பப்பாளி

பப்பாளி செம்புள்ளி நோய்

Corynespora cassiicola

பூஞ்சைக்காளான்

5 mins to read

சுருக்கமாக

  • சிறிய செம்பழுப்பு நிற புள்ளிகள் பழைய இலைகளில் தோன்றி படிப்படியாக மேல்நோக்கி நகரும்.
  • புள்ளிகள் பெரிதாகி, கரு விளிம்புகளுடன் சாம்பல் நிறமாகவும், மஞ்சள் நிற ஒளிவட்டமாகவும் மாறும்.
  • பின்னர் அதன் நடுப்பகுதி சிதைந்து, துளையிட்டு, கீழே விழுந்துவிடும்.
  • ஈரமான காலநிலைகளில் பழங்கள் மீது நீர் தோய்த்த பழுப்பு நிற புள்ளிகள் தோன்றக்கூடும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

பப்பாளி

அறிகுறிகள்

ஆரம்பத்தில், சிறிய கோணவடிவிலான பழுப்பு புள்ளிகள் பழைய இலைகளில் தோன்றி, படிப்படியாக மேல்நோக்கி நகரும். நோய் வளர்ச்சியடையும் போது, புள்ளிகள் பெரிதாகி, கருநிற விளிம்புகளுடன் வெளிர் சாம்பல் நிறமாக மாறும் மொத்தமும் மஞ்சள் நிற ஒளிவட்டங்களால் சூழப்படும். பின்னர் அவற்றின் நடுப்பகுதி சிதைந்து, துளையிட்டு கீழே விழுந்துவிடக்கூடும். இது இலைகளுக்கு கந்தையான தோற்றத்தை அளிக்கிறது. ஈரமான சூழ்நிலையில், புள்ளிகள் அதிக அளவில் வளர்ந்து ஒன்றாக இணைந்து, ஒரு இலக்கு போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. நீள்வட்ட, இருண்ட பழுப்பு நிற புள்ளிகள் எப்போதாவது இலைக்காம்புகள் மற்றும் தண்டுகளில் தோன்றும். பொதுவாக, பழங்களில் அறிகுறிகள் காணப்படாது, ஆனால் சில சந்தர்ப்பங்களில், நீண்ட கால ஈரப்பதமான பருவத்தில் நீர் தோய்த்த பழுப்பு நிற புள்ளிகள் தோன்றலாம்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

இலைகளில் ஏற்படும் சிதைவுகளின் அளவுகளைக் கட்டுப்படுத்த இலங்கை இலவங்கப்பட்டை அடிப்படை எண்ணெய் (0.52 μL/mL) பயன்படுத்தப்படுகிறது. பழங்கள் பாதிக்கப்படுவதற்கு முன்னர் பயிர்களுக்கு சிகிச்சையளிப்பது மிகவும் முக்கியம், இல்லையெனில் சிகிச்சைக்கு எந்த பலனும் இருக்காது.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். அறிகுறிகள் கடுமையாக தோன்றினால், எ.கா. அதிகமான இலைச் சிதைவு ஏற்பட்டால், மான்கோசெப், தாமிரம் அல்லது குளோரோதலோனில் போன்றவற்றைக் கொண்டிருக்கும் பூஞ்சைக் கொல்லிகளை இடைவெளி விட்டு அடிப்பதன் மூலம் இந்த நோயைக் கட்டுப்படுத்த உதவும். பென்சிமிடாஜோல் என்னும் பூஞ்சைக்கொல்லிக்கு எதிர்ப்புத்திறன் காணப்படுகிறது.

இது எதனால் ஏற்படுகிறது

இந்த நோய் காரிநெஸ்போரா காசிகோலா என்னும் பூஞ்சையால் ஏற்படுகிறது. வெப்பமண்டலம் மற்றும் துணை வெப்பமண்டல பகுதிகளில் இந்த நோய் மிகவும் பொதுவானது. இது வெள்ளரி மற்றும் தக்காளி போன்ற தாவரங்களைத் தாக்கும் முக்கிய நோய்க்கிருமி ஆகும் மற்றும் எப்போதாவது பப்பாளி மரங்களை பாதிக்கிறது. இது இலைகளின் அடிப்பகுதியில் உருவாகும் வித்துக்கள் மூலம் பரவுகிறது. இந்த வித்துக்கள் காற்று மற்றும் மழையின் மூலம் பிற தாவரங்களுக்கிடையே பரவுகிறது. ஈரப்பதமான காலநிலைகளில் இந்த நோய்த்தொற்று கடுமையாக ஏற்படுகிறது. அதிகமான இலை சிதைவு விளைச்சலை பாதித்து, பழத்தின் தரத்தைக் குறைக்கிறது. பல வகையான களைகள் மற்றும் அவகெடோ, ரொட்டிப்பழம், மரவள்ளிக்கிழங்கு, சோயாபீன் அல்லது கத்திரிக்காய் ஆகியவை இவற்றின் இரண்டாம்நிலை புரவலன்களுள் அடங்கும்.


தடுப்பு முறைகள்

  • தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கும் அளவிற்கு பப்பாளி மீதான இந்த நோய் மிகவும் தீவிரமானது அல்ல.
  • தக்காளி மற்றும் வெள்ளரிக்காய் வயல்களின் அருகில் பப்பாளி மரங்கள் வளர்ப்பதைத் தவிர்க்கவும்.
  • திறன்மிக்க களை மேலாண்மை பயிர்களுக்கு இடையே நோய் பரவுவதை தடுக்கிறது.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க