மற்றவை

கண்புள்ளி நோய்

Oculimacula yallundae

பூஞ்சைக்காளான்

5 mins to read

சுருக்கமாக

  • அடர் பழுப்பு முதல் பச்சைப் பழுப்பு நிற, நீள்வட்ட, கண்புள்ளி போன்ற சிதைவுகள், தண்டுகளின் அடிப்புறத்திலும் மற்றும் இலை உறைகளின் அடிப்பகுதியிலும் காணப்படும்.
  • சிதைவுகள் ஒன்றாக வளர்ந்து மற்றும் தண்டுகளை வெறுமையாக்கி, நீர் மற்றும் ஊட்டச்சத்துக்கள் எடுத்துக்கொள்ளப்படுவதைக் குறைக்கும்.
  • நோய் அதிகரிக்கையில், இவை தண்டுகளை பலவீனமாக்கி மற்றும் அவற்றைச் சாயச்செய்யும்.

இதிலும் கூடக் காணப்படும்

2 பயிர்கள்
பார்லிகோதுமை
கோதுமை

மற்றவை

அறிகுறிகள்

நாற்றுக்கள் பருவத்தில் நோய்த் தொற்றுக்கள் ஏற்படுவது பயிர்கள் இறப்பதற்கு ஏதுவாக அமைந்துவிடும். வட்டமான, கண் போன்ற சிதைவுகள் தண்டுகளின் அடிப்புறத்தில் காணப்படும். வைக்கோல் நிறத்திலான மையங்கள் மற்றும் பச்சை முதல் அடர் பழுப்பு நிறத்திலான வளையங்களைக் கொண்ட ஓரங்கள் காணப்படும். பலவேளைகளில், கண்ணுப்புள்ளிகள் மண்ணிற்கு அருகேயுள்ள இலை உறைகளில் வளர்வதைக் காணலாம். இந்தச் சிதைவுகள் ஒன்றாக வளர்ந்து தண்டுகளில் வெறுமையாக்கும் மற்றும் அவற்றின் வட்டவடிவம் இழக்கப்படும். நீர் மற்றும் ஊட்டச்சத்துக்கள் எடுத்துக்கொள்ளப்படுவதைக் குறைக்கும் மற்றும் இதனால் வெள்ளை மற்றும் வாடிப்போன மஞ்சரிகள் மற்றும் மகசூல் குறைவு போன்றவை ஏற்படும். நோய் அதிகரிக்கையில், இவை தண்டுகளைப் பலவீனமாக்கி மற்றும் அவற்றைச் சாயச்செய்யும். கண்ணுப்புள்ளி நோயினால் வேர்கள் பாதிக்கப்படுவதில்லை மற்றும் மேற்கூறிய எவ்வித அறிகுறிகளும் அதில் ஏற்படுவதில்லை.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

மன்னிக்கவும், ஒகுலிமகுலா யல்லுன்டே எனும் இப்பூஞ்சைகளுக்கு எதிராக தற்போது எங்களிடம் எவ்வித மாற்றுச் சிகிச்சை முறைகளும் இல்லை. எங்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதன் மூலம் இதுகுறித்து நீங்கள் தெரிந்துகொள்ளலாம். இந்த நோயினைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் ஏதேனும் இருந்தால் எங்களுடன் பகிர்ந்துகொண்டு பிறருக்கும் உதவவும். உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். பெரும்பாலான பூஞ்சைக் கொல்லிகள் மனிதனின் ஆரோக்கியத்திற்கு அல்லது சுற்றுச்சூழலுக்கு தீங்கானது, மற்றும் எனவே பயன்படுத்துவதற்கு பரிந்துரைக்கப்படுவதில்லை. சிறந்த பூஞ்சைக்கொல்லிகள் பாஸ்கலிட் மற்றும் டிரையசோல் ப்ரோதியோகோனஸோல் போன்றவற்றினை அடிப்படையாகக் கொண்டவை. சைப்ரோடினிலும் சிறந்த பலனைத் தரும், ஆனால் பிற தானியங்களில் ஏற்படும் நோய்க்கு இவை குறைந்த கட்டுப்பாட்டையே அளிக்கும்.

இது எதனால் ஏற்படுகிறது

ஒகுலிமகுலா யல்லுன்டே எனும் பூஞ்சைகளால் இந்த நோய் ஏற்படுகிறது. பயிரின் எஞ்சிய பாகங்களின் மூலம் மண்ணில் வெகுகாலம் (2 ஆண்டுகள் அல்லது அதற்கும் மேல்) வாழக்கூடியவை. வசந்த காலத்தில் முதன்மை நோய்த் தொற்றுக்களுக்கான ஏதுவான சூழ்நிலைகள் அமையும். அப்போது, வித்துக்கள் காற்று அல்லது மழை மூலம் எஞ்சிய பயிர் பாகங்களில் இருந்து பிற பயிர்களுக்குப் பரவுகின்றன. லேசான ஈரப்பதமான வானிலை (பனிப்பொழிவு, பனி மூட்டம்) மற்றும் இலைவேனிற் மற்றும் வசந்த காலத்தில் அடிக்கடி மழைப்பொழிதல் போன்றவை நோய்தொற்றுக்களின் வாழ்க்கைச் சுழற்சி மற்றும் தொற்று செயல்முறைக்கு ஆதரவாக அமையும். ஒருமுறை சிதைவுகள் தண்டுகளுக்குள் சென்றுவிட்டால், அதிகமான வெப்பநிலை நோய் பரவலை விரைவாக்கும். பயிர்ச்சுழற்சியினை கம்பு மற்றும் ஓட்ஸ் போன்ற பிற தானியங்களுடன் செய்வதன் மூலம் நோய்த்தாக்கம் ஏற்படுவது மேலும் அதிகரிக்க வழிவகுக்கிறது.


தடுப்பு முறைகள்

  • நிலையான மற்றும் தடுப்புவகைப் பயிர்களைப் பயிரிடவும்.
  • பயிரிடும்போது அதிக ஆழமில்லாத பகுதிகளில் விதைகளைப் பயிரிடுவதை உறுதி செய்யவும்.
  • முன்கூட்டியே விதைத்தலைத் தவிர்க்கவும்.
  • முதன்மை நோய்த் தொற்றுக்களைத் தவிர்க்க வரப்புகளைச் சரியாக அமைக்கவும்.
  • புரவலன் அல்லாத பயிர் இனங்களைக் கொண்டு பயிர் சுழற்சியினைச் சரியாகத் திட்டமிட்டு மற்றும் செயல்படுத்தவும்.
  • அறுவடைக்குப் பின்னர் எஞ்சியிருக்கும் பகுதிகளை நீக்கி மற்றும் அழிக்கவும்.
  • அதிகளவிலான இடைவெளி விட்டு பயிரிடுவதன் மூலம் உங்கள் கவிகைகளை மேம்படுத்தலாம்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க