வெங்காயம்

வெங்காய இன பூண்டு துரு நோய்

Puccinia porri

பூஞ்சைக்காளான்

5 mins to read

சுருக்கமாக

  • சிறிய வெள்ளைப் புள்ளிகள் இலைகளின் இருபக்கத்திலும் தோன்றும்.
  • புள்ளிகள் பிரகாசமான துருப்பிடித்த ஆரஞ்சு நிற கொப்புளங்களாக மாறும்.
  • இலைகளின் மேற்பரப்பில் பிளவு போன்ற ஓட்டைகள் காணப்படும்.
  • கடுமையான நோய்தொற்று தாவரங்களை மஞ்சள் நிறமாக்கி, வாடி, உலரச் செய்யும்.
  • பூண்டு தாவரங்களின் குமிழ்கள் சுருங்கி, தரம் குறைந்ததாக காணப்படும்.

இதிலும் கூடக் காணப்படும்

2 பயிர்கள்
வெள்ளைப் பூண்டு
வெங்காயம்

வெங்காயம்

அறிகுறிகள்

எந்தவொரு வளர்ச்சி நிலையிலும் நோய்தொற்று ஏற்படலாம் மற்றும் அதன் அறிகுறிகள் முதன்முதலில் இலைகளில் தோன்றும். ஆரம்ப அறிகுறிகள் சிறிய, வெள்ளை புள்ளிகளாக இலை பக்கங்களில் இருபுறமும் தோன்றும். காலப்போக்கில், இந்தப் புள்ளிகள் பிரகாசமான ஆரஞ்சு துருப்பிடித்த கொப்புளங்களாக உருவாகும், இது விதைமூலத்தை உற்பத்தி செய்யும் கட்டமைப்புகளுடன் தொடர்புடையது. கொப்புளங்கள் வளரத் தொடங்குகையில், அவை விதைமூலங்களை வெளியிடுவதற்காக வெடித்துவிடும். இலைகள் இறுதியில் வெளிறிய நிறமாக மாறி, சிதைவுகள் இலைகளின் நீளவாக்கில் உருவாகக்கூடும், சில நேரங்களில் பிளவு போன்ற ஓட்டைகளையும் ஏற்படுத்தக்கூடும். அதிகமான நோய்த்தொற்றின் போது, தாவரங்கள் மஞ்சள் நிறமாகி வாடிவிடும். மேலும் தாவரங்கள் முன்கூட்டியே இறந்து விட நேரிடும். ஆரம்ப வளர்ச்சி நிலையிலேயே தாவரங்கள் பாதிக்கப்பட்டால் அல்லது கடுமையான பாதிப்பு ஏற்பட்டால், சிறிய சுருங்கிய தரம் குறைந்த குமிழ்கள் விளையக்கூடும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

வருமுன் காப்பதே இந்தப் பூஞ்சை நோயை நீண்ட காலம் சமாளிப்பதற்கு ஒரே வழி. கந்தகம் கொண்ட சில சூத்திரங்கள் கரிமமாக கருதப்பட்டு,நோய் தொற்று ஆபத்துகளை குறைக்க ஒரு தடுப்பு முறையாக பயன்படுத்தலாம். இவற்றை வெவ்வேறு முறையில் பயன்படுத்தலாம், உதாரணமாக கந்தக தூளாக தெளிக்கலாம் அல்லது தாவரங்களில் தூவி விடலாம். அல்லது கந்தகத்தை தண்ணீருடன் கலந்து இலைவழி தெளிப்பான்களாக பயன்படுத்தலாம் அல்லது தாவர அடி தளத்தைச் சுற்றி மண்ணில் ஊற்றலாம். முறையான பயன்பாட்டிற்கு, தொடர்புடைய தயாரிப்பு கையேட்டைப் பின்பற்றவும் அல்லது உங்கள் உள்ளூர் வர்த்தகரிடம் கேட்கவும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். அசாக்ஸிஸ்டிராபின் அல்லது மான்கொசெப் போன்றவற்றைக் கொண்டிருக்கும் தயாரிப்புகள் நோய் தொற்று ஆபத்துகளை தடுக்க இலைவழி தெளிப்பான்களாக பயன்படுத்தப்படலாம். இந்த பூஞ்சை நோயை குணப்படுத்த முடியாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

இது எதனால் ஏற்படுகிறது

இந்த நோய் புசினியா போரி என்னும் பூஞ்சையால் ஏற்படுகிறது, இது உயிருள்ள தாவர திசுக்களில் மட்டுமே வாழும். இது குளிர்காலத்தில் மாற்று புரவலன் (களைகள் அல்லது தன்னார்வ தாவரங்கள்) மீது உயிர்வாழும் அல்லது செயலற்ற பருவத்தைக் கடக்க வித்துக்களை உற்பத்தி செய்யும். இந்தப் பூஞ்சை வித்துக்கள் காற்று மற்றும் மழைப்பொழிவுகளால் பிற தாவரங்கள் அல்லது வயல்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. அதிக ஈரப்பதம், குறைந்த மழைபொழிவு மற்றும் 10-20° செல்சியஸ் வெப்பநிலையானது பூஞ்சையின் வாழ்க்கைச் சுழற்சிக்கும், நோய் பரவுதலுக்கும் மிகவும் சாதகமான நிலைகளாக இருக்கின்றன. இச்சூழ்நிலையில், பூஞ்சை வித்துக்கள் புரவலன் தாவரங்களில் தரையிறங்கியவுடன், பூஞ்சை வளர்ச்சியும் காலனித்துவமும் தொடங்குகிறது. வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தின் அளவைப் பொறுத்து, நோய்த்தாக்கம் மற்றும் நோய் பரவுதல் ஆகியவற்றுக்கு இடையேயான இடைவெளி 10-15 நாட்களுக்கு இடையில் அமையும். நோய் பரவுவதற்கான முக்கிய காலம் பிந்தைய கோடைகாலமாகும். இந்த நோய் அதிக விளைச்சல் இழப்பை ஏற்படுத்தும் மற்றும் குமிழ்களின் சேமிப்புத் திறனை குறைக்கும்.


தடுப்பு முறைகள்

  • சான்றளிக்கப்பட்ட மூலத்திலிருந்து ஆரோக்கியமான விதைகள் அல்லது நடவுப் பொருட்களை பயன்படுத்துங்கள்.
  • நல்ல காற்றோட்டம் மற்றும் நோய் பரவுதலைத் தவிர்ப்பதற்கு நடவு வரிசைக்கான பரிந்துரைக்கப்பட்ட இடைவெளியைப் பின்பற்றவும்.
  • தண்ணீர் நன்கு வடிந்தோடக்கூடிய நடவு இடங்களைத் தேர்ந்தெடுத்து, வயல்களில் நல்ல வடிகால் அமைந்திருப்பதை உறுதி செய்யவும்.
  • அதிகமான நீர் பாய்ச்சுவதைத் தவிர்க்கவும்.
  • குமிழ்கள் சேதமடைவதைத் தவிர்க்க, களைகள் அகற்றும் போது மிகவும் கவனமாக கையாளவும்.
  • தழைச்சத்து நிறைந்த மண்ணில் வெங்காய இன செடி வகைகள் நடுவதைத் தவிர்க்கவும்.
  • பொட்டாசியம் நிறைந்த உரங்களைப் பயன்படுத்தவும் (உதாரணமாக பொட்டாஷ் சல்பேட்).
  • இரவில் ஈரப்பதமான நிலையைத் தவிர்க்க காலையில் நீர் பாய்ச்சுவது பரிந்துரைக்கப்படுகிறது.
  • ஏதேனும் நோய் அறிகுறிகள் தென்படுகிறதா என்று உங்கள் தாவரங்கள் அல்லது வயல்களை சோதிக்கவும்.
  • ஆரம்ப அறிகுறிகள் தென்பட்டால் பாதிக்கப்பட்ட தாவரங்களை நீக்கவும், உதாரணமாக அதனை எரித்து அழித்துவிடவும்.
  • குறைந்தபட்சம் 2-3 ஆண்டுகளுக்கு புரவலன் அல்லாத பயிர்களை சுழற்சிக்கு திட்டமிட வேண்டும்.
  • நோய்தொற்று இல்லாத நடவு தளங்களை உறுதி செய்ய அந்நேரத்தில் தானாக வளரும் வெங்காய இன செடி வகைகளை அழிக்கவும்.
  • வயல்களுக்கிடையே நோய் பரவுவதை தடுக்க உங்கள் உபகரணங்கள் மற்றும் கருவிகளைத் தொற்று நீக்கவும் மற்றும் உங்கள் கைகளை அடிக்கடி கழுவவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க