மற்றவை

செப்டோரியா இலைப் புள்ளி நோய்

Septoria lycopersici

பூஞ்சைக்காளான்

5 mins to read

சுருக்கமாக

  • அடர் பழுப்பு நிற ஓரங்களுடன் கூடிய, சிறிய சாம்பல் நிற வட்டப் புள்ளிகள் முதிர்ந்த இலைகளின் அடிப்புறத்தில் காணப்படும்.
  • அவற்றின் மையத்தில் கருப்புப் புள்ளிகள் காணப்படும்.
  • இலைகள் சற்று மஞ்சள் நிறத்துடன், வாடிப்போன தோற்றத்துடன் இருக்கும், மேலும் இவை உதிர்ந்துவிடக்கூடும்.
  • தண்டுகளும் பூக்களும் கூட பாதிக்கப்படலாம்.

இதிலும் கூடக் காணப்படும்


மற்றவை

அறிகுறிகள்

முதிர்ந்த பாகங்களில் இருந்து வளரும் பாகங்களுக்கு அறிகுறிகள் பரவும். அடர் பழுப்பு நிற ஓரங்களுடன் கூடிய, நீர் தேங்கிய சிறிய சாம்பல் நிற வட்டப் புள்ளிகள் முதிர்ந்த இலைகளின் அடிப்புறத்தில் காணப்படும். இந்நோயின் பிந்தைய நிலையில், புள்ளிகள் பெரிதாகி ஒன்றிணையும் மற்றும் அவற்றின் மையத்தில் கருப்புப் புள்ளிகள் காணப்படும். இதே போன்று அமைப்புகள் தண்டுகள் மற்றும் பூக்களிலும் காணப்படும், ஆனால் கனிகளில் அவ்வளவாக இது காணப்படுவதில்லை. அதிகம் பாதிக்கப்பட்ட இலைகள் சற்று மஞ்சள் நிறத்துடன், வாடிப்போன தோற்றத்துடன் இருக்கும், மேலும் இவை உதிர்ந்துவிடக்கூடும். இந்த உதிர்தல் காரணமாக சூரிய வெப்பம் கனிகளில் அதிகரிக்கும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

போர்டெஃக்ஸ் கலவை, காப்பர் ஹைட்ராக்ஸைடு, காப்பர் சல்ஃபேட் அல்லது காப்பர் ஆக்ஸிகுளோரைடு சல்ஃபேட் போன்ற காப்பரை அடிப்படையாகக் கொண்ட பூஞ்சைக் கொல்லிகளைப் பயன்படுத்தி நோய்க்காரணிகளைக் கட்டுப்படுத்தலாம். 7 முதல் 10 நாட்கள் இடைவெளியில் பருவக்காலம் முழுவதும் இவற்றைப் பயன்படுத்தலாம். பூச்சிக்கொல்லி அட்டைச்சீட்டில் பட்டியலிடப்பட்டுள்ள அறுவடைக் கட்டுப்பாடுகளைப் பின்பற்றவும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். மானேப், மான்கோசெப், குளோரோதலோனில் போன்றவற்றைக் கொண்ட பூஞ்சைக்கொல்லிகளைப் பயன்படுத்தி செப்டோரியா இலைப் புள்ளி நோயினைச் சிறப்பாகக் கட்டுப்படுத்தலாம். 7 முதல் 10 நாட்கள் இடைவெளியில், குறிப்பாக பூப்பூக்கும் மற்றும் காய்க்கும் நிலையிலும், மற்றும் பருவ காலம் முழுவதும் இவற்றைப் பயன்படுத்தலாம். பூச்சிக்கொல்லி அட்டைச்சீட்டில் பட்டியலிடப்பட்டுள்ள அறுவடைக் கட்டுப்பாடுகளைப் பின்பற்றவும்.

இது எதனால் ஏற்படுகிறது

செப்டோரியா இலைப் புள்ளி உலகம் முழுவதும் ஏற்படக் கூடிய நோய்களுள் ஒன்று மற்றும் இது செப்டோரிய லைகோபெர்சிகி எனும் பூஞ்சைகளால் ஏற்படுகிறது. இந்தப் பூஞ்சைகள் உருளைக் கிழங்கு மற்றும் தக்காளி இன வகைப் பயிர்களை மட்டுமே தாக்கும். 15-27 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பநிலையில், முக்கியமாக 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் இப்பூஞ்சைகள் நன்கு வளரும். பூஞ்சைகளின் வித்துக்கள் பயிர்களை மூழ்கும்படி நீர்ப்பாசனம் செய்வது, மழைச் சாரல், பறிப்பவர்களின் கைகள் மற்றும் துணிகள், வண்டுகள், பூச்சிகள் மற்றும் விவசாயக் கருவிகள் மூலம் பரவுகின்றன. சோலனசியஸ் இன வகை களைகளில் இப்பூஞ்சைகள் தஞ்சம் புகுந்து உயிர்வாழ்கின்றன மற்றும் குறைந்த காலத்திற்கு இவை மண் அல்லது பயிரின் எஞ்சிய பகுதிகளில் உயிர்வாழ்கின்றன.


தடுப்பு முறைகள்

  • நோய் பாதிப்பில்லாத சான்றளிக்கப்பட்ட விதைகளைப் பயன்படுத்தவும்.
  • எதிர்ப்புத் திறன் கொண்ட வகைகள் கிடைத்தால், அவற்றைப் பயன்படுத்தவும்.
  • கரிம அல்லது பிளாஸ்டிக் தழைக்கூளத்தினைப் பயன்படுத்தி நோய்க்கிருமிகள் மண்ணிலிருந்து பயிர்களுக்குப் பரவுவதைத் தவிர்க்கவும்.
  • பாதிக்கப்பட்ட இலைகளை நீக்கி மற்றும் அழிக்கவும்.
  • காற்றுச் சுழற்சியினை மேம்படுத்தவும் மற்றும் கம்புகள் அல்லது குச்சிகளைக் கொண்டு பயிர்களை நிலத்திலிருந்து சற்று உயர்த்தியே வைத்திருக்கவும்.
  • களைகள் இருப்பின் அவற்றினை நீக்கவும்.
  • தெளிப்புப் பாசனம் அல்லது பயிர்கள் மூழ்கும்படியான நீர்ப்பாசனத்தினைத் தவிர்க்கவும்.
  • உங்களின் கருவிகள் மற்றும் இயந்திரங்களைத் தூய்மையாக வைத்திருக்கவும்.
  • பயிர்க்கழிவுகளை நிலத்தை உழுது, புதைத்து விடவும்.
  • மாற்றாக, இவற்றை நீக்கி, எரித்தும்விடலாம்.
  • எளிதில் பாதிக்காத தாவரங்களை கொண்டு பல வருடங்களுக்கு பயிர் சுழற்சி செய்வது குறித்து திட்டமிடவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க