மக்காச்சோளம்

மக்காச்சோளத்தின் ஜிப்பெரெல்லா தண்டு அழுகல் நோய்

Gibberella zeae

பூஞ்சைக்காளான்

5 mins to read

சுருக்கமாக

  • நோய்பாதித்த மக்காச்சோளத்தின் காதுகள் சுருங்கி, அதன் நுனி செந்நிறமாகும்.
  • இலைகள் மந்தமான சாம்பல் கலந்த பச்சை நிறமாக மாறி, வாடிவிடும்.
  • தண்டின் மெல்லிய திசுக்கள் துண்டாகி, இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிறமாக மாறும்.
  • வேர்கள் அழுகி, தாவரங்கள் படிப்படியாக இறந்துவிடக்கூடும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

மக்காச்சோளம்

அறிகுறிகள்

மக்காச்சோளத்தில், இந்த நோயானது காது மற்றும் தண்டுகளில் ஏற்படும் அறிகுறிகளின் மூலம் வகைப்படுத்தப்படுகிறது. ஆரம்ப அறிகுறிகளானது சோளக்காதுகளின் நுனியில் வெள்ளைப் பூஞ்சையாக பெரும்பாலும் தென்படுகிறது, இது காலப்போக்கில் இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிறமாக மாறும். நோய் அதிகரிக்கையில், இந்த நிறமாற்றமானது காதுகளின் எஞ்சிய பகுதிகளுக்கும் பரவும், பெரும்பாலும் உமி மற்றும் தானியங்களுக்கு இடையே பரவக்கூடும். பாதிக்கப்பட்ட சோளக்காதுகள் முழுவதுமாக அழுகக்கூடும். சீக்கிரம் பாதிக்கப்பட்டத் தாவரங்களின் இலைகள் மந்தமான சாம்பல் கலந்த பச்சை நிறமாகி, வாடத் தொடங்கிவிடும். கீழ்ப்புற கணுவிடைப்பகுதிகள் மென்மையாகி, தோல் நிற அல்லது கரும் பழுப்பு நிறமாகும். பின்னர், மேற்புறத்தில் கருப்பு நிறமுள்ள புள்ளிகள் உருவாகும், அவற்றை விரல்நகங்களைப் பயன்படுத்தி எளிதாக சுரண்டி விடலாம். தண்டுகளை நீள வாக்கில் வெட்டினால், துண்டாக்கப்பட்ட, இளஞ்சிவப்பு அல்லது சிவப்புநிற நிறமாறிய திசுக்கள் காணப்படும். முக்கிய வேர்கள் படிப்படியாக அழுகி, பழுப்பு நிறமாகி, உடையக்கூடியதாக ஆகிவிடும். முதிர்ச்சி அடைவதற்கு முன்னரே தாவரங்கள் இறந்து விடக்கூடும் அல்லது சாய்ந்துவிடக்கூடும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

தற்போதைக்கு ஜிப்பெரெல்லா ஜியேவுக்கு எதிரான எந்த உயிரியல் கட்டுப்பாட்டு நடைமுறைகளும் இல்லை. தயவுசெய்து உங்களுக்கு ஏதாவது தெரிந்தால் எங்களுக்குத் தெரிவிக்கவும். ஏதேனும் நோய்ப்பூச்சிகளை விதைகளில் இருந்து அகற்றுவதற்கு வெப்ப நீர் குளியல் சிகிச்சையைப் பயன்படுத்தலாம். உங்கள் தேவைகளுக்கு சிறப்பாக பொருந்தக்கூடிய வெப்பநிலை மற்றும் நேரங்கள் குறித்து தயவு செய்து சரிபார்த்துக் கொள்ளவும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். மக்காச்சோளத்தின் ஜிப்பெரெல்லா தண்டு அழுகல் நோயைச் சமாளிக்க தற்போதைக்கு எந்த பூஞ்சைக் கொல்லிகளும் இல்லை. விதைகளை பூஞ்சைக்கொல்லிகள் கொண்டு சிகிச்சை அளிக்கலாம், குறிப்பாக அந்தப்பகுதி ஜிப்பெரெல்லா ஜியேவால் பாதிக்கப்பட்டிருக்கும்போது.

இது எதனால் ஏற்படுகிறது

அறிகுறிகளானது ஜிப்பெரெல்லா ஜியே என்னும் பூஞ்சையால் ஏற்படுகிறது, இது தாவரக் குப்பைகளிலும் மற்றும் விதைகளிலும் கூட குளிர்காலத்தைச் செயலற்ற நிலையில் கழிக்கும். ஈரப்பதமான, வெதுவெதுப்பான வானிலையின்போது வித்துக்கள் உற்பத்தியாகி, காற்று மற்றும் தெளிக்கும் நீர்த்துளி மூலம் பரவும். வித்துக்கள் குஞ்சங்களில் பட்டு, திசுக்களில் குடியேற ஆரம்பிக்கும்போது முதன்மை நோய்த்தொற்று பொதுவாக ஏற்படுகிறது. வேர்கள், தண்டு அல்லது இலைகளில் ஏற்படும் காயங்களும் நோய் ஏற்படுவதற்கான பிற சாத்தியமான ஆதாரங்களாகும். குறிப்பாக பூச்சிகள் மற்றும் பறவைகளும் தீங்கு விளைவிக்கின்றது, ஏனெனில் இது வித்துக்கள் அல்லது விதைகளை மட்டும் எடுத்துச்செல்வதோடு, தாவரத் திசுக்களையும் சேதப்படுத்துகிறது. அரிசி, சோளம், கோதுமை, கம்பு, டிரிட்டிகேல் அல்லது பார்லி போன்ற தானியங்களும் இந்த நோய்க்கிருமியால் பாதிக்கப்படக்கூடும். மற்றத் தாவரங்கள் எந்தவொரு அறிகுறிகளையும் ஏற்படுத்தாமல் நோய்க்கிருமியை பரப்பக்கூடும், இது மேலும் நோய் பரவுவதற்கு மூலமாக இருக்கின்றது.


தடுப்பு முறைகள்

  • இந்த நோய்க்கான அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என வயல்களைத் தொடர்ந்து கண்காணிக்கவும்.
  • நல்ல வலிமையான தண்டுகள் மற்றும் இலை நோய்களுக்கு எதிர்ப்புத் திறன் கொண்ட கலப்பினங்களைத் தேர்ந்தெடுக்கவும்.
  • இடைவெளி மற்றும் விதை விகிதங்கள் குறித்து வழங்கப்பட்ட பரிந்துரைகளைப் பின்பற்றவும்.
  • மண்ணில் உள்ள தழைச்சத்து/சாம்பல்சத்து ஆகியவற்றின் சமநிலையை முறையாக பராமரிக்க, மண் சோதனைகளைப் பயன்படுத்தவும் மற்றும் உரங்கள் குறித்த பரிந்துரைகளைப் பின்பற்றவும்.
  • தாவர அழுத்தத்தைக் குறிப்பாக, மகரந்த சேர்க்கைக்குப் பிறகும், தானியங்கள் நிரப்பப்படும்போதும் குறைக்கவும்.
  • வயலில் பணிசெய்யும் போது தாவரங்களுக்கு இயந்திர சேதங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கவும்.
  • தாவரக் குப்பைகளை நிலத்தில் புதைத்து, அவற்றை அழித்துவிடவும்.
  • எளிதில் பாதிக்காத பயிர்களைக் கொண்டு பயிர்ச் சுழற்சியைத் திட்டமிடவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க