சோயாமொச்சை

சோயாவின் துரு நோய்

Phakopsora pachyrhizi

பூஞ்சைக்காளான்

5 mins to read

சுருக்கமாக

  • இலைகளின் அடிப்பகுதியில் மற்றும் நரம்புகள் நெடுகிலும் சிறிய, சாம்பல் நிறப் புள்ளிகள் காணப்படும்.
  • சாம்பல் நிறப் புள்ளிகள் சிவந்த நிறம் முதல் பழுப்பு நிறம் வரை மாறக்கூடும்.
  • புள்ளிகளைச் சுற்றிலும் மஞ்சள் நிற மாற்றம் காணப்படும்.
  • நோய்த் தொற்றின் பிந்தைய நிலைகளில் அறிகுறிகளானது அனைத்து இலைகளிலும் காணப்படும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

சோயாமொச்சை

அறிகுறிகள்

தாவரங்களின் கீழ்ப் புறங்களில் நோய்த்தொற்று ஏற்பட்டு, பின்னர் மேல்புறத்திற்குப் பரவுகிறது, முக்கியமாக இளம் இலைகளைப் பாதிக்கிறது. முதல் அறிகுறிகளானது தாவரங்கள் பூக்கும் நிலையில் இருக்கும்போது, சிறிய, செங்கல் சிவப்பு நிறப் புள்ளிகளாக இலைகளின் கீழ்ப்புறங்கள் மற்றும் நரம்புகள் நெடுகிலும் காணப்படும். பின்னர், இந்தப் புள்ளிகள் அளவிலும், எண்ணிக்கையிலும் அதிகரித்து, பின்னர் இணைந்து, சிவந்த பழுப்பு அல்லது கரு நிறமாக மாறும். நோய் அதிகரிக்கையில், இவை உப்பிய, வெளிர் பழுப்புப் பூஞ்சைக் கொப்புளங்களால் சூழப்படும், இவற்றை சாதாரண கண்களாலும் காணலாம். இவற்றில் சில ஒன்று சேர்ந்து ஒழுங்கற்ற மஞ்சள் ஒளிவட்டத்தினால் சூழப்பட்ட பழுப்பு நிறப் புள்ளிகளை உருவாக்கும். இந்தப் புள்ளிகள் தற்போது இலைகளின் இருபுறங்களிலும், இலைக் காம்புகள் மற்றும் சில நேரங்களில் தண்டுகளிலும் காணப்படும். முதிராத இலைகளும் உதிரும் வாய்ப்புகள் உண்டு.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

நோய்த்தொற்றின் தீவிரத்தைக் குறைக்க காரிம்பியா சிற்றியோடொரியாவின் வாசனை எண்ணெய் 1%, சிம்போபோகன் நார்டஸ் ௦.5% மற்றும் திமஸ் வல்கேரிஸ் 0.3% ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட எண்ணெய்த் தயாரிப்புகளைப் பயன்படுத்தலாம்

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்க பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். சரியான பூஞ்சைக் கொல்லிகளை தேர்ந்தெடுத்து, சரியான நேரத்தில் பயன்படுத்துவது மிகவும் முக்கியம். ஹெக்சோகோனஸோல் மற்றும் புரோபிகோனஸோல் (2 மிலி/ ஒரு லிட்டர் நீர்) ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட பூஞ்சைக் கொல்லிகளைப் பயன்படுத்தவும். வளரும் பருவம் முழுவதும் அவ்வப்போது துத்தநாக அயன்-மானெப் கலப்புகளைப் பயன்படுத்தவும்.

இது எதனால் ஏற்படுகிறது

சோயாபீன்ஸ் துருநோய் என்னும் ஆக்ரோஷமான நோயானது பகோப்சோரா பக்கிரிலி என்னும் பூஞ்சையால் ஏற்படுகிறது. இவை விதை வழியே பரவுபவை அல்ல மற்றும் பச்சைநிற உயிர்த் திசுக்கள் இவை உயிர்வாழவும், மற்றும் இனப்பெருக்கம் செய்யவும் தேவைப்படுகிறது. இதனைச் சுற்றி சோயாபீன்ஸ் தாவரங்கள் எதுவும் இல்லாத போது, இது உயிர்வாழ்வதற்கு மாற்றுப் புரவலன்கள் தேவை. கொப்புளங்களில் உருவாகும் வித்துக்கள் ஒரு தாவரத்திலிருந்து பிற தாவரத்திற்கு பறந்து சென்று அங்கு, இலைத் திசுக்களில் உள்ள துளைகள் அல்லது காயங்கள் மூலம் அன்றி தாவர உயிரணுக்களை நேரடியாகத் துளைக்கிறது. நோயின் வளர்ச்சிக்கு 6 முதல் 12 மணி வரையிலான தொடர்ச்சியான இலை ஈரப்பதம், குளிர்ச்சி முதல் மிதமான வெப்பநிலை (16 முதல் 28 டிகிரி செல்சியஸ் வரை) மற்றும் அதிக ஈரப்பதம் (> 75%) போன்றவை ஆதரவாக இருக்கும்.


தடுப்பு முறைகள்

  • சகிப்புத்தன்மை அல்லது எதிர்ப்புத் திறன் கொண்ட தாவர வகைகளைத் தேர்ந்தெடுக்கவும்.
  • பருவக்காலத்தின் ஆரம்பத்திலேயே நடவு செய்ய வேண்டும் மற்றும் சாத்தியம் என்றால் சீக்கிரம் முதிர்ச்சியடையும் தாவர வகைகளைத் தேர்வு செய்யவும்.
  • மாற்றாக, உலர் காலங்களை பயனுள்ளதாக ஆக்கிக்கொள்வதற்கு தாமதமாக நடவு செய்யவும்.
  • கவிகைகள் விரைவாக உலர்வதற்கு வரிசைகளுக்கு இடையே அகன்ற இடைவெளிவிடவும்.
  • தாவரங்களைத் தொடர்ந்து கண்காணித்து, மாற்று புரவலன்களைக் களையெடுக்கவும்.
  • மண் வளத்தைக் குறிப்பாக பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் அளவுகளைச் சரிசெய்யவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க