உருளைக் கிழங்கு

கருந்திரள் நோய்

Rhizoctonia solani

பூஞ்சைக்காளான்

5 mins to read

சுருக்கமாக

  • கடினமான, வளர்ந்த கரும் புள்ளிகள் (திரள்கள்) உருளைக் கிழங்குகளின் மேற்பகுதிகளில் உருவாகும்.
  • மேற்புற வேர்கள் மற்றும் புதிய தளிர்கள் மீது பழுப்பு நிற, மூழ்கிய திட்டுக்கள் வெள்ளை பூஞ்சை வளர்ச்சியுடன் காணப்படும்.
  • இலைகள் வாடிப்போகும் மற்றும் வண்ணமிழக்கும்.

இதிலும் கூடக் காணப்படும்


உருளைக் கிழங்கு

அறிகுறிகள்

ஒழுங்கற்ற அளவுகள் மற்றும் வடிவங்கள் உடைய வளர்ந்த கருப்பு பகுதிகள், உருளைக் கிழங்குகளின் மேற்புறத்தில் காணப்படும். இவற்றினை எளிதாக தேய்ப்பதன் மூலம் அல்லது துடைப்பதன் மூலம் நீக்கிவிடலாம். இந்த கருப்புப் பகுதிகளைச் சுற்றி வெள்ளைப் பூஞ்சைகள் இருப்பதை லென்ஸ் வைத்து பார்ப்பதன் மூலம் அறியலாம். புதிய தளிர்கள் மற்றும் தண்டுகளில் தண்டு சொறிநோயின் அறிகுறிகளைப் போல இந்த பூஞ்சைகளின் அறிகுறிகளும் தோன்றும். வேர்களில், பெரும்பாலும் வெள்ளை நிற பூஞ்சை வளர்ச்சியால் சூழப்பட்ட பழுப்பு நிற, மூழ்கிய திட்டுக்கள் காணப்படும். இந்த அழுகல் தண்டினை துளையிட்டு, தண்ணீர் மற்றும் ஊட்டச்சத்துக்களை தடைசெய்தால், இலைகள் நிறமிழந்து, வாடிப்போகும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

உயிரியியல் பூஞ்சைச் கொல்லிகளான டிரிகோடெர்மா ஹார்சியனம் அல்லது நோய்கிருமியல்லாத ரிசோங்டோனியா உயிரிகளை வரப்புகளில் பயன்படுத்தவும். இதன் மூலம் களத்தில் கருந்திரள் நோயினால் ஏற்படும் பாதிப்பு மற்றும் கிழங்குகள் பாதிக்கப்படும் எண்ணிக்கை குறையும். கால்நடை உரங்கள் அல்லது உயிரியல் நச்சு வாயுவினை பச்சை கடுகு எச்சங்களுடன் இணைத்து பயன்படுத்துவது மற்றொரு சாத்தியமான வழிமுறைகள் ஆகும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். ஃப்ளுடையாக்ஸினில் அல்லது தியோபனேட் - மெத்தைல் கலவை மற்றும் மான்கோஸெப் ஆகியவற்றினைக் கொண்டு விதைச் சிகிச்சையினை செய்வதன் மூலம் கருந்திரள் நோய் உட்பட, பல்வகையான பூஞ்சை நோய்களைத் தடுக்க முடியும். வரப்பு சிகிச்சைகளில், ஃப்ளூடனில் அல்லது அசோக்ஸிஸ்ட்ரோபினுடன் இணைத்து பயிரிடலின் மூலம் பூஞ்சைகளின் வளர்ச்சியினைத் தடுக்க முடியும்.

இது எதனால் ஏற்படுகிறது

ரிசோங்டோனியா சோலனி பூஞ்சைகளால் இந்நோய் ஏற்படுகிறது. 5 முதல் 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில், உருளைக் கிழங்குகள் மண்ணில் இல்லாத காலங்களில் கூட வெகுகாலம் இவை மண்ணில் உயிர்வாழும். மண்ணில் இருந்து இவை பரவலாம் அல்லது நோயால் பாதிக்கப்பட்ட கிழங்குகளின் விதைப் பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம் நோய் உருவாகலாம். இப்பூஞ்சைகள் பொதுவாக அழுகலை ஏற்படுத்துவதில்லை, ஆனால் இதனால் பாதிக்கப்பட்ட கிழங்குகளைப் பல்பெருக்கத்திற்குப் பயன்படுத்த கூடாது. குளிர்ந்த மற்றும் ஈரப்பதமான வானிலை நோயினை அதிகரிக்கலாம். செடியின் ஆரம்ப கால வளர்ச்சியில் ஏற்படும் சூடான வெப்பநிலை நோய்த் தாக்கத்தினைக் குறைக்கும். தண்டு அரித்தல் மற்றும் கருந்திரள் நோய் பொதுவாக இலகுவான மற்றும் மணல் போன்ற மண்ணில் ஏற்படக்கூடியவை.


தடுப்பு முறைகள்

  • ஆரோக்கியமான தாவரங்கள் அல்லது சான்றிதழ் வழங்கப்பட்ட மூலங்களிடம் இருந்து பெறப்பட்ட விதைப்பு பொருட்களைப் பயன்படுத்தவும்.
  • பருவகாலத்தின் ஆரம்பத்தில் பயிரிடலைத் தவிர்க்கவும்.
  • சூடான மண்ணில் (8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கு மேல்) விதைக் கிழங்குகளைப் பயிரிடவும்.
  • ஆழமற்ற வரப்புகளைப் பயன்படுத்தி எளிதில் விரைவாக தளிர்கள் மேல் வருவதற்கு வழிசெய்யவும்.
  • மறு பயிரிடலை பிற பயிர்களுடன் செய்து பார்க்கவும்.
  • அறுவடைக்குப் பின்னர் புரவலன் அல்லாத பயிர்களின் எஞ்சிய பகுதிகளை நிலத்திலேயே விட்டுவிடவும்.
  • குறிப்பாக, வறண்ட காலங்களில் சரியான அளவில் நீர்பாசனம் செய்யவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க