உருளைக் கிழங்கு

உருளைக்கிழங்கு பின் கருகல் நோய்

Phytophthora infestans

பூஞ்சைக்காளான்

5 mins to read

சுருக்கமாக

  • அடர் பழுப்பு நிற புள்ளிகள் இலைகளின் ஓரங்கள் மற்றும் ஓரங்களில் உருவாகும்.
  • வெள்ளைப் பூஞ்சைகள் இலையின் கூரிய முனையின் கீழ்புறத்தில் வளரும்.
  • இலைகள் வாடி, இறந்துபோகும்.
  • சாம்பல் மற்றும் ஊதா நிற புள்ளிகள் உருளைக் கிழங்குகளில் காணப்படும்.

இதிலும் கூடக் காணப்படும்


உருளைக் கிழங்கு

அறிகுறிகள்

அடர் பழுப்பு நிற புள்ளிகள் இலைகளில் ஓரங்கள் மற்றும் விளிம்புகளில் தோன்றும். ஈரப்பதமான வானிலைகளில், இந்த புள்ளிகள் நீர் தேங்கிய சிதைவுகள் போன்று காட்சியளிக்கும். வெள்ளைப் பூஞ்சைகள் இலைகளின் அடிப்புறத்தில் தோன்றும். நோயின் வீரியம் அதிகமாகும்போது, இலை முழுவதும் சிதைந்து, பின்னர் பழுப்பு நிறமாகி, அழிந்துவிடும். இதைப் போன்ற சிதைவுகள் தண்டுகள் மற்றும் காம்புகளிலும் பரவத் தொடங்கும். உருளைக் கிழங்குகளில் சாம்பல் – நீல நிறப் புள்ளிகள் தோன்றும், அவற்றின் சதைப்பகுதி பழுப்பு நிறமாகும். இதனால் அவற்றினை உண்ண இயலாது. பாதிக்கப்பட்ட வயல்களின் அழுகிய பகுதிகள் வித்தியாசமான மணத்தினை உருவாக்கும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

காப்பரை அடிப்படையாகக் கொண்ட பூஞ்சைக் கொல்லிகளை வறண்ட வெப்பநிலைக்கு முன்னரே நிலத்தில் பயன்படுத்தவும். இலைவழியே கரிம பூச்சு காரணிகளை தெளித்தல் நோய் தொற்று பாதிப்பினை தடுக்கும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். இந்நோயினைக் கட்டுப்படுத்துவதில், பூஞ்சைக் கொல்லிகளின் பங்கு முக்கியமானதாகும், முக்கியமாக ஈரப்பதமான பகுதிகளில் இவற்றின் பங்கு இன்றியமையாதது. இலைகளின் மீது தொடர் பூஞ்சைக் கொல்லிகளைப் பயன்படுத்துவது நோய் தொற்றுக்கு முன்னர் சிறப்பான பலனைத் தரும், அத்துடன் பூஞ்சைகளில் எதிர்ப்பினை தூண்டாது. மான்டிப்ரோபமிட், குளோரோதலோனில், ஃப்ளுயசினம், அல்லது மான்கோஸெப் போன்றவற்றைக் கொண்ட பூஞ்சைக் கொல்லிகளை நோய் தடுப்பு சிகிச்சையாக பயன்படுத்தலாம். பயிரிடுதலுக்கு முன்பு மான்கோஸெப் போன்ற பூஞ்சைக் கொல்லிகளைக் கொண்டு விதை சிகிச்சை செய்வது நல்ல பலனைத் தரும்.

இது எதனால் ஏற்படுகிறது

இந்தப் பூஞ்சைகள் ஒட்டுண்ணி வகையாகும். இவை குளிர்காலம் முழுவதும் வாழ்வதற்கு மாற்று புரவலன்கள், பயிரின் எஞ்சிய பகுதிகள் மற்றும் கிழங்குகளைப் பயன்படுத்திக்கொள்ளும். பயிர்களில் உள்ள சிதைவுகள் மற்றும் வெட்டுக்கள் வழியே இவை பயிர்களின் உள்ளே நுழைகின்றன. பூஞ்சைகளின் வித்துக்கள் வசந்த காலத்தில், அதிகப்படியான வெப்பநிலையில் உருவாகி, நீர் மற்றும் காற்றின் மூலம் பரவுகின்றன. குளிர்ச்சியான இரவுகள் (18 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கும் கீழே), வெப்பமான நாட்கள் (18 முதல் 22 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கு இடையில்), அதிகப்படியான மழை மற்றும் பனி (90% ஒப்பு ஈரப்பதம்) ஆகிய வேளைகளில் நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும். இந்த சூழ்நிலைகளில் இந்நோயின் தொற்று ஏற்படும்.


தடுப்பு முறைகள்

  • நல்ல ஆரோக்கியமான விதைகளை பயன்படுத்தவும் அல்லது சகிப்புத் தன்மை கொண்ட பயிர்களைப் பயன்படுத்தவும்.
  • பயிரிடும் நிலத்தில் நல்ல காற்றோட்ட வசதி மற்றும் நன்கு உலர்ந்த மண் இருப்பதை உறுதி செய்துவிட்டு பயிரிடவும்.
  • வயல்களை கண்காணித்து, பாதிக்கப்பட்ட தாவரங்களை மற்றும் வயல்களை சுற்றியுள்ள தேவையற்ற தாவரங்களை அகற்றவும்.
  • புரவலன் அல்லாத பயிர்களை கொண்டு இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு பயிர்சுழற்சி செய்யவும்.
  • தானாக வளர்ந்த தேவையற்ற பயிர்கள் களத்திலோ அல்லது களத்திற்கு வெளியிலோ இருப்பின் அவற்றினை நீக்கிவிடவும்.
  • நைட்ரஜன் கலந்த உரங்களை அதிகமாக பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
  • செடிகளை பலப்படுத்தும் காரணிகளை பயன்படுத்தவும்.
  • குறைந்த வெப்பநிலை மற்றும் காற்றோட்டமான பகுதிகளில் கிழங்குகளை சேமித்து வைக்கவும்.
  • அறுவடைக்குப் பின்னர் நிலத்தில் இருக்கும் கிழங்குகள் மற்றும் பயிரின் எஞ்சிய பகுதிகளை இரண்டு அடி ஆழமுள்ள குழியில் போட்டு புதைக்கலாம் அல்லது விலங்குகளுக்கு உண்பதற்கு கொடுக்கலாம்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க