மக்காச்சோளம்

வட இந்தியச் சோளம் இலைப் புள்ளி நோய்

Cochliobolus carbonum

பூஞ்சைக்காளான்

5 mins to read

சுருக்கமாக

  • நீட்சியடைந்து நீள் வட்ட வடிவ அல்லது வட்ட வடிவிலான வெளிர் பழுப்பு நிறப் புண்கள், பெரும்பாலும் இருண்ட விளிம்புகளால் சூழப்பட்டு, கீழ்ப்புறப் பகுதியில் உள்ள இலைகளில் காணப்படும்.
  • சில நேரங்களில், இந்தப் புண்கள் இலை உறைகளிலும் மற்றும் சோளக்காதுகளை மூடி இருக்கும் உமியிலும் காணப்படும்.
  • சிலநேரங்களில் தானியங்களில் கருப்புப் பூஞ்சைகளும் காணப்படும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

மக்காச்சோளம்

அறிகுறிகள்

நோய்க்கிருமியின் கடினம், தாவரங்களின் நோய் ஏற்புத் திறன், மற்றும் சுற்றுச்சூழல் நிலைமைகள் இவற்றைப் பொறுத்து இந்த நோய்க்கான அறிகுறிகள் சற்று மாறுபடுகிறது. முதல் அறிகுறிகளானது, பட்டு நூல்கள் எழுச்சியின் போது அல்லது முழுவதுமாக முதிர்ச்சியடைந்த பிறகு, பொதுவாகத் தாவர வளர்ச்சியின் பிந்தைய நிலைகளில் தோன்றும். பெரும்பாலும் இருண்ட விளிம்புகளால் சூழப்பட்ட, நீளமானது முதல் நீள் வட்ட வடிவ அல்லது வட்ட வடிவ வெளிர் பழுப்பு நிறப் புள்ளிகள் கீழ்ப்புற இலைகளில் காணப்படும். நோய்க் காரணியின் வலிமை மற்றும் பயன்படுத்தும் தாவரங்களின் வகையைப் பொறுத்து புண்களின் நீளம் மற்றும் அகலம் இருக்கும். சில நேரங்களில், இந்தப் புண்கள் இலை உறைகளிலும் மற்றும் சோளக்காதுகளை மூடி இருக்கும் உமியிலும் காணப்படும். சிலநேரங்களில் தானியங்களில் கருப்புப் பூஞ்சைகளும் காணப்படும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

இங்கே குறிப்பிடப்பட்டுள்ள பெரும்பாலான சிகிச்சைகள் சிறிய அளவுகளில் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. இந்திய பேல் (ஏஜில் மர்மெலோஸ்) ஆகியவற்றின் நறுமண எண்ணெய், குறைந்தது ஆய்வக சோதனைகளில், ஹெல்மிந்தோஸ்போரியம் கார்போனம் என்பவற்றுக்கு எதிராக நன்கு செயல்படுகிறது. சில வகை மக்காச்சோளங்களின்(நோய் எதிர்ப்பு திறன் மற்றும் சகிப்பு திறன் கொண்டவை) இலைச் சாறுகளில் இருந்து பெறப்படும் தனிப்பட்ட பல்வேறு கலவைகள் பூஞ்சைக்கு நஞ்சாக இருக்கும். தண்டு அழுகிய பாதிக்கப்பட்ட மக்காச்சோளத்தின் தக்கையிலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட பூஞ்சை, சி.கார்போனம் உட்பட அறியப்பட்ட தாவர நோய்க்கிருமிகள் பூஞ்சைகளில் ஒட்டுண்ணிகளாகக் காணப்படுகிறது.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். பாதிப்புக்குள்ளாகும் தாவரங்களில், பட்டு நூல் உருவாகும் போது இலைத் தொகுதி பூஞ்சைக் கொல்லிகளின் பயன்பாடு தேவைப்படும். உதாரணமாக, 8-10 நாட்கள் இடைவெளியில் மான்கோசெப் @ 2.5 கிராம் / லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிப்பது நோய்க்காரணிக்கு எதிராக சிறப்பான பலன் தரும்.

இது எதனால் ஏற்படுகிறது

வட இந்தியச் சோள இலைப் புள்ளி நோய் ஹெல்மின்தோஸ்போரியம் கார்போனியம் என்னும் பூஞ்சையால் ஏற்படுகிறது, இது மண்ணில் உள்ள சோளக் கழிவுகளில் செயலற்ற நிலையில் குளிர்காலத்தைக் கழிக்கிறது. ஈரப்பதமான காலங்களில் இந்த கழிவுகள் மீது உள்ள வித்துக்கள் நோய்த்தொற்றுக்கு முதன்மை மூலமாகச் செயல்படுகிறது. ஒரு தாவரத்திலிருந்து பிற தாவரத்திற்குப் பரவும் இரண்டாம் நிலை நோய்த் தொற்று காற்று அல்லது மழை மூலம் ஏற்படுகிறது. இந்த நோய் முக்கியமாக விதை உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் தாவரங்களில் உருவாகிறது, அதனால் தான் இது பெரும்பாலும் எதிர்ப்புத் திறன் கொண்ட கலப்பினங்கள் வளர்க்கப்படும் வயல்களில் அரிதான பிரச்சினையாக உள்ளது. மிதமான வெப்பநிலை, ஈரப்பதமான வானிலை மற்றும் அறுவடைக்குப் பிறகு நிலத்தை குறைவாக உழுதல் ஆகியவை இந்த நோய் வளர்ச்சிக்குச் சாதகமாக உள்ளது. தானியங்கள் நிரம்பும் நிலைகளில் இந்த நோய்த்தொற்று ஏற்படுமானால், அது 30 சதவிகிதம் அல்லது அதற்கு அதிகமான விளைச்சல் இழப்பை ஏற்படுத்தலாம்.


தடுப்பு முறைகள்

  • உங்கள் சந்தையில் சகிப்புத்தன்மை அல்லது எதிர்ப்புத் திறன் கொண்ட தாவர வகைகள் கிடைக்கிறதா எனச் சோதிக்கவும்.
  • நோய் வளர்ச்சியைக் கண்காணிக்க, வயல்களை வாரந்தோறும் கண்காணிக்கவும்.
  • மழைப்பொழிவு அல்லது நீர்ப்பாசனத்திற்குப் பின் கவிகைகள் உலர்வதற்கு ஏதுவாக பயிர்களை இடைவெளி விட்டு பயிரிடவும்.
  • பயிர்கள் மண்ணுடன் தொடர்புடன் இருப்பதை உறுதி மண்ணில் தழைக்கூளங்களைப் பயன்படுத்தவும்.
  • களைகளை கட்டுப்படுத்தி கவிகைகளுக்கு தேவையான காற்றோட்டமும், குறைந்த ஈரப்பதமும் கிடைக்கச் செய்யவும்.
  • பயிர்களுக்கு நைட்ரஜன் மற்றும் பொட்டாசியம் உள்ளடக்கங்கள் கொண்ட பொருத்தமான உரங்கள் பயன்படுத்துவதை உறுதி செய்து கொள்ளவும்.
  • பயிர்கள் ஈரமாக இருக்கும்போது நிலத்தில் வேலை செய்வதைத் தவிர்க்கவும்.
  • அதிகமான நோய் ஏற்புத் திறன் கொண்ட தாவர வகைகளைப் பயன்படுத்தினால், புரவலன் அல்லாத பயிர்களான பீன், சோயாபீன் அல்லது சூரிய காந்தி போன்றவற்றினைக் கொண்டு பயிர் சுழற்சி செய்யவும்.
  • அறுவடைக்குப் பிறகு மண்ணை உழுது தாவரக்கழிவுகளைப் புதைப்பதன் மூலம் இவற்றின் எண்ணிக்கையைக் குறைக்க முடியும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க