அரிசி

நெல் குலை நோய்

Magnaporthe oryzae

பூஞ்சைக்காளான்

5 mins to read

சுருக்கமாக

  • அடர் நிற ஓரங்களுடன் கூடிய வெளிறிய சிதைவுகள் காணப்படும்.
  • கணுப்பகுதிகளும் பாதிக்கப்படலாம்.
  • தண்டுகள் ஒடிந்து போகக்கூடும்.
  • நாற்றுகள் அல்லது இளம் பயிர்கள் இறந்து போகக்கூடும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

அரிசி

அறிகுறிகள்

நெல் குலை நோய் நிலத்திற்கு மேல உள்ள அனைத்து தாவர பாகங்களையும் பாதிக்கும் : இலை, பட்டை, கணு, கழுத்து, கதிர்களின் பாகம், மற்றும் சில நேரங்களில் இலை உறை. இலைகள் கூர்மையான முனைகளுடன் வெளிறிய மஞ்சள் முதல் இளம் பச்சை நிறத்தில், கண்-வடிவ சிதைவுகளுடன் காணப்படும். இந்த சிதைவுகளின் ஓரங்கள் சிதைந்து காணப்படும் மற்றும் அதன் மையப்பகுதி சாம்பல் அல்லது வெள்ளை நிறத்தில் இருக்கும். பயிர்களின் வயது, நோய் பாதிப்பு ஏற்பட்ட நேரம் மற்றும் அவற்றின் வகை ஆகியவற்றை பொறுத்து சிதைவுகளின் அளவு அமையும். இந்த சிதைவுகள் வளரும்போது, இலைகள் படிப்படியாக உலர்ந்து போகும். இலைகள் மற்றும் உறைகள் சேரும் பகுதி பாதிக்கப்பட்டால் கழுத்துப்பட்டைப் பகுதியில் அழுகல் காணப்படும், அந்த சந்திப்புப் பகுதிக்கு மேலுள்ள இலைகள் இறந்துவிடும். கணுப்பகுதியும் பாதிக்கப்படும். இது பழுப்புநிற கணுப்பகுதிகளை உருவாக்கும் மற்றும் தண்டுகள் ஒடிந்து, எப்போதாவது நாற்றங்கால் மற்றும் இளம் பயிர்கள் முழுவதும் இறந்து விடக்கூடும். பிந்தைய வளர்ச்சி நிலைகளில், கடுமையான குலை நோயானது இலை பரப்புகளை குறைத்து, அதன் விளைவாக தானியங்கள் மற்றும் விளைச்சலும் குறைந்துவிடும். இது நெல் பயிர்களை அழிக்கக்கூடிய மிகவும் கடுமையான நோய்களுள் ஒன்றாகும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

இது நாள் வரை,இந்த நோய்க்கான எந்தவொரு பயனுள்ள உயிரியல் கட்டுப்பாடு வழிமுறைகளும் இல்லை. பூஞ்சை மீது ஸ்ட்ரெப்டோமைசஸ் அல்லது சூடோமோனாஸ் பாக்டீரியாவை அடிப்படையாகக் கொண்ட தயாரிப்புகளின் நம்பகத்தன்மையையும் நோயின் தோற்றம்/பரவலையும் அறிய சோதனைகள் நடந்து வருகின்றன.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். திரம் உடனான விதை சிகிச்சை இந்த நோய்க்கு எதிராக நல்ல பலனை தரும். நெல் குலை நோயை கட்டுப்படுத்த அசாக்சிஸ்டிரோபின் அல்லது, டிரையஜோல்ஸ் அல்லது ஸ்டிராபிலூரின்ஸ் குடும்பத்தின் செயல்பாட்டு உள்ளடக்கங்களை கொண்ட பூஞ்சைக்கொல்லிகளை நாற்றங்கால், பக்கக்கன்று மற்றும் கதிர்கள் வெளிவரும் நிலைகளில் தெளிக்கலாம். கதிர்கள் வெளிவரும் நிலையில் ஒன்று அல்லது இரண்டு பூஞ்சை கொல்லி பயன்பாடுகள் இந்த நோயை கட்டுப்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கும்.

இது எதனால் ஏற்படுகிறது

நெல் குலை நோயின் அறிகுறிகளானது மக்னபோர்தே கிரீஸியா என்னும் பூஞ்சையால் ஏற்படுகிறது. இது நெல் பயிர்களை அழிக்கக்கூடிய மிகவும் கடுமையான நோய்களுள் ஒன்றாகும். இது கோதுமை, கம்பு, பார்லி மற்றும் கம்பு போன்ற பிற முக்கிய விவசாய தானியங்களையும் பாதிக்ககூடும். அறுவடைக்குப் பின்னர் வைக்கோல் மீது வாழும் பூஞ்சையானது, அடுத்த பருவத்திற்கு இந்த நோயை எடுத்து செல்கிறது. வழக்கமாக பயிர்கள் முதிர்ச்சியடைந்த நிலையில் நோய்களால் குறைவாகவே பாதிக்கப்படுகின்றன.குளிர்ச்சியான வெப்பநிலை, அடிக்கடி பெய்யும் மழை மற்றும் குறைவான மண் ஈரப்பதம் இந்த நோய்க்கு சாதகமான சூழ்நிலையாகும்.நீண்ட கால இலை ஈரப்பதமானது நோய்த்தொற்று ஏற்படுவதற்கு வழிவகுக்கிறது. மேல்நில நெல்வகைகளில், பனி திவலை உருவாகும் சூழ்நிலைக்கு உட்படுத்தப்படும் நிலங்கள் (இரவு மற்றும் பகல் வெப்பநிலையில் அதிக வித்தியாசம் உடையவை) அதிகப்படியான அபாயத்தில் உள்ளன. இறுதியாக, அதிக நைட்ரஜன் அல்லது குறைந்த சிலிகான் அளவுகளை கொண்ட மண்ணில் நடவு செய்யப்படும் பயிர்களில் நோய் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.


தடுப்பு முறைகள்

  • ஆரோக்கியமான அல்லது சான்றிதழ் பெற்ற விதைப் பொருட்களைப் பயன்படுத்தவும்.
  • எதிர்ப்பு திறன் கொண்ட வகைகளை பயிரிடவும்.
  • பருவ காலத்திற்கு முன்னரே விதைகளை விதைக்கவும் மழைக்காலம் தொடங்கியவுடன்.
  • தழைச்சத்துக்களை அதிகப்படியாக பயன்படுத்துவதைத் தவிர்க்கவும் மற்றும் அதனை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பிரிவுகளாக பிரித்து பயன்படுத்தவும்.
  • வழக்கமான முறையில் நீர்ப்பாசனம் செய்து, தாவரங்களுக்கு அழுத்தம் கொடுப்பதைத் தவிர்க்கவும்.
  • நெற்பயிர் பயிர் முறையாக வளர்வதற்குத் தேவையான நீர் அளவை பராமரிக்கவும்.
  • தொடர்ச்சியாக நீர்ப்பாசனத்தினை அளித்து, வடிகால் விரைவில் ஏற்படுவதைத் தவிர்க்கவும்.
  • களைகள் மாற்றும் மாற்று புரவலன்களை கட்டுப்படுத்தி பராமரிக்கவும்.
  • மண்ணில் சிலிக்கான் பற்றாக்குறை உள்ளது என்று அறியப்பட்டால் சிலிக்கான் உரங்களைப் பயன்படுத்துங்கள்.
  • சிலிக்கானின் மலிவான மூலங்களுள், அதிக சிலிகான் உள்ளடக்கம் கொண்ட அரிசி நெற்பயிர்களின் வைக்கோல்களும் அடங்கும்.
  • நோய்க்கான அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என வயல்களை தொடர்ந்து கண்காணிக்கவும்.
  • வயலில் உள்ள பூஞ்சைகள் பிற இடத்திற்கு பரவுவதை தடுக்க பாதிக்கப்பட்ட அனைத்து தாவர கழிவுகளையும் அழித்து விடவும்.
  • பயிர் சுழற்சியைத் திட்டமிடுவது நோய் பாதிப்பைக் குறைப்பதற்கு எளிய மற்றும் பயனுள்ள வழியாகும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க