துவரஞ்செடி மற்றும் துவரம் பருப்பு

துவரம் பருப்பின் தண்டு அழுகல் நோய்

Phytophthora drechsleri f. sp. cajani

பூஞ்சைக்காளான்

5 mins to read

சுருக்கமாக

  • நீர் தேங்கிய சிதைவுகள் இலைகளில் காணப்படும்.
  • காம்புகள் மற்றும் தண்டுகளில் பழுப்பு முதல் கருப்பு வரையிலான பள்ளம் போன்ற சிதைவுகள் காணப்படும்.
  • பாதிக்கப்பட்ட நாற்றுகள் திடீரென அழிந்துவிடும்.

இதிலும் கூடக் காணப்படும்


துவரஞ்செடி மற்றும் துவரம் பருப்பு

அறிகுறிகள்

இளம் நாற்றுக்களில் ஏற்படும் பாதிப்பானது செடிகளின் திடீர் அழிவிற்கு வழிவகுக்கும். செடியானது அழியாவிட்டால், தண்டுகளில் பெரிய கட்டிகள் உருவாகும். பாதிக்கப்பட்ட செடிகளில் நீர் தேங்கிய சிதைவுகள் இலைகளில் காணப்படும். காம்புகள் மற்றும் தண்டுகளில் பழுப்பு முதல் கருப்பு வரையிலான பள்ளம் போன்ற சிதைவுகள் காணப்படும். தண்டுகளின் சிதைவுகளுக்கு மேல், செடியானது வாடிய நிலையில் காணப்படும், அத்துடன் இறந்தும் போகலாம்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

சூடோமோனாஸ் ஃப்ளோரசென்ஸ் மற்றும் பேசிலஸ் சப்டிலிஸ், அதே போல் ட்ரைக்கோடெர்மா விரிடே மற்றும் ஹமாட்டம் ஆகியவை தண்டு அழுகலுக்கு எதிராக சிறப்பாக செயல்படுகின்றன.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். ஒரு கிலோகிராம் விதைக்கு 4 கி மெடாலாக்ஸைல் என்ற வீதத்தில் சிகிச்சை அளிப்பதன் மூலம் பைடோப்தோரா இலைக் கருகல் நோயினை தடுக்க இயலும்.

இது எதனால் ஏற்படுகிறது

பைடோப்தோரா டிரெச்லெரி என்னும் இலைக் கருகல் மண் வழியே பரவும் ஒரு வகைப் பூஞ்சையால் அறிகுறிகள் ஏற்படும். செடிகளின் தேவையில்லாத குப்பைகளில் இவை குளிர்காலத்தில் செயலற்ற நிலையில் கழிக்கும். சாரல் மழை மற்றும் சுமார் 25 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பநிலை போன்ற சூழல்கள் நோய் பாதிப்பு ஏற்பட ஏதுவான சூழ்நிலையாகும். நோய் தாக்குவதற்கு 8 மணி நேரமாவது இலைகளில் ஈரப்பதம் வேண்டும். நோய்க்கு எதிராக ஒருவகை எதிர்ப்பினை சில காலங்களுக்கு பிறகு துவரம் பருப்புகள் உருவாக்கும்.


தடுப்பு முறைகள்

  • எதிர்ப்பு திறன் கொண்ட வகைகள் கிடைக்கப்பெற்றால் அவற்றை பயன்படுத்தவும்.
  • நீர் தேங்கிநிற்பதை தவிர்ப்பதற்காக மோசமான வடிகால் அல்லது நீர் ஊறிய மணல் உள்ள தளங்களில் உயர்த்தப்பட்ட படுகைகளைப் பயன்படுத்துங்கள்.
  • முந்தைய காலத்தில் கருகல் நோய் ஏற்பட்ட வயல்களில் துவரம்பருப்பு பயிரை நடவு செய்யாதீர்கள்.
  • நடவு செய்யும் போது விதைகள் அல்லது நாற்றுகளுக்கு இடையில் அகலமான இடைவெளியை பராமரிக்கவும்.
  • தழைக்கூளமிடுதல் அல்லது பச்சை பயறு அல்லது உளுந்து போன்ற பயிர்கள் உடன் ஊடுபயிர் செய்தல் கருகல் நோய் ஏற்படுவதை குறைக்கும்.
  • பொட்டாசியம் உரத்தைப் பயன்படுத்துவதன் மூலம் தொற்று அபாயத்தைக் குறைக்கலாம்.
  • மாற்று புரவலன் பயிர்களுடன் பயிர் சுழற்சியை பின்பற்றவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க