விதையவரை

அவரையின் உலர் வேர் அழுகல் நோய்

Fusarium solani f. sp. phaseoli

பூஞ்சைக்காளான்

5 mins to read

சுருக்கமாக

  • நாற்றுகளின் இலைகள் மஞ்சள் நிறமாக மாறி வாட ஆரம்பிக்கும்.
  • தாவரம் முளைத்த சிறிது காலத்திலேயே முக்கிய வேரில் சிவப்பு காயங்கள் தோன்றும்.
  • இந்த காயங்கள் கரும் பழுப்பு நிறமாக மாறி, ஒன்றிணைந்து வேர் அச்சு நெடுகிலும் விரிசல்களை உருவாக்கக்கூடும்.
  • திசுக்கள் மென்மையாகவும், பூஞ்சையாகவும் மாறாது, எனவே இந்நோயின் இன்னொரு பொதுவான பெயர் "உலர் வேர் அழுகல்".
  • அவை உயிர் பிழைத்தால், பாதிக்கப்பட்ட தாவரங்கள் சில விதைகளுடன் சில காய்களை மட்டுமே உற்பத்தி செய்யும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

விதையவரை

அறிகுறிகள்

விதைத்த சில வாரங்களுக்குப் பிறகு, பாதிக்கப்பட்ட நாற்றுகளின் இலைகள் மஞ்சள் நிறமாக மாறி, வாடிவிடும். தாவரங்களின் வளர்ச்சி குன்றலாம், மேலும் சுற்றுச்சூழல் நிலைமைகள் நோய்க்கு சாதகமாக இருந்தால் முளைத்த சிறிது காலத்திலேயே தாவரங்கள் இறந்து போகலாம். நிலத்தடி அறிகுறிகளானது தோன்றிய ஒரு வாரத்திற்குப் பிறகுதான் பிரதான வேரில் சிவப்பு நிற காயங்கள் அல்லது கோடுகளாகத் தோன்றும். இந்த காயங்களானது கரும்பழுப்பு நிறமாக மாறி, ஒன்றிணையக்கூடும்; மேலும் இவை உலர்கையில் இவை வேர் அச்சு நெடுகிலும் விரிசல்களாக உருவாகின்றன. பக்கவாட்டு வேர்கள் மற்றும் வேர் நுனிகள் சுருங்கி இறந்து போனாலும், தாவரங்களுடனேயே இணைந்திருக்கும். இந்த காயங்களுக்கு மேலே புதிய இழை வேர்கள் உருவாகலாம், இது மண்ணின் கோட்டிற்கு நெருக்கமாக இருக்கும். திசுக்கள் மென்மையாகவும், பூஞ்சையாகவும் ஆகாது, எனவே இந்நோயின் மற்றொரு பொதுவான பெயர் "உலர் வேர் அழுகல்". தாவரங்கள் இத்தகைய பாதகமான சூழ்நிலைகளை தாண்டி உயிர் வாழ்ந்தாலும், சில விதைகளுடன் சில காய்களை மட்டுமே உற்பத்தி செய்யும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

ரைசோபியம் டிராபிகியுடன் கூடிய பேசிலஸ் சப்டிலிஸ் போன்ற உயிரியல் கட்டுப்பாட்டு முகவர்களுடனான விதை சிகிச்சைகள் செயல்படக்கூடும். நுண்ணுயிரிகளுடனான பிற சிகிச்சைகளில் டிரைக்கோடெர்மா ஹார்சியானத்தை அடிப்படையாகக் கொண்ட கரைசல்களும் அடங்கும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால் தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். ஃபியூசேரியம் வேர் அழுகலைக் கட்டுப்படுத்துவதில் பூஞ்சைக் கொல்லிகள் பொதுவாக பயனுள்ளதாக இருக்காது.

இது எதனால் ஏற்படுகிறது

ஃபியூசேரியம் வேர் அழுகல் நோய் ஃபியூசேரியம் சொலானி என்ற பூஞ்சையால் ஏற்படுகிறது, இது மண்ணில் உள்ள குப்பைகளில் பல ஆண்டுகளுக்கு வாழக்கூடியது. முளைத்த சிறிது நேரத்திலேயே பூஞ்சை வளர்ந்து வரும் நாற்றுக்குள் ஊடுருவி நீர் மற்றும் ஊட்டச்சத்து போக்குவரத்து திசுக்களில் குடியேறுகிறது. அங்கே பூஞ்சையின் இருப்பானது பொதுவாக அழுத்தம் போன்றவற்றால் பாதிக்கப்படாத ஆரோக்கியமான தாவரங்களுக்கு குறைவான சேதத்தையே ஏற்படுத்துகிறது. இருப்பினும், சுற்றுச்சூழல் நிலைமைகள் பாதகமாக இருந்தால் (வறட்சி, நீர் தேங்கிய மண், மோசமான ஊட்டச்சத்து, ஆழமான நடவு, இறுக்கமான மண், களைக்கொல்லி காயம்), தடுக்கப்பட்ட நீர் மற்றும் ஊட்டச்சத்து போக்குவரத்து கூடுதல் அழுத்தத்திற்கும் அறிகுறிகளின் தோற்றத்திற்கும் வழிவகுக்கிறது. இத்தகைய சூழலில் முக்கியமான விளைச்சல் இழப்பை எதிர்பார்க்கலாம்.


தடுப்பு முறைகள்

  • உங்கள் சந்தையில் கிடைத்தால், சகிப்புத்தன்மை அல்லது எதிர்ப்புத்திறன் கொண்ட வகைகளைப் பயன்படுத்தவும்.
  • ஆழமற்ற விதை படுகைகளில் அல்லது வரப்புகளில் நடவு செய்யவும்.
  • மண் வெப்பமாக இருக்கும் பருவத்தில் வயலில் தாமதமாக விதைக்கவும்.
  • தாவரங்களுக்கு இடையே அகலமான இடைவெளியை பராமரிக்கவும்.
  • வயல்களின் வடிகாலை மேம்படுத்தவும்.
  • வறட்சி அழுத்தத்தைத் தவிர்க்க தாவரங்களுக்கு தவறாமல் தண்ணீர் ஊற்றவும்.
  • மண் இறுக்கம் மற்றும் கடினமான மண் கட்டிகள் உருவாகுதல் ஆகியவற்றைக் குறைக்கவும்.
  • நல்ல உரங்களை வழங்கவும்.
  • வயலில் வேலை செய்யும்போது, தாவரங்களுக்கு காயங்கள் எதுவும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவும்.
  • பயறு அல்லாத வகைகளை கொண்டு 4 முதல் 5 ஆண்டுகள் நீண்டகால பயிர் சுழற்சி பரிந்துரைக்கப்படுகிறது.
  • தாவர குப்பைகளை புதைக்க ஆழமாக நிலத்தை உழவும்.
  • நிலத்தை உழுது, மண்ணை நன்கு வெயிலில் காயவைக்கவும்.
  • பாதிக்கப்பட்ட தாவரங்களின் அவரை வைக்கோலை விலங்குகளுக்கு தீவனமாக அளிக்க வேண்டாம்.
  • எருவிலும் பூஞ்சை செயல்பாட்டில் இருக்கும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க