நாரத்தை / சாற்றுக்கனி வகைகள்

மெலானோஸ்

Diaporthe citri

பூஞ்சைக்காளான்

5 mins to read

சுருக்கமாக

  • பழங்களில், மிகச் சிறிய அளவிலான , செம்பழுப்பிலிருந்து அடர் பழுப்பு வரையான நிறத்தில் புள்ளிகள், எண்ணெய் சுரப்பிகளைச் சுற்றி காணப்படும்.
  • சிதைந்த திசுக்களும், வெடிப்புகளும் ஏற்பட்டு பழங்கள் முன்கூட்டியே விழக்கூடும்.
  • பசையில் ஊறி சற்றே எழும்பிய, மஞ்சள் ஒளிவட்டம் கொண்ட செம்பழுப்பு நிற புள்ளிகள் இலைகளில் தோன்றும்.

இதிலும் கூடக் காணப்படும்


நாரத்தை / சாற்றுக்கனி வகைகள்

அறிகுறிகள்

மெலனோஸ்-இன் அறிகுறிகள் பழங்கள் முதிர்ச்சி அடையும் நிலையின் இறுதியில், அவை மீது செம்பழுப்பிலிருந்து அடர் பழுப்பு வரையான நிறத்தில் புள்ளிகளாக (0.2 - 1.5 மிமீ அளவு) ஏற்படுகின்றன. இந்தப் புள்ளிகள் தோலில் உள்ள எண்ணெய் சுரப்பிகளைச் சுற்றி உருவாகின்றன. சிதைந்த திசுக்களும் வெடிப்புகளும், இந்தத் தொற்றின் செயல்பாட்டில் பொதுவானவை. பழங்கள் வளர்ச்சி குன்றி, முன்கூட்டியே விழக்கூடும். மற்ற நோய்களால் ஏற்படுகின்ற இதே போன்ற புள்ளிகளுக்கு மாறாக, மெலனோஸ்-இன் புள்ளிகளைத் தொட்டால் மணல் துகள்கள் கொண்ட காகிதம் போலத் தோற்றமளிக்கும். முழுமையாக முதிர்ச்சியடைந்துவிட்ட பழங்களில், இந்த நோய்க் கிருமி, பொதுவாகக் காம்புகளிலிருந்து உருவாகும் அழுகலை ஏற்படுத்துகிறது, இது சீக்கிரமே பழங்கள் கொட்டிவிடக் காரணமாகிறது. இலைகளின் அறிகுறிகள் முதலில், பழுப்பு நிறத்தில் மறைந்த புள்ளிகளாகத் தோன்றும். அவை பின்னர் செம்பழுப்பு நிறத்தில், சற்றே எழும்பிய, பசை நிறைந்த கொப்புளங்களாக வளரும். அவை பெரும்பாலும் மஞ்சள் ஒளிவட்டத்தால் சூழப்பட்டு, இறுதியில் சிறிய, கடுமையான கார்க் போன்ற கொப்புளங்களாக உருவாகும். சேமிப்பு நிலைகளில், தண்டு-முனைகளில் அழுகல் ஏற்படலாம்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

டி. சிட்ரிக்கு சிகிச்சையளிக்க கரிம செப்புக் கலவைகள் கொண்ட தெளிப்புகளைப் பயன்படுத்தவும். இதழ்கள் உதிரும்பொழுது, முதல் பயன்பாட்டை மேற்கொள்ள வேண்டும். தொடர்ந்து, 6-8 வாரங்களுக்குப் பிறகு இரண்டாம் நிலை சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகளோடு, தடுப்பு நடவடிக்கைகளும் ஒருங்கிணைந்து கிடைத்தால், அத்தகைய அணுகுமுறையை எப்பொழுதும் கருதுங்கள். வசந்த காலத்தின் அடர்த்தியான வளர்ச்சியின் போது, பைராக்லோஸ்டிராபின்-இன் பயன்பாடு பழங்கள் மீது மெலனோஸ் வளர்ச்சிக்கு எதிராகச் செயல்படுவது நிரூபிக்கப்பட்டுள்ளது. மான்கோஸெப் மற்றும் ஃபென்ப்யூகொனாசோல்-ஐ அடிப்படையாகக் கொண்ட தயாரிப்புகளும் பரிந்துரைக்கப்படுகின்றன. ஸ்டோபைல்யூரின் பூஞ்சைக் கொல்லிகளும் திருப்திகரமான முடிவுகளைக் கொடுப்பதால், அவற்றையும் பயன்படுத்தலாம்.

இது எதனால் ஏற்படுகிறது

மெலனோஸ் ஒரு சிதைந்த உயிரினமாகும். அது பட்டுப் போன சுள்ளிகளிலே தன் வாழ்க்கைச் சுழற்சியை நிறைவு செய்கிறது. பட்டுப்போன மரக் கட்டைகள் மீதான பூஞ்சை வளர்ச்சியின் அளவும், மழைப்பொழிவையோ, மேல்நிலை தெளிப்பு நீர்ப்பாசனத்தையோ தொடர்ந்து ஈரப்பதமூட்டும் காலம் நீடிப்பதும், நோயின் தீவிரத்தை தீர்மானிக்கின்றன. சுமார் 18-24 மணி நேர ஈரப்பதமும், 20-24 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் நோய்த் தொற்று ஏற்படத் தேவைப்படுகிறது. மரங்களிலோ, நிலத்திலோ, தோப்புகளில் விடப்பட்டிருக்கும் அடர்ந்த புதர்களிலோ, குறிப்பிடத்தக்க அளவு பட்டுப்போன மரக்கட்டைகள் இருக்கும்போது, வித்துகள் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன.


தடுப்பு முறைகள்

  • பழத்தோட்டத்தில், பட்டுப்போன மர பாகங்களை அகற்றவும்.
  • சேதமடைந்த, பட்டுப்போன பாகங்களை வருடத்திற்கு 1-2 முறை நுனிகளை கத்தரித்து வெட்டிவிடவும்.
  • நோய்க் காரணிகளை எதிர்க்கும் சக்தியை மேம்படுத்துவதற்கு, மரங்களுக்குச் சமநிலையில் உரமிடுவதை உறுதிசெய்யவும்.
  • நோய் அறிகுறிகள் உள்ளதா என்று தொடர்ந்து கண்காணிக்கவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க