மக்காச்சோளம்

ஃபுசேரியம் சோளக்காது அழுகல் நோய்

Fusarium verticillioides

பூஞ்சைக்காளான்

5 mins to read

சுருக்கமாக

  • இந்த நோய் பொதுவாகப் பருவகாலத்தின் பிற்பகுதியில் மற்றும் தானியங்களைச் சேமித்து வைக்கும்போது ஏற்படும்.
  • சில தானியங்கள் வெள்ளை, இளஞ்சிவப்பு வண்ணப் பூஞ்சைகளைக் கொண்டிருக்கும்.
  • தானியங்களின் மேல்பகுதியில் ஆரை அமைப்புகளைத் தொடர்ந்து வெளிர் பழுப்பு அல்லது பழுப்பு நிறக் கோடுகள் காணப்படும்.
  • முழு சோளக்காதுகளும் உலர்ந்து மற்றும் தானியங்கள் முழுவதும் அழுகிப்போகும்.
  • பூஞ்சைகள் நச்சுக்களை உற்பத்தி செய்து, சோளக்காதுகளை உண்ணமுடியாமல் ஆக்குகிறது.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

மக்காச்சோளம்

அறிகுறிகள்

மக்காசோளத்தின் வகை, சுற்று சூழல் மற்றும் நோயின் தீவிரத்தைப் பொறுத்து அறிகுறிகள் மாறுபடும். இந்த நோய் பொதுவாகப் பருவகாலத்தின் பிற்பகுதியில் மற்றும் தானியங்களை சேமித்து வைக்கும்போது ஏற்படும். ஆரோக்கியமாகக் காணப்படும் தானியங்களுக்கு மத்தியில், பாதிக்கப்பட்ட தானியங்கள் வெள்ளை, இளஞ்சிவப்பு வண்ணப் பூஞ்சைகளைக் கொண்டிருக்கும். தானியங்களில் நிறமாற்றமும் காணப்படும். இவை வெளிர் பழுப்பு அல்லது பழுப்பு நிறமாகவும் மாறக்கூடும். தானியங்களின் மேல்பகுதியில் ஆரை அமைப்புகளைத் தொடர்ந்து நிறமாற்றம் காணப்படும். சூழ்நிலைகள் (வெதுவெதுப்பான மற்றும் வறண்ட காலநிலை, பூச்சிகள் இருப்பது) நோய் வளர்ச்சிக்குச் சாதகமானதாக இருந்தால், சோளக்காதுகள் முழுவதும் பூஞ்சைகளால் காலனித்துவப்படுத்தப்பட்டு, ஏராளமான பூஞ்சை வளர்ச்சி காணப்படும். முழுச் சோளக்காதுகளும் உலர்ந்து மற்றும் தானியங்கள் முழுவதும் அழுகிப்போகும். தானியங்களின் விளைச்சல் குறையும். பூஞ்சைகள் நச்சுக்களை உற்பத்தி செய்து, சோளக்காதுகளை உண்ணமுடியாமல் ஆக்குகிறது.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

பாக்டீரியா சூடோமோனாஸ் ஃப்லோரோசென்ஸ் என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட கரைசல்களை விதைச் சிகிச்சைகளாக பயன்படுத்தலாம், மேலும் நோய் ஏற்படுதலைக் குறைப்பதற்கு மற்றும் நச்சுக்களின் உற்பத்தியைக் குறைப்பதற்கு இவற்றைத் தெளிப்பான்களாகப் பயன்படுத்தலாம்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். பருவ காலத்தின் ஆரம்பத்தில் பயன்படுத்தப்படும் பூஞ்சைக் கொல்லிகள் சோளக்காதுகளின் நோய்த்தொற்றை குறைக்கக் கூடும். சோளக்காதுகளில் சேதங்கள் ஏற்படும் என்பதால், இந்த நோயை எதிர்த்துப் போராட பூஞ்சைக்கொல்லிகளின் பயன்பாடு மிகவும் பயனுள்ள வழி கிடையாது. சோளக்காதுகளைச் சேதப்படுத்தும் நோய் பூச்சிகளையும் மற்றும் பூஞ்சைகளுக்கு சாதகமாக இருப்பவற்றை கட்டுப்படுத்துவதையும் கருத்தில் கொள்ளுங்கள். புரோபிகோனஸோல் 1 மிலி/லி அளவில் தானிய கரித்தல் பருவத்தில் பூஞ்சைகளைக் கட்டுப்படுத்தலாம்.

இது எதனால் ஏற்படுகிறது

இந்த நோய்க்கான அறிகுறிகள் ஃபுசேரியம் வெர்டிசிலியாய்ட்ஸ் என்னும் பூஞ்சையால் முக்கியமாக ஏற்படுகிறது, ஆனால் ஃபுசேரியத்தின் பிற இனங்கள் இதே போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடும். இது விதைகள், பயிர் கழிவுகள் அல்லது புல் போன்ற மாற்றுப் புரவலன்களில் வாழும். வித்துக்கள் காற்றின் மூலமாக பெரிதும் பரவுகிறது. ஆலங்கட்டி மழை அல்லது பூச்சிகள் மற்றும் பறவைகளினால் ஏற்படும் உண்ணும் சேதங்கள் அல்லது வயல் பணியின்போது ஏற்படும் சேதங்கள் போன்றவற்றால் ஏற்படும் காயங்களின் வழியாக இந்த பூஞ்சை சோளக்காதுகளுக்குள் நுழைகிறது. நுழைவு வாயிலில் இருந்து படிப்படியாக முன்னேறி தானியங்களில் குடியேறி, உற்பத்தி செய்யும். மாற்றாக, இது வேர்கள் வழியாக தாவரங்களில் குடியேறி மற்றும் முறையான வளர்ச்சியின் மூலம் தாவரங்களின் மேல்பகுதிக்குச் செல்லும். தாவரங்கள் பல்வேறு சுற்றுச்சூழல் நிலைமைகளின் கீழ் பாதிக்கப்படலாம், ஆனால் வெதுவெதுப்பான மற்றும் வறண்ட சூழல் மற்றும் தாவரங்கள் பூக்கும் நிலையை அடைந்தவுடன் இந்த அறிகுறிகள் குறிப்பாகக் கடுமையானதாக இருக்கும். இது மக்காச்சோளத்திற்கான பொதுவான பூஞ்சை ஆகும்.


தடுப்பு முறைகள்

  • உங்கள் பகுதியில் கிடைக்கும் சகிப்புத்தன்மை அல்லது எதிர்ப்புத் திறன் கொண்ட தாவர வகைகளைப் பயன்படுத்தவும்.
  • உள்ளூர் வானிலைச் சூழலுக்கு ஏற்ற தாவரங்களை விதைக்க வேண்டும்.
  • வயலில் அடர்த்தியாக தாவரங்களின் நடுதலைத் தவிர்க்கவும்.
  • தாவர வளர்ச்சியின் பிந்தைய நிலைகளில் நல்ல முறையில் உரமிடுதலை உறுதிப்படுத்தவும்.
  • நச்சுக்கள் உற்பத்தி செய்யப்படுவதைத் தவிர்க்க பாதிக்கப்பட்ட தானியங்களைச் சுத்தம் செய்யவும் மற்றும் தனியாகச் சேமித்து வைக்கவும்.
  • உங்கள் சேமிப்பு வசதிகளை முழுமையாகச் சுத்தம் செய்யவும்.
  • கதிரடிக்கும் தரை அதிகப்படியான ஈரமாவதைத் தவிர்க்க, அறுவடைக்கு முன்னர் வானிலை முன்னறிவிப்பினை அறிந்துகொண்டு பின்னர் செயல்படுத்தவும்.
  • அறுவடைக்குப்பின் சோளக்காதுகளைச் சேதப்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.
  • குறைவான ஈரப்பதம் மற்றும் குறைந்த வெப்பநிலையில் தானியங்களைச் சேமித்து வைக்கவும்.
  • அறுவடைக்குப்பின் தாவரக் கழிவுகளை உழுது மற்றும் புதைத்து விட வேண்டும்.
  • குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்காவது புரவலன் அல்லாத தாவர வகைகளைக் கொண்டு பயிர் சுழற்சி செய்யவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க