண்ட உமியினால் சூழப்பட்டிருக்கும். இந்த உமியானது சாதாரண வண்ணத்திலேயே இருக்கும். பெரும்பாலான சோரி கூம்பு அல்லது நீள்வட்ட வடிவில், பார்ப்பதற்கு நீட்சியுற்ற சோள விதை போல காட்சியளிக்கும். சோரி வெள்ளை முதல் சாம்பல் அல்லது பழுப்பு நிறத்துடன், சில சமயங்களில் கோடுகள் மேற்பொருந்தியதாக காணப்படும். பெரும்பாலான நேரங்களில், தலைப்பகுதி மட்டும் பகுதியளவில் கரிப்பூட்டை அடைந்திருக்கும். சில வேளைகளில், தானியங்களின் கிளைகள் முழுவதும் அழிந்துவிடக்கூடும், இதனால் சோரியினால் சூழப்பட்ட வெறும் மைய தண்டுப்பகுதி மட்டுமே எஞ்சியிருக்கும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

மன்னிக்கவும், இந்த நோய்க்கு தற்போது எங்களிடம் எவ்வித சிகிச்சை முறைகளும் இல்லை. எங்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதன் மூலம் இதுகுறித்து நீங்கள் தெரிந்துகொள்ளலாம். இந்த நோயினைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் ஏதேனும் இருந்தால் எங்களுடன் பகிர்ந்துகொண்டு பிறருக்கும் உதவவும். உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். விதைச் சிகிச்சையினை கார்பாஃப்க்ஸின் (ஒரு கிலோ விதைகளுக்கு 2 கிராம் வீதம்) கொண்டு செய்வதன் மூலம் நோய் தாக்கத்தினை ஒடுக்க முடியும். ப்ரோபிகோனஸோல், மானெப் அல்லது மான்கோசெப் போன்றவற்றினைக் கொண்டு இலைவழித் தெளித்தல் முறையில் சிகிச்சை செய்தல் திருப்தியளிக்கும் வகையிலான முடிவுகளைத் தரும் என ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

இது எதனால் ஏற்படுகிறது

இந்நோயினால் பாதிக்கப்பட்ட உட்கருவினை பயிரிடும்போது, பிற வித்துக்கள் பயிருடன் சேர்ந்து வளரத் தொடங்கும். மேலும் இவை நாற்றுகளுடன் சேர்ந்து வளர்ந்து, வித்துக்களை உற்பத்தி செய்து, நோய் தாக்கத்தினை அதிகப்படுத்துகின்றன. இந்த வித்துக்கள் காற்றின் மூலம் ஒரு பயிரிலிருந்து பிற பயிருக்கு பரவுகிறது. அங்கு அந்த பயிருக்குள் எவ்வித சேதத்தினையும் ஏற்படுத்தாமல் முளைத்து, பயிர்கள் முழுவதும் பரவுகிறது. பூக்கள் உருவாகும்போது இதன் முதன்மை அறிகுறிகள் தென்பட ஆரம்பிக்கும். அதேநேரத்தில் பூஞ்சை அமைப்புகள் படிப்படியாக விதை கருவினை இடப்பெயர்க்கும் மற்றும் அவற்றை சுற்றி படலங்கள் வளரும். முதிர்ச்சியடைந்ததும், இந்த படலம் வெடித்து, புதிய வித்துக்கள் வெளிவந்து பிற விதைகளை அல்லது மண்ணினை பாதிக்கின்றன. வித்துக்கள் முளைத்தல் மற்றும் பயிர்களின் மீதான நோய்த்தாக்கம் ஏற்படுவதற்கான உகந்த வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் ஆகும்.


தடுப்பு முறைகள்

  • தடுப்புவகை அல்லது சகிப்புத் தன்மை கொண்ட பயிர்கள் கிடைத்தால் அவற்றை பயிரிடவும்.
  • 15 டிகிரி செல்சியஸ் முதல் 32 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பநிலையில், விதைகளை பயிரிட்டால் அது நோய்த் தாக்கத்தினைத் தடுக்கும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க