நாரத்தை / சாற்றுக்கனி வகைகள்

நாரத்தை கரும்புள்ளி நோய்

Phyllosticta citricarpa

பூஞ்சைக்காளான்

5 mins to read

சுருக்கமாக

  • நோய்த்தொற்றின் தீவிரத்தை பொறுத்து பழங்கள் மற்றும் இலைகளில் மாறுபட்ட அறிகுறிகள் காணப்படும்.
  • பழங்களின் தோலில் பல்வேறு வகையான புள்ளிகள் காணப்படும்.
  • பழங்களில் கடினமான புள்ளியினுடைய புண்கள், கருமை நோய் போன்ற தோற்றம், சுருங்கிய புள்ளிகள் வீரியமான புள்ளிகள் காணப்படும்.
  • இந்த நோய் ஏற்பட்டால், இலை மீதான காயங்கள் சிறியதாக, வெளிர் மையம், இருந்த விளிம்பு மற்றும் வெளிறிய ஒளிவட்டத்துடன் நீர்தோய்த்த சிதைந்த புள்ளிகளைக் கொண்டிருக்கும்.

இதிலும் கூடக் காணப்படும்


நாரத்தை / சாற்றுக்கனி வகைகள்

அறிகுறிகள்

இந்த பூஞ்சையானது பல்வேறு வகையான அறிகுறிகளை ஏற்படுத்துகிறது, முக்கியமாக பழங்கள் மீது இது காணப்படுகிறது. கடினமான புள்ளிகளையுடைய காயங்கள் பல மில்லிமீட்டர் விட்டங்களைக் கொண்டிருக்கும். இந்தப் புள்ளிகள் வெளிர் மையப்பகுதியுடன் பள்ளம் போன்று அமைப்பு, கரும் பழுப்பு முதல் கருப்பு நிற விளிம்புகள் போன்றவற்றைக் கொண்டிருக்கும், மேலும் முதிர்ந்த ஆரஞ்சு பழங்கள் பெரும்பாலும் பச்சை நிற ஒளிவட்டத்தைக் கொண்டிருக்கும். பச்சை நிற பழங்களில், கருமை நோய் போன்ற தோற்றமானது சற்று உயர்ந்த கரும் பழுப்பு முதல் கருப்பு நிற புள்ளிகள் இணைந்தது போன்று காட்சியளிக்கும். சுருங்கிய புள்ளிகளானது ஆரஞ்சு முதல் சிவப்பு நிறத்தில், தட்டையாக, 1-3 மிமீ விட்டத்தினைக் கொண்டிருக்கும் மற்றும் இவை பருவ காலத்தின் பிந்தைய நிலையில் தோன்றும். நாளடைவில் இந்தப் புள்ளிகள் பழுப்பு நிறமாக மாறும். வீரியமான புள்ளிகள் பெரியதாக, சற்று நீரில் தோய்த்து, முதிர்ந்த பழங்களின் பெரும் பகுதிகள் முழுவதும் ஒழுங்கற்ற முறையில் பரவும். இலை மீதான காயங்கள் எப்போதாவது ஏற்படும், ஆனால் சில நேரங்களில் எலுமிச்சை மரங்களில், இவை வெளிர் மையம் மற்றும் கருமையான விளிம்புடன் நீர்தோய்த்த புள்ளிகளாகத் தோன்றும், மேலும் இவை வெளிறிய ஒளிவட்டத்தினைக் கொண்டிருக்கும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

பொறிகள் மற்றும் மழை மற்றும் பனி அளவீடுகள் மூலம் வித்துக்களை கண்காணித்தல், பூஞ்சைக்கொல்லி பயன்பாட்டிற்கான சரியான நேரத்தை தீர்மானிக்க உதவுகிறது. இந்த நோய்க்கிருமிக்கு எதிராக பல செப்பு தயாரிப்புகளை பயன்படுத்தலாம். நோய்கிருமியின் இயலுமைத்திறன் மற்றும் அறிகுறிகளின் வெளிப்பாடு போன்றவற்றைக் குறைக்க, அறுவடைக்கு பின்பான சுடு நீர் அல்லது பழங்களை மெழுகூட்டுதல் போன்ற சிகிச்சைகள் பயன்படுத்தப்படுகிறது.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்க பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கருதுங்கள். போக்குவரத்து அல்லது சேமிப்பின் போது இலைகளில் ஏற்படும் அறிகுறிகளை தாமதப்படுத்த பென்ஸிமிடாஸோல் பூஞ்சைக்கொல்லிகளின் அறுவடைக்கு முன்பான தெளிப்பான்களைப் பயன்படுத்தலாம். கரும்புள்ளி காயங்களில் உள்ள நோய்கிருமியின் திறனைக் குறைக்க கஜட்டீன் அல்லது இமாசலில் போன்றவற்றைக் கொண்டு சிகிச்சையளிக்கலாம். ஸ்டிராப்பிலுரின்ஸ், டைதியோகார்பமேட்ஸ், போன்ற பூஞ்சைக் கொல்லிகளும் இந்த பூஞ்சைக்கு எதிராக திறம்பட செயல்படும், ஆனால் பல இடங்களில் இந்த பூஞ்சைக் கொல்லிகளுக்கு எதிரான எதிர்ப்பு திறனும் உருவாகும்.

இது எதனால் ஏற்படுகிறது

இந்தப் பூஞ்சையானது இலை குப்பைகளில் குளிர் காலத்தை செயலற்ற நிலையில் கழிக்கும், வசந்த காலத்தில் வித்துக்களை உற்பத்தி செய்யத் தொடங்கும், இந்த செயல்முறை இலை குப்பையின் தொடர்ச்சியான ஈரப்பதம் மற்றும் உலர்தல் போன்றவற்றினால் முடுக்கிவிடப்படுகிறது. வித்துக்களானது மழை அல்லது நீர்ப்பாசனம் மூலம் வெளியாகி, காற்று மற்றும் தண்ணீர் மூலம் பரவி, பாதிக்கப்படக்கூடிய திசுக்களை அடைந்தவுடன் முளைக்கிறது. இலைகள் 10 மாத காலம் வரையிலும், பழங்களானது அவை பழுத்த 4-5 மாதங்களில் பாதிக்கப்படக்கூடும். நோய்த்தொற்றுக்குப்பிறகு, பூஞ்சையானது புறத்தோல் மற்றும் மேல்தோலுக்கு இடையே குடியேறும். பழங்கள் முதிர்ச்சியடையும் வரை, நோய்த்தொற்று செயலற்ற நிலையில், கண்ணுக்கு தெரியாமல் இருக்கும். இலைகளில் ஏற்படும் தொற்று பொதுவாக மறைந்திருக்கும், ஆனால் இலைப்புள்ளிகள் முதிர்ந்த இலைகளில் காணப்படும். இலை காயங்கள் பொதுவாக, ஈரப்பதமான சூழலில் கரையக்கூடிய பசை போன்ற பகுதியில் வித்துக்களை உற்பத்தி செய்கின்றன. அடிக்கடி பெய்யும் மழை அல்லது நீர் சாரல் வழியாக இந்த நோய் விரைவாக பரவுகிறது.


தடுப்பு முறைகள்

  • சான்றளிக்கப்பட்ட மூலங்களில் இருந்து ஆரோக்கியமான தாவரப் பொருட்களை பயன்படுத்தவும்.
  • எதிர்ப்பு திறன் கொண்ட தாவரவகைகள் கிடைக்கப்பெற்றால் அவற்றை நடவு செய்யவும்.
  • இலை ஈரப்பதத்தைக் குறைக்க நாரத்தை தோட்டங்களில் காற்றோட்டத்தை அதிகரிக்கவும்.
  • நோய்க்கான அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என தோட்டங்களை தொடர்ந்து கண்காணிக்கவும்.
  • தாவரங்களின் இயற்கையான எதிர்ப்பு திறனை அதிகரிக்க முறையாக அவற்றுக்கு உரமளிக்கவும்.
  • பருவ காலத்தில் மற்றும் பருவமல்லாத காலங்களில் பாதிக்கப்பட்ட தாவர பொருட்களை அகற்றி, அவற்றை உடனடியாக அழித்துவிடவும்.(எரித்தல், குழியில் புதைத்தல், அல்லது கால்நடைகளுக்கு உணவு அளித்தல் மூலம் அழித்துவிடவும்).
  • சேமிப்பகத்தின் போது காயங்கள் வளர்ச்சி அடைவதை மெதுவாக்க, முடிந்தவரை பழங்களை குளிர்ச்சியாக, உலர்ந்த நிலையில் வைத்திருக்கவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க