முலாம்பழம்

Citrullus lanatus

நீர் பாய்ச்சுதல்
இடைப்பட்ட அளவு

பயிர் சாகுபடி
நேரடி விதைப்பு

அறுவடை செய்தல்
70 - 100 நாட்கள்

தொழிலாளர்
இடைப்பட்ட அளவு

சூரிய வெளிச்சம்
முழு சூரியன்

ஹைட்ரோஜன் அயனிச்செறிவு மதிப்பு
6 - 7.5

வெப்பநிலை
0°C - 0°C

உரமிடுதல்
இடைப்பட்ட அளவு

முலாம்பழம்

முன்னுரை

தர்பூசணி தென்னாப்பிரிக்காவை பூர்வீகமாக கொண்டது. இது ஒரு பாலைவன பழமாகும், இது புரதங்கள், தாதுக்கள் மற்றும் மாவுச்சத்துக்களுடன் 92% தண்ணீர் சத்தினைக் கொண்டுள்ளது. தர்பூசணிகள் முக்கியமாக மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, பஞ்சாப், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் பயிரிடப்படுகின்றன.

பயிர் ஆலோசனை

பராமரிப்பு

பராமரிப்பு

மற்ற பயிர்களைப் போலல்லாமல், தர்பூசணி செடிகளில் உள்ள பூக்கள் சொந்தமாக பழங்களாக உருவாக முடியாது. இந்த தாவரத்தின் சிறப்பு என்னவென்றால், ஆண் மற்றும் பெண் பூக்கள் ஒரே தாவரத்தில் தனித்தனியாக உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆண் பூக்கள் சிறியதாக முதலில் தோன்றும், பெண் பூக்கள் பெரியதாக, பின்னர் தோன்றும். பெண் பூக்கள் தன் அடிவாரத்தில் ஒரு சிறிய பழத்தைக் கொண்டிருக்கும். அது சுருங்கிவிட்டால், மகரந்தச் சேர்க்கை நடைபெறாது என்று அர்த்தம். இயற்கையில், தேனீக்கள் தேனை சேகரிப்பதற்காக பூப்பூவாய் வட்டமிடும்போது, மகரந்தத்தை கொண்டு செல்கின்றன. எனவே, தர்பூசணி வயலில் ஒரு செயற்கை தேன் கூட்டினை அமைப்பது நல்ல யோசனையாக இருக்கும்.

மண்

ஆழமான வளம் மிக்க மற்றும் நன்கு வடிந்த மண்ணில் தர்பூசணி நன்றாக வளரும். மணற்பாங்கான அல்லது மணற்பாங்கான பசளை மண்ணில் வளரும்போது இது சிறந்த பலனைத் தரும். மண்ணிலிருந்து நீர் எளிதில் வடிந்துவிட வேண்டும், இல்லையெனில் கொடிகளில் பூஞ்சை தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. ஒரே வயலில் ஒரே பயிரை தொடர்ச்சியாக வளர்ப்பது ஊட்டச்சத்துக்கள் இழப்பு, மோசமான மகசூல் மற்றும் அதிக நோய் தாக்குதலுக்கு வழிவகுக்கும் என்பதால் பயிர் சுழற்சியைப் பின்பற்றுங்கள். மண்ணின் ஹைட்ரஜன் அயனிச்செறிவு 6.0 முதல் 7.5 வரை இருக்க வேண்டும். அமில மண் விதைகளை வாடச் செய்துவிடும். நடுநிலையான ஹைட்ரஜன் அயனிச்செறிவை உடைய மண் விரும்பப்பட்டாலும், மண் சற்று காரமாக இருந்தாலும் நன்றாக வளரக்கூடும்.

தட்பவெட்பநிலை

வெயில் கால பயிர் என்பதால், தாவரத்திற்கு பழங்களை உற்பத்தி செய்ய போதுமான சூரிய ஒளி மற்றும் வறண்ட வானிலை தேவைப்படுகிறது. இந்தியாவில், காலநிலை பெரும்பாலும் வெப்பமாக இருப்பதால், அனைத்து பருவங்களும் தர்பூசணி சாகுபடிக்கு ஏற்றதாக இருக்கிறது. இருப்பினும், தர்பூசணி குளிர் மற்றும் உறைபனிக்கு உணர்திறன் கொண்டது. எனவே, குளிர்காலம் கடுமையாக இருக்கும் நாட்டின் சில பகுதிகளில், உறைபனி கடந்த பிறகு தர்பூசணிகள் பயிரிடப்படுகின்றன. விதை முளைப்பதற்கும் தர்பூசணி தாவரங்களின் வளர்ச்சிக்கும் 24-27⁰ செல்சியஸ் வரையிலான வெப்பநிலை சிறந்தது.

வரக்கூடிய நோய்கள்

முலாம்பழம்

பிளான்டிக்ஸில் பயிரை எவ்வாறு வளர்ப்பது என்பது குறித்த அனைத்தையும் அறியுங்கள்!

முலாம்பழம்

Citrullus lanatus

முலாம்பழம்

பிளான்டிக்ஸ் செயலி மூலம், பயிர்களை ஆரோக்கியமாக வளர்த்துப் பெரும் விளைச்சலை அறுவடை செய்திடுங்கள்!

முன்னுரை

தர்பூசணி தென்னாப்பிரிக்காவை பூர்வீகமாக கொண்டது. இது ஒரு பாலைவன பழமாகும், இது புரதங்கள், தாதுக்கள் மற்றும் மாவுச்சத்துக்களுடன் 92% தண்ணீர் சத்தினைக் கொண்டுள்ளது. தர்பூசணிகள் முக்கியமாக மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, பஞ்சாப், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் பயிரிடப்படுகின்றன.

முக்கிய தகவல்கள்