மக்காச்சோளம்

பேஸ்பேரியா இலைப்புள்ளி நோய்

Phaeosphaeria maydis

பூஞ்சைக்காளான்

5 mins to read

சுருக்கமாக

  • சிறிய, வெளிர் பச்சை முதல் மஞ்சள் நிற வெளிறிய புள்ளிகள் இலைக்கத்திகள் மீது சிதறிக் காணப்படும்.
  • இந்தப் புள்ளிகள் வட்ட அல்லது நீள்சதுரப் புண்களாக வெளிறிய மற்றும் உலர்ந்த மையங்கள் மற்றும் கரும் பழுப்பு நிற ஒழுங்கற்ற விளிம்புகளுடன் உருவாகின்றன.
  • கடுமையான நோய்த் தொற்றுகளில், இவை இணைந்து மற்றும் முழு இலைகளையும் கருகச்செய்து விடும்.
  • பேஸ்பேரியா இலைப் புள்ளி நோய் பொதுவாகப் பருவகாலத்தின் பிற்பகுதியில் ஏற்படும் சிறிய முக்கியத்துவம் வாய்ந்த நோயாகக் கருதப்படுகிறது.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

மக்காச்சோளம்

அறிகுறிகள்

ஆரம்ப அறிகுறிகளானது, சிறிய, வெளிர் பச்சை முதல் மஞ்சள் நிற வெளிறிய புள்ளிகள் இலைக் கத்திகள் மீது சிதறிக் காணப்படும். இந்தப் புள்ளிகள் பின்னர் பெரிதாகி, புள்ளிகள் வட்ட அல்லது நீள்சதுரப் புண்களாக (3 முதல் 20 மிமீ) வெளிறிய மற்றும் உலர்ந்த மையங்கள் மற்றும் கரும்பழுப்பு நிற ஒழுங்கற்ற விளிம்புகளுடன் உருவாகின்றன. கடுமையான நோய்த் தொற்றுகளில், இவை இணைந்து மற்றும் முழு இலைகளையும் கருகச் செய்துவிடும். சிறிய கருப்புப் புள்ளிகள் இலைகளுக்கு அடிப்பகுதியில் இருக்கும் புண்களினுள் காணப்படும். தாவர வளர்ச்சியின் ஆரம்ப நிலையில் நோய்த் தொற்று ஏற்பட்டால் மற்றும் பூப்பதற்கு முன்பு மேல்புற இலைகள் கருகிப்போனால், இது கடுமையான விளைச்சல் இழப்புகளுக்கு வழிவகுக்க கூடும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

மன்னிக்கவும், இன்றுவரை பேஸ்பேரியா இலைப் புள்ளி நோய்க்கு எதிரான எந்த உயிரியல் சிகிச்சைகளையும் நாங்கள் அறியவில்லை. இந்த நோயை எதிர்த்துப் போராட உதவும் வகையில் ஏதாவது ஒன்றை நீங்கள் அறிந்திருந்தால் எங்களைத் தொடர்பு கொள்ளவும். உங்களிடமிருந்து செய்தியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். மான்கோசெப் மற்றும் பைராகிளோஸ்ட்ரோபின் போன்ற பூஞ்சைக் கொல்லிகளை நோயைக் கட்டுப்படுத்த இலைகளின் மீது தெளிக்கலாம்.

இது எதனால் ஏற்படுகிறது

இந்த நோய் பேஸ்பேரியா மேடிஸ் என்னும் பூஞ்சையால் ஏற்படுகிறது, இது பயிர்க் கழிவுகளில் செயலற்ற நிலையில் இருக்கும். சாதகமான சூழ்நிலையில், இதன் வித்துக்கள் புதிய தாவரங்களுக்கு மழைத்துளிகள் மற்றும் காற்று மூலம் பரவுகின்றன. இது புதிய இலைகளில் முளைத்து மற்றும் இரண்டாம் நிலை நோய்த்தொற்றை ஆரம்பமாக்குகிறது. அதிகமான மழைப்பொழிவு மற்றும் உயர் ஈரப்பதம் (70% க்கு மேல்), அவற்றுடன் சேர்ந்து ஒப்பீட்டளவில் இரவில் குறைவான வெப்பநிலை (சுமார் 15° செல்சியஸ்), நோய் வளர்ச்சிக்கு ஆதரவாக உள்ளது. இந்தச் சூழ்நிலைகள் அதிகமான உயரத்தில் பரவலாக உள்ளன. இந்த நோய் தாவரங்களின் உற்பத்தி திறன் மற்றும் விளைச்சலை குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் மட்டுமே பாதிக்கும். பொதுவாக, பேஸ்பேரியா இலைப் புள்ளி நோய் பருவகாலத்தின் பிற்பகுதியில் ஏற்படும் சிறிய முக்கியத்துவம் வாய்ந்த நோயாகக் கருதப்படுகிறது.


தடுப்பு முறைகள்

  • நோய் எதிர்ப்புத்திறன் கொண்ட தாவர வகைகள் கிடைக்கப்பெற்றால் அவற்றைப் பயன்படுத்தவும்.
  • இந்த நோயைப் பரப்ப உதவும் கால நிலைகளைத் தவிர்க்க சீக்கிரமாக அல்லது தாமதமாக நடவு செய்யவும்.
  • அறுவடைக்குப்பிறகு, ஆழமாக தோண்டி மற்றும் பயிர்க் கழிவுகளை புதைக்கவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க