தக்காளி செடியில் இது போல் மாவு பூச்சி வருகிறது என்ன செய்ய வேண்டும்?மாடியில் தொட்டியில் வைத்து இருக்கிறேன். தக்காளி சின்ன சின்ன காய் ஆகவே இருக்கு பழம் ஆக எவ்வளவு நாள் ஆகும்?
தக்காளி செடியில் இது போல் மாவு பூச்சி வருகிறது என்ன செய்ய வேண்டும்?மாடியில் தொட்டியில் வைத்து இருக்கிறேன். தக்காளி சின்ன சின்ன காய் ஆகவே இருக்கு பழம் ஆக எவ்வளவு நாள் ஆகும்?
Shanmuga 68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
ஆம் உங்கள் பயிரில் மாவுப்பூச்சி தாக்கியுள்ளது. தண்ணீரை வேகமாக செடியின் மீது ஸ்ப்ரே செய்யுங்கள் பிறகு இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் மூன்றையும் 100 கிராம் எடுத்து நன்றாக அரைத்து சாறு எடுத்து வைத்துக்கொள்ளுங்கள் அந்த சாறுடன் ஒரு லிட்டர் தண்ணீர் 5 எம்எல் வேப்பெண்ணை கலந்து செடியின் மீது தெளித்து விடுங்கள் ஒரு வாரத்திற்கு ஒரு முறை இவ்வாறு தொடர்ந்து செய்யுங்கள் மேலும்காய் உதிராமல் இருக்க தேமோர் கரைசல் பயன்படுத்துங்கள். தேவையான பொருட்கள் புளித்த மோர் – 5 லிட்டர் ,தேங்காய்ப்பால் – 1 லிட்டர், தேங்காய் துருவல் – 10 தேங்காய், அழுகிய பழங்கள் – 10 கிலோ தயாரிப்பு முறை புளித்த மோர் மற்றும் தேங்காய்ப்பால் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து ஒரு மண்பானை அல்லது பிளாஸ்டிக் கேனில் இட்டு, நிழலான இடத்தில் வைக்க வேண்டும். இவற்றுடன் 10 தேங்காய்களின் துருவல், அழுகிய பழங்கள் 10 கிலோ இவற்றை பொட்டலம் போல் கட்டி அதில் போட வேண்டும். தினமும் கரைசலைக் கலக்கி வரவேண்டும். ஏழு நாட்களில் தேமோர்க் கரைசல் தயாராகி விடும். 8-ம் நாள், ஒரு லிட்டர் தண்ணீரில் 50 மில்லி தேமோர்க் கரைசல் என்ற விகிதத்தில் கலந்து, காலை அல்லது மாலை நேரத்தில் செடிகளுக்குத் தெளிக்கலாம். Kayal Samayal
Kayal 6
4 ஆண்டுகளுக்கு முன்பு
நன்றி
Shanmuga 68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
Welcome Kayal Samayal
Tufail 443262
4 ஆண்டுகளுக்கு முன்பு
Hi dear Kayal Samayal very simple first of all check for Mealybug i suspected there is mealybugs attack and then do the application of isabion syngenta. Isabion is the best PGR to boost the growth of your plants and during flowers stage it will be more good to apply planofix of bayer it will save the flowers from falling down and will increase your yield too dear thank you so much for sharing in plantix with time by time good care of disease
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!