மற்றவை

பெனிசிலியம் காது அழுகல் நோய்

Penicillium spp.

பூஞ்சைக்காளான்

5 mins to read

சுருக்கமாக

  • இயந்திரங்கள் ஏற்படுத்தும் காயம் அல்லது பூச்சிகள் ஏற்படுத்தும் காயங்களின் காரணமாகச் சோளத்தின் தானியங்களைத் தாங்கி நிற்கும் காதுகளில் பூஞ்சை பாதிப்பு ஏற்படக்கூடும்.
  • பூசணம் பூத்தாற்போல நீல-பச்சை வண்ணத்தில் தானியங்கள் மற்றும் அதைத் தாங்கியிருக்கும் பகுதியில் காணப்படும்.
  • இதனால் பாதிக்கப்பட்ட சோளம் வெளுக்கப்பட்டது போன்று காட்சி தரும் மற்றும் உள்புறம் அழுகியிருக்கும் (இந்த அறிகுறியினை நீலக் கண் அழுகல் என்பர்).
  • சில நேரங்களில் இந்தப் பூசண வளர்ச்சி போன்ற அறிகுறியானது அறுவடைக்குப் பின்னர் அல்லது சேமித்து வைக்கும்போது மட்டும்தான் தெரியவரும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

மற்றவை

அறிகுறிகள்

அறுவடைக்குப் பின்னர் சோளத் தானியங்களில் பெனிசிலியம் காது அழுகல் நோய் அறிகுறிகள் முதலில் காணப்படும், எனவே இது இப்பெயர் பெற்றது. வளரும் நிலைகளில் பாதிக்கப்படும் பயிர்கள் குன்றிய வளர்ச்சி, வாடுதல் மற்றும் பச்சைய சோகையுடன் காணப்படும். பயிர் வளர்ச்சியின் பிந்தைய நிலைகளில், நோய்க்குக் காரணமான பூஞ்சைகள் சோளக்காதுகளை தாக்கும், பூச்சிகள் ஏற்படுத்திய சிதைவுகள் அல்லது இயந்திரங்கள் ஏற்படுத்திய காயங்கள் போன்றவை நோய்க்காரணி நுழைவதற்கான வழிகள். களப்பணிகள் அல்லது அறுவடையின்போது இயந்திரக் காயங்கள் ஏற்படலாம். அதிகப்படியான வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் போன்றவற்றினால் நீலம்-பச்சை நிறங்களில் பூசணங்கள் காம்புப் பகுதியின் மேற்பரப்பு மற்றும் தானியங்களில் வளரும். பாதிக்கப்பட்ட தானியங்கள் ஒருவகை வெளிறிய தோற்றத்துடன் மற்றும் கோடுகளாக மற்றும் உள்புறம் அழுகிய தோற்றத்துடன் (நீலக்கண் என்று அழைக்கப்படும்) காணப்படும். சில சமயங்களில் இந்த அறிகுறிகள் அறுவடைக்குப் பின்னர் அல்லது சேமிப்பு காலத்தில் மட்டுமே தெரியவரும். தானியங்கள் அழுகுவதால் மகசூல் இழப்புகள் அல்லது அறுவடைக்குப் பிந்தைய இழப்புகள் நேரிடும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

மன்னிக்கவும், அழுகல் நோயினை ஏற்படுத்தும் இப்பூஞ்சைகளுக்கு மாற்றுச் சிகிச்சையாக எங்களிடம் எவ்வித சிகிச்சை முறைகளும் இல்லை. எங்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதன் மூலம் இதுகுறித்து நீங்கள் தெரிந்துகொள்ளலாம். இந்த நோயினைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் ஏதேனும் இருந்தால் எங்களுடன் பகிர்ந்துகொண்டு பிறருக்கும் உதவவும். உங்களிடமிருந்து கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

இரசாயன கட்டுப்பாடு

வேதியியல் முறையிலான கட்டுப்பாடுகளைத் தேர்வு செய்யும் முன்பு ஒருங்கிணைந்த பிற சிகிச்சை முறைகளை எப்போதும் கருத்தில் கொள்ளவும். மான்கோசெப் அல்லது கேப்டான் போன்ற பூஞ்சைக்கொல்லிகள் தேவைப்பட்டால் மட்டுமே பயன்படுத்தவும்.

இது எதனால் ஏற்படுகிறது

இந்த அழுகல் நோயினை ஏற்படுத்தும் பூஞ்சைகளான பெனிசிலியம் பூஞ்சைகள் காற்று வழியே பரவுபவை மற்றும் சுற்றுபுறங்களில் எங்கும் காணப்படுபவை. இவை குறைந்த நீர் இருக்கும் பகுதிகளில் வளரும் திறமைகொண்டது மற்றும் மண்ணில் பாதிக்கப்பட்ட பயிரின் எஞ்சிய பகுதிகளில் வாழும் அல்லது சேமிப்பு பகுதிகளில் வாழும். இவை பெரும்பாலும் காற்றின் மூலம் அல்லது மழைச்சாரல் மூலம் பரவும். அதிக ஈரப்பதம் மற்றும் உயர்த்தப்பட்ட வெப்பநிலைகளில் இவை செழித்து வளரும். பூ பூக்கும் காலம் மற்றும் தானியங்கள் வளரும் காலங்களில் இந்நோய் பொதுவாக ஏற்படும். முதல் அறிகுறிகள் சேமிப்பு காலங்களில் மட்டுமே தென்படும்.


தடுப்பு முறைகள்

  • சான்றிதழ் அளிக்கப்பட்ட மூலங்கள் அல்லது ஆரோக்கியமான பயிர்களில் இருந்து கிடைத்த விதைகளைப் பயன்படுத்தவும்.
  • தடுப்புவகை அல்லது தாங்கும் தன்மை கொண்ட பயிர்களைப் பயிரிடவும்.
  • குறைந்த மழை மற்றும் குறைந்த ஈரப்பதம் இருக்கும் காலகட்டங்களில் தானியங்கள் வளரும் வகையில் விதைப்புக் காலத்தினை சீரமைத்துக் கொள்ளவும்.
  • போதுமான காற்றோட்டத்துடன் பயிர்கள் வளர அவற்றிற்கிடையே தேவையான அளவு இடைவெளிவிட்டுப் பயிரிடவும்.
  • பிறவகை புரவலன்கள் மற்றும் களைகளை நிலத்தில் இருந்து நீக்கவும்.
  • பயிர்களைக் கையாளும்போது அவற்றினைச் சேதப்படுத்திவிடமால் இருக்க சிறப்பு கவனம் எடுத்துக்கொள்ளவேண்டும்.
  • பாதிப்புகளைக் குறைக்க அறுவடையினை முடிந்தவரை விரைந்து முடிக்கவும்.
  • சேமிப்பு நேரங்களில் விதைகளின் ஈரப்பதத்தினை 14% க்கு குறைவாக வைக்கவும், இதன் மூலம் கதிர்களில் பூஞ்சைகள் வளர்ச்சியினைத் தவிர்க்கலாம்.
  • அடுத்து வரும் பருவங்களில் பாதிக்கப்பட்ட தானியங்களை விதைகளாகப் பயன்படுத்தக் கூடாது.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க