Pyrenophora teres
பூஞ்சைக்காளான்
வலைக் கொப்புளங்கள் இரண்டு வடிவத்தினைக் கொண்டுள்ளன : புள்ளி வடிவம் மற்றும் வலை போன்ற வடிவம். அறிகுறிகளானது பெரும்பாலும் இலைகளில் காணப்படும், ஆனால் அவ்வப்போது இலை உறைகளிலும், பூவடிச்செதில்களிலும் காணப்படும். வலை வடிவமானது துல்லியமான பழுப்பு நிறக் காயங்களாக ஆரம்பிக்கும்; இது நீண்டு, இலைப் பரப்புகள் நெடுகிலும் குறுக்கிலும் மெல்லிசான, கரும்பழுப்பு நிறக் கோடுகளாக மாறி, தனித்துவமான வலை போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும். முதிர்ந்த காயங்கள் இலை நரம்புகள் நெடுகிலும் தொடர்ந்து நீளும், மேலும் அவை பெரும்பாலும் மஞ்சள் நிற ஒளிவட்டங்களால் சூழப்பட்டிருக்கும். ஆரம்பத்தில், புள்ளிகளானது மஞ்சள் நிற விளிம்புகளால் சூழப்பட்ட சிறிய திடமான பழுப்பு நிறமுடைய நீள்வட்டப் புண்களாக இருக்கும். பின்னர் இந்த புள்ளிகள் 3-6 மிமீ விட்டம் உடைய வெளிர் அல்லது கரும் பழுப்பு நிறக் கொப்புளங்களாக உருவாகும். காதுகளும் பாதிக்கப்படக் கூடும். பூவடிச்செதில்களில் உருவாகும் வலையில்லாத தோற்றத்தை உடைய சிறிய பழுப்பு நிறக் கோடுகள் விளைச்சல்களைக் குறைத்து, விதைகளை சுருங்கச் செய்யும். பாதிக்கப்பட்ட உட்கருவின் அடிப்பகுதியில் தெளிவான பழுப்பு நிறக் காயங்கள் தென்படும்.
மன்னிக்கவும், பைரெனோபோரா டெரிஸ் பூஞ்சைக்கு எதிரான மாற்றுச் சிகிச்சை முறைகள் எதுவும் எங்களுக்குத் தெரியவில்லை. இந்த நோயை எதிர்த்துப் போராட உதவும் வகையில் ஏதாவது ஒன்றை நீங்கள் அறிந்திருந்தால் தயவுசெய்து எங்களுக்குத் தெரியப்படுத்தவும். உங்களிடமிருந்து தகவலை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.
உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். டிரையஜோல் மற்றும் ஸ்டிராபிலுரின் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட இலைத்திரள் பூஞ்சைக் கொல்லிகள் இரண்டு வடிவ வலைக் கொப்புளங்களையும் திறம்படக் கட்டுப்படுத்துகின்றன. டெபுகொனாஜோல் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். அதிகம் மழை பொழியும் சுற்றுச்சூழலில், இரண்டு தெளிப்புகள் பயன்படுத்த வேண்டியிருக்கும். முடியும் போதெல்லாம், பல்வேறு செயல் முறைகளை உடைய பூஞ்சைக் கொல்லிகளை மாற்றி மாற்றிப் பயன்படுத்தவும். இது எதிர்ப்புத் திறன் உருவாகும் அபாயத்தைக் குறைக்கும். விதைகளைச் சீர்ப்படுத்துவது வலை வடிவிலான வலைக் கொப்புளங்களுக்கு எதிராக மட்டுமே திறம்பட செயல்படுகின்றன.
வலைக் கொப்புளங்கள் பைரெனோபோரா டெரெஸ் என்னும் பூஞ்சையினால் ஏற்படுகிறது. இது பயிர்க் குப்பைகள் மற்றும் புரவலன் தாவரங்களில் குளிர்காலத்தைச் செயலற்ற நிலையில் கழிக்கும். பாதிக்கப்பட்ட விதைகளில் இருந்தும் நோய் ஏற்படும்; ஆனால் பொதுவாக குறைவான அளவிலேயே ஏற்படும். நோயானது காற்று மூலம் பரவும் வித்துக்கள் மற்றும் மழைச் சாரல்கள் மூலம் பரவும். 10 டிகிரி செல்சியஸ் மற்றும் 25 டிகிரி செல்சியஸ் ஆகியவற்றுக்கு இடையேயான வெப்பநிலையில் ஆறு மணி நேர ஈரப்பதமான சூழ்நிலைக்குப் பிறகு முதன்மைப் பயிர்த் தொற்று ஏற்படுகிறது. நிலைமைகள் சாதகமாக இருக்கும் போது, முதன்மை நோய்த் தொற்று ஏற்பட்ட 14 முதல் 20 நாட்களுக்குப் பிறகு காற்றின் மூலம் வித்துக்கள் பரவுகிறது. கடுமையான தொற்று பச்சை நிற இலைப்பரப்பு மற்றும் தாவர உற்பத்தியைக் குறைக்கிறது, மேலும் இது இலைகளை முதிர்ச்சி அடைவதற்கு முன்னதாகவே அழித்துவிடும். தண்டுகளிலும் பூஞ்சையானது வளரக்கூடும். அறுவடைக்குப் பிறகு பூஞ்சையானது பயிர்த்தாள்களில் வாழும், அதிலிருந்து அடுத்துவரும் பருவங்களுக்கு நோய் பரவும். வலைக் கொப்புளங்களானது முக்கியமாக விதையின் எடையையும், தானியத்தின் தரத்தையும் குறைக்கும்.

This page is powered by millions of live Plantix diagnoses. Build plant-disease detection like this into your own products with the API Toolkit, part of Plantix Intelligence.