சோயாமொச்சை

தண்டு மற்றும் வேர் அழுகல் நோய்

Phytophthora sojae

பூஞ்சைக்காளான்

5 mins to read

சுருக்கமாக

  • பாதிக்கப்பட்ட பயிர்கள் நீண்ட பழுப்பு நிறச் சிதைவுகளை வேரிலிருந்து தண்டின் நடுப்பகுதி வரை உருவாக்கும்.
  • இலைகள் மஞ்சள் நிறமாகும் மற்றும் தளர்வுற்றுபோகும், தண்டிலிருந்து உதிராது ஆனால் இலைகள் இறந்துவிடும்.
  • இறுக்கமான மண், நீர்த்தேக்கத்தினை உருவாக்கும் பகுதிகள் மற்றும் அதிகளவிலான மழைப்பொழிவு போன்றவை நோய்க்குச் சாதகமானவை ஆகும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

சோயாமொச்சை

அறிகுறிகள்

ஆரம்ப நிலை வளர்ச்சிகளில், நோய்க்குக் காரணமான பூஞ்சைகளால் விதை அழியும் அல்லது விதைகள் முளைத்தலுக்குப் பிறகு நாற்று அழுகிவிடும். பயிரின் அடுத்த வளர்ச்சிகாலத்தில், பாதிக்கப்பட்ட பயிர்கள் நீண்ட பழுப்பு நிறச் சிதைவுகளை வேரிலிருந்து தண்டின் நடுப்பகுதி வரை உருவாக்கும். முக்கிய வேர்கள் மற்றும் தண்டுகளின் உள்புறத் திசுக்களில் பாதிப்புகள் ஏற்படுவதால், அதன் விளைவாக, இலைகள் மஞ்சள் நிறமாகும் மற்றும் தளர்வுற்றுப்போகும், தண்டிலிருந்து உதிராது ஆனால் இறுதியில் இலைகள் இறந்துவிடும். இறுக்கமான மண், நீர்த்தேக்கத்தினை உருவாக்கும் பகுதிகள் மற்றும் அதிகளவிலான மழைப்பொழிவிற்குப் பிறகு ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்குப் பிறகு முதன்மை அறிகுறிகள் தென்படும். எளிதில் பாதிக்கப்படும் பயிர் வகைகளில் அதிகளவிலான இழப்புக்களை இந்த நோய் கொடுக்கும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

மன்னிக்கவும், பைடோப்த்ரா சோஜே எனும் இப்பூஞ்சைகளுக்கு எதிராக தற்போது எங்களிடம் எவ்வித மாற்றுப் சிகிச்சை முறைகளும் இல்லை.

இரசாயன கட்டுப்பாடு

எப்போதும் உயிரியல் முறைப்படி செடிகளுக்குச் சிகிச்சையளிப்பதை, பாதுகாக்கும் வழிமுறைகளுடன் சேர்த்துக் கையாளவும். பைடோப்த்ரா சோஜே பூஞ்சைகளை அழிக்க ஒரே வேதியியல் வழி பூஞ்சைக் கொல்லிகளைப் பயன்படுத்தி விதைச் சிகிச்சை செய்வது மட்டுமே. மெஃபெனோக்ஸாம் மற்றும் மெடாலக்ஸைல் போன்றவற்றை விதைச் சிகிச்சைகளுக்குப் பயன்படுத்தலாம். சிலவேளைகளில் இந்தப் பூஞ்சைக்கொல்லிகளின் எதிர்ப்புத்திறன் உற்றுநோக்கப்பட்டது. காப்பர் ஆக்ஸிகுளோரைடுடன் (3 கி/லி நீர்) மண் மருந்தூட்டலை அடிக்கடி உயிர் எதிரி (ஸ்ட்ரெப்டோசைக்ளின்) உடன் இணைந்து செயல்படுத்துவது வேலை செய்யும்.

இது எதனால் ஏற்படுகிறது

பைடோப்த்ரா சோஜே எனும் மண் வழிப் பரவும் பூஞ்சைகள், விதைகள் அல்லது பயிரின் எஞ்சிய பாகங்களில் பல ஆண்டுகள் உயிர்வாழும், குளிர்ந்த அல்லது உறைவு நிலையிலும் கூட இவை உயிர்வாழும். சூழ்நிலைகள் இவற்றின் வளர்ச்சிக்கு ஏதுவானதாக அமைந்தால் (அதிக மண் குளிர்ந்தநிலை மற்றும் 25-30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை), பருவகாலம் முழுவதும் வேர் வழியே பயிர்களை இப்பூஞ்சைகள் பாதிக்கும். அதிகமான மழைப்பொழிவின் காரணமாகவே இதன் முதல் அறிகுறிகள் ஏற்படுகின்றன. பாதிக்கப்பட்ட பயிர்கள் தொடர்ச்சியாக அல்லாமல் வெவ்வேறு பகுதிகளில் அமைந்துள்ளன அல்லது தாழ்ந்த தரிசு பகுதிகளில் அமைந்துள்ளன அல்லது சரியான வடிகால் முறையில் அமையாத பகுதிகளில் அமைந்துள்ளன.


தடுப்பு முறைகள்

  • சான்றளிக்கப்பட்ட, நோய்க்காரணி அல்லாத விதைகளை வாங்கவும்.
  • தடுப்புவகை அல்லது சகிப்புத் தன்மை கொண்ட பயிர்களைப் பயிரிடவும்.
  • வடிகால் முறையினைச் சரியாக அமைத்து நீர்த்தேக்கம் ஏற்படுவதைத் தவிர்க்கவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க