அரிசி

அரிசியின் போமா சோர்கினா நோய்

Epicoccum sorghinum

பூஞ்சைக்காளான்

5 mins to read

சுருக்கமாக

  • வளரும் கதிர்களில் நீர் தோய்த்த புண்கள் காணப்படும்.
  • உமியடிச் செதில்களில் (உமி கருகல்) வெள்ளைநிற மையப்பகுதியைச் சுற்றி கரும் பழுப்பு விளிம்புகளுடன் நீள்வடிவ அல்லது ஒழுங்கற்ற புள்ளிகள் காணப்படும்.
  • கடுமையான சந்தர்ப்பங்களில், அதிகம் நோய் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் கொண்ட அரிசி வகைகளில் 95% வரையிலான கதிர்கள் பாதிக்கக்கூடும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

அரிசி

அறிகுறிகள்

இந்த நோயின் முதல் அறிகுறிகளானது, வளரும் கதிர்களில் காணப்படும் நீர் தோய்த்த புண்கள் ஆகும். இந்தப் புண்கள் பின்னர் பெரிதாகி மற்றும் வெள்ளை நிற மையப்பகுதியைச் சுற்றி கரும்பழுப்பு நிற விளிம்புகளுடன் நீள் வட்ட வடிவ அல்லது ஒழுங்கற்ற புள்ளிகளாக உருவாகும். கதிர்கள் முளைப்பதற்கு முன்னர் இந்த நோய்த்தொற்று ஏற்பட்டால், கதிர்கள் அழுகி மற்றும் இறுதியில் இறந்து விடக்கூடும். பூ பூத்த பின்னர் இந்த அறிகுறிகள் தோன்றினால், கதிர்களில் தானியங்கள் ஓரளவு மட்டுமே நிரப்பப்பட்டு மற்றும் உமியடிச் செதில்களில் (உமி கருகல்) ஒழுங்கற்ற புண்கள் காணப்படும். கடுமையான சந்தர்ப்பங்களில், அதிகம் நோய் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் கொண்ட அரிசி வகைகளில் (உதாரணமாக சீனா போரோ) 95% வரையிலான கதிர்கள் பாதிக்கக்கூடும். கடுமையான மழையுடன் கூடிய புயல் காற்று, வெள்ளம் நிறைந்த வயல்கள் மற்றும் பிரகாசமான சூரிய ஒளி ஆகியவை இந்த நோயின் சாதகமான சூழலுக்கான காலங்களாகும். மேட்டுப்பகுதி அரிசி வகைகளில், உமி கருகல் சிறிய பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது, ஆனால் சோதிக்காமல் விட்டால் தொற்றுநோய் விகிதாச்சாரத்தை அடையக்கூடும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

இது நாள் வரை, இந்த நோய் ஏற்படுவதை குறைப்பதற்கும் மற்றும் இதன் தீவிரத்தன்மையை குறைப்பதற்கும் உயிரியல் கட்டுப்பாடு எதுவும் இல்லை. உங்களுக்கு ஏதேனும் தெரிந்தால், எங்களுக்குத் தெரியப்படுத்தவும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்க பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். பூஞ்சைக் கொல்லிகள் விதைகளுக்குச் சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படுகிறது மற்றும் சில அரிசி வகைகளில் பி.சோர்கினாவால் இயற்கையாகப் பாதிக்கப்பட்ட விதைகளில் இந்தத் தயாரிப்புகள் சிறந்த கட்டுப்பாட்டை வழங்குகிறது. இப்ரோடியோன் மற்றும் கேப்டன் ஆகியவற்றையும் பயன்படுத்தலாம், ஆனால் 100% செயல்திறன் கொண்டவை அல்ல.

இது எதனால் ஏற்படுகிறது

இந்த நோய்க்கான அறிகுறிகள் விதை மற்றும் காற்று மூலம் பரவக்கூடிய எபிகோக்கம் சோர்கி என்னும் பூஞ்சையால் ஏற்படுகிறது, இது முன்னதாக போமா சோர்கினா என அழைக்கப்படுகிறது. இந்த சந்தர்ப்பவாத நோய்க்கிருமி, பலவீனமான அல்லது அழுத்தத்தில் இருக்கும் தாவரங்களைத் தாக்குகிறது. இது முக்கியமாக சோளம், தினை, கரும்பு மற்றும் அரிசி (கிராமினி) போன்ற பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த தாவரங்களுடன் தொடர்புடையதாக இருந்தாலும், உலகெங்கிலும் உள்ள பரந்த அளவிலான புரவலன்களையும் இது பாதிக்கக்கூடும். அக்கேசியா, அலோ, சிட்ரஸ் மற்றும் யூகலிப்டஸ் போன்ற சில வகைகள் இந்த மாற்று புரவலன்களுள் அடங்கும். இந்த பூஞ்சைப் பயிர் கழிவுகளில் உயிர் வாழ்கிறது, இது ஆப்ரிக்காவில் ஓலைக்கூரைகள் மற்றும் விலங்குகளின் உணவாகப் பயன்படுத்தப்படுவதாக விவரிக்கப்படுகிறது. இது மைகோடாக்சின் என்னும் நச்சுப்பொருளை உற்பத்தி செய்கிறது, இது தாவரங்களில் அறிகுறிகளை தூண்டுவதோடு மற்றும் மனிதர்கள் மற்றும் விலங்குகளின் ஆரோக்கியத்தையும் பாதிக்கக் கூடும். மனிதர்களுள் காணப்படும் அறிகுறிகளுள் தோல்களில் சிவந்த புண்கள், வாய்ப்புண் ஆகியனவும் அடங்கும் மற்றும் சில சந்தர்ப்பங்களில் புற்றுநோயும் ஏற்படக்கூடும்.


தடுப்பு முறைகள்

  • நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட தாவர வகைகள் கிடைக்கப்பெற்றால் அவற்றைப் பயன்படுத்தவும்.
  • வயல்களில் நல்ல வடிகால்கள் அமைந்திருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க