ஆலிவ்

ஆலிவின் செர்கோஸ்போரா இலைப்புள்ளி நோய்

Pseudocercospora cladosporioides

பூஞ்சைக்காளான்

5 mins to read

சுருக்கமாக

  • இலையின் மேற்பரப்பில் இருக்கும் வெளிறிய பகுதிகள் பழுப்பு நிறமாகவும், நசிவுகளாகவும் மாறும்.
  • பூஞ்சை வளர்ச்சியின் காரணமாக கீழ்பரப்பு ஈயம்-சாம்பல் நிறமாக மாறும்.
  • இலை உதிர்வு வளர்ச்சி குன்றிய மற்றும் சிதைவுற்ற பழங்களுக்கு வழிவகுக்கும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்
ஆலிவ்

ஆலிவ்

அறிகுறிகள்

நோய் அறிகுறிகள் இலைகளின் மேல் மற்றும் கீழ்ப் பக்கங்களில் வேறுபடுகின்றன. மேற்பரப்பில், ஒழுங்கற்ற, வெளிறிய புள்ளிகள் பரவலாகத் தோன்றும், இவை பழுப்பு நிறமாகவும், முதிர்ச்சி அடைகையில் நசிவுகளாகவும் மாறும். இதற்கு நேர்மாறாக, இலையின் கீழ்ப் பரப்பில் பூஞ்சை வளர்ச்சியின் காரணமாக படிப்படியாக அழுக்கு சாம்பல் நிறமாக மாறக்கூடிய கறைகள் இருக்கும். இலைகள் பின்னர் மஞ்சள் நிறமாகவும், செம்பழுப்பு நிறமாகவும் மாறும், மேலும் இவை கடுமையான நிகழ்வுகளில் இலையுதிர்வை ஏற்படுத்தும். பாதிக்கப்பட்ட கிளைகள் அல்லது மரங்கள் பொதுவாக குன்றிய வளர்ச்சியை வெளிப்படுத்தும். பழங்களில் சிறிய, பழுப்பு நிற சிதைவு புள்ளிகள் ஏற்படலாம், மேலும் பழங்கள் தாமதமாக, சீரற்ற முறையில் பழுக்கலாம். இந்த அறிகுறிகளை ஃபுசிக்லாடியம் ஓலிஜினியம் அல்லது கோலெடோட்ரிகம் இனங்கள் மற்றும் உயிரற்ற காரணிகளால் ஏற்படும் அறிகுறிகள் போன்ற பிற நோய்க்கிருமிகளால் ஏற்படும் அறிகுறிகளுடன் அடிக்கடி குழப்பிக் கொள்ளப்படலாம்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

நோயைக் கட்டுப்படுத்த போர்டியாக்ஸ் கலவை போன்ற கரிம செப்பு சேர்மங்களை மழை பெய்யும் முன் அல்லது அறுவடைக்குப் பின் நேரடியாகப் பயன்படுத்தலாம்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைத்தால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்போதும் கருத்தில் கொள்ளுங்கள். காப்பர் ஹைட்ராக்சைடு, காப்பர் ஆக்ஸிகுளோரைடு, ட்ரைபேசிக் காப்பர் சல்பேட் அல்லது காப்பர் ஆக்சைடு ஆகியவற்றைக் கொண்ட நிலையான தாமிர தெளிப்புகளை இலைகளைப் பாதுகாக்க பயன்படுத்தலாம். அறுவடைக்குப் பிறகு, இலையுதிர் மற்றும் குளிர்கால மழைக்கு முன், பூஞ்சை வித்துகளை பரப்புவதற்கு முன், காப்பர் தெளிப்புகளை நேரடியாகப் பயன்படுத்த வேண்டும். பழத்தின் தரத்தை கெடுக்காமல் இருப்பதற்கு அறுவடை காலத்திற்கு நெருக்கத்தில் இவற்றைப் பயன்படுத்தக்கூடாது.

இது எதனால் ஏற்படுகிறது

அறிகுறிகளானது செர்கோஸ்போரா கிளாடோஸ்போரியோடைஸ் என்ற பூஞ்சையால் ஏற்படுகின்றன. இது மரத்தில் இருக்கும் பாதிக்கப்பட்ட இலைகளில், இன்னும் துல்லியமாக சொல்ல வேண்டுமானால் காயங்களில் வாழும். இலையுதிர் காலத்தில் அது மீண்டும் வளர்ச்சியைத் தொடங்கும் போது, இந்த சிதைவுகளின் ஓரங்கள் பெரிதாகி, புதிய தொகுதி வித்துகள் அங்கு உருவாகின்றன. புதிய நோய்த்தொற்றுகள் பெரும்பாலும் மழைப்பொழிவுடன் தொடர்புடையதாக இருக்கின்றன, இவை பெரும்பாலும் குளிர்காலத்தில் ஏற்படும். கோடையில், பெரும்பாலான நோயுற்ற இலைகள் மரங்களில் இருந்து விழுந்துவிடும், பகுதியளவு இலையுதிர்ந்த தளிர்கள் சில ஆரோக்கியமான இலைகளுடன் நுனிகளில் எஞ்சியிருக்கும். அதிக வெப்பநிலை பூஞ்சையின் வாழ்க்கைச் சுழற்சியைக் கட்டுப்படுத்தும். இந்த நோய் பொருளாதார சேதத்தை ஏற்படுத்தும் அளவுக்கு தீவிரமடைவதற்கு பல ஆண்டுகள் ஆகலாம். அதிக அளவு இலை உதிர்வு, தாமதமாக மற்றும் சீரற்ற முறையில் பழங்கள் பழுப்பது எண்ணெய் விளைச்சல் குறைவதற்கு வழிவகுக்கும்.


தடுப்பு முறைகள்

  • நோய்க்கான அறிகுறிகள் எதுவும் தென்படுகிறதா என மரங்களை தொடர்ந்து கண்காணிக்கவும்.
  • நைட்ரஜன் உரங்களை அதிகமாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும், ஆனால் கால்சியம் கொண்டு போதுமான அளவு நிரப்பவும்.
  • முடிந்தவரை மேல்நிலை நீர்ப்பாசனத்தைத் தவிர்க்கவும்.
  • இலைகள் மற்றும் பழங்களை விரைவாக உலர்த்துவதற்கு தாவர அடர்த்தி காற்றோட்டத்தை அனுமதிப்பதை உறுதிப்படுத்தவும்.
  • வரிசைகளை சரியான முறையில் அமைப்பதன் மூலம் நல்ல காற்றோட்டத்தை உறுதி செய்யவும்.
  • ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஈரப்பதத்திற்கான போட்டியைக் குறைக்க மரங்களைச் சுற்றியுள்ள களைகளை அகற்றவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க