நாரத்தை / சாற்றுக்கனி வகைகள்

செப்டோரியா புள்ளி

Septoria citri

பூஞ்சைக்காளான்

5 mins to read

சுருக்கமாக

  • குறுகிய பச்சை விளிம்புடனான, சிறிய இளம் பழுப்பு நிற குழிகள், பழங்கள் மீது காணப்படும், பின்னர் இவை செம்பழுப்பு நிறமாகி, நெருக்கமான கரும்புள்ளிகளைக் கொண்டிருக்கும்.
  • இலைகளில் மஞ்சள் நிற ஒளி வட்டத்தைக் கொண்ட, எழும்பிய, கொப்புளங்கள் போன்ற புள்ளிகள் காணப்படும்.
  • பின்னர் இலைகளின் நடுப்பகுதிகள் சிதைந்து வெளிர் பழுப்பு நிறமாக மாறுகின்றன.
  • மரத்தின் கீழ் பகுதியில் இருக்கும் இலைகள் உதிர்ந்துவிடும்.

இதிலும் கூடக் காணப்படும்


நாரத்தை / சாற்றுக்கனி வகைகள்

அறிகுறிகள்

பழத்தில் சிறிய பள்ளங்களோ குழிகளோ (1-2 மிமீ விட்டம்) தோன்றும், இவை தோலை விட ஆழமானதாக இருக்காது. ஆரம்பத்தில் இந்தக் குழிகள் இளம் பழுப்பில் குறுகிய பச்சை நிற விளிம்புடன் இருக்கும், பழம் முதிர்ச்சியடையும்போது இவை செம்பழுப்பு நிறமாக மாறும். இந்தச் சிதைவுகள் ஒன்றாகி, பழுப்பிலிருந்து கருப்பு வரையான நிறத்தில், பெரிய ஒழுங்கற்ற அமிழ்ந்த பகுதியாக மாறும். இந்தச் சிதைவுகளுக்குள் நெருக்கமான கரும் புள்ளி கூட்டங்கள் உருவாகக் கூடும், அவை பூஞ்சையின் பாகங்களை குறிக்கும். மோசமாகப் பாதிக்கப்பட்ட பழங்களில் விரைவில் ஒருவிதமான மணம் தோன்றி, அவை முன்கூட்டியே விழுந்துவிடும். இலையின் அறிகுறிகள், மஞ்சள் ஒளி வட்டத்தால் சூழப்பட்ட எழும்பிய, கொப்புளம் போன்ற கருப்பு புள்ளிகளாகக் (1-4 மிமீ விட்டம்) காணப்படும். காலப்போக்கில், இப்புள்ளிகளின் மையங்கள் சிதைந்து, வெளிர் பழுப்பு நிறமாக மாறுகின்றன. சாதகமான சூழ்நிலைகளில், இந்த நோய் மரத்தின் கீழ் பகுதியில் கடுமையான இலை உதிர்வை ஏற்படுத்தக்கூடும். இலைகள் விழும்போது, சிதைவுகள் அடர் பழுப்பு நிறமாகி, கருமையான விளிம்புகளைக் கொள்கின்றன. சிதைவுகளுக்குள், சிறிய, கருப்பு நிற பூஞ்சை வளர்ச்சிகள் ஏற்படுகின்றன.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

காப்பர் மற்றும் ஜிங்க் சல்ஃபேட் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட கரிம பூஞ்சைக் கொல்லிகள் செப்டெரியா சிட்ரியைத் திறம்பட அழிக்கின்றன. அவற்றை குளிர்கால மழைக்கு முன்னர் பயன்படுத்த வேண்டும், தேவைப்பட்டால், குளிர்காலத்தின் போதும், வசந்த கால ஆரம்பத்தின் போதும், இரண்டாம் நிலை பயன்பாடுகள் பரிந்துரைக்கப்படுகின்றன.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகளோடு, தடுப்பு நடவடிக்கைகளும் ஒருங்கிணைந்து கிடைத்தால், அத்தகைய அணுகுமுறையை எப்பொழுதும் கருதுங்கள். பயனுள்ள நோய் கட்டுப்பாட்டுக்கு, இலையுதிர்கால மழைக்கு முன்னர் காப்பர் பூஞ்சைக் கொல்லிகளைப் பயன்படுத்தவும். அஜாக்ஸிடிரோபின்-ஓடு காப்பர் கலவைகளை இணைத்த தயாரிப்புகளும் திருப்திகரமான கட்டுப்பாட்டு பலன்களைக் கொடுக்கின்றன. குளிர்கால மழைக்கு முன் தெளிப்புகளை பயன்படுத்த வேண்டும். தேவைப்பட்டால், குளிர்காலத்தின்போதும், வசந்த கால ஆரம்பத்தின்போதும், இரண்டாம் நிலை பயன்பாடுகள் பரிந்துரைக்கப்படுகின்றன.

இது எதனால் ஏற்படுகிறது

பாதிக்கப்பட்ட கிளைகளிலும் பட்டுப் போன மரங்கள் மற்றும் இலைகளிலும், தரையில் இருக்கும் இலைக் குப்பைகளிலும், இந்தப் பூஞ்சை உயிர் வாழ்கிறது. வித்துகள் ஆரோக்கியமான இலைகளுக்கும் பழங்களுக்கும் நீர் தெளிப்பதன் மூலம் பரவுகின்றன. கோடைக்காலத்தின் இறுதியிலோ, குளிர்ந்த ஈரப்பதமான வானிலைக்குப் பின் வரும் இலையுதிர்காலத்திலோ, பழங்கள் இன்னும் பச்சையாக இருக்கும்பொழுது இந்த நோய்த் தொற்று ஏற்படுகிறது. அறிகுறிகள், 5 - 6 மாதங்களுக்குப் பிறகு, பொதுவாகக் குளிர்ச்சியான காற்றோட்டமான காலத்தைத் தொடர்ந்து பழங்கள் பழுக்கும் நிலையில் தோன்றும். அதுவரை, பழங்களில் இந்தப் பூஞ்சை செயலற்ற நிலையில் இருக்கும். சாதாரண அளவைவிட அதிகமான மழை பொழியும் காலங்களில் செப்டோரியா புள்ளி பொதுவாக மிகவும் கடுமையாக ஏற்படுகிறது. குறைந்த அல்லது விரைவாக மாறும் வெப்பநிலையே, சிட்ரஸ் திசுக்களை இந்த நோயால் எளிதில் பாதிப்படைய செய்வதாகக் கருதப்படுகிறது.


தடுப்பு முறைகள்

  • எதிர்ப்பு சக்தி கொண்ட அல்லது சகிப்புத்தன்மை உடைய, குறைவான முட்கள் கொண்ட தாவர வகைகளை பயிரிடவும்.
  • காற்றோட்டத்தை மேம்படுத்துவதற்கு மரங்களின் நுனியை கத்தரித்து விடுங்கள்.
  • நீர் தெளிப்பின் மூலம் பரவும் நோய்களைத் தடுக்க மேல்நிலை நீர்ப்பாசனத்தைத் தவிர்க்கவும்.
  • முடிந்தால், உறைபனியில் இருந்து பழத்தோட்டத்தை பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்.
  • விழுந்த இலைகளையும் பழங்களையும் சேகரித்து அழித்துவிடவும்.
  • நோய் அறிகுறிகளுக்குப் பழத்தோட்டத்தை அடிக்கடி கண்காணியுங்கள்.
  • மரங்களின் நுனியை அவ்வப்பொழுது கத்தரித்துவிடவும், குறிப்பாகப் பாதிக்கப்பட்ட கிளைகள் அல்லது பட்டுப் போன பாகங்களை வெட்டிவிடவும்.
  • சீக்கிரமே பழங்களை அறுவடை செய்துவிடவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க