நடவு செய்து 22 நாட்கள் ஆகின்றது. பிபிடி ரகம். முதல் களை எடுத்து உரம் போட்டாச்சு. இலை சுருட்டு புழு தாக்குதல் தென்படுகிறது. வேப்பங்கொட்டை கரைசல் தெளிக்கலாமா.? பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தவே தயக்கமாக உள்ளது முதல் உரம் இடும்போது குருணை மருந்து போட்டேன் கடையில் "கார்போஃபியூரான்" கொடுத்தார்கள். தமிழ்நாடு அக்ரி ஆப்ல இலை சுருட்டு புழு பற்றி படிக்கும் போது கார்போஃபியூரான் குருணைகளை பயன்படுத்தாதீர்கள் இலை சுருட்டு புழூ அதிகமாகும் என போட்டிருந்தது. இதை படித்ததும் அதிர்ச்சியாக இருந்தது. இலை சுருட்டு புழு அதிகமாகும் என்றால் ஏன் அதை விற்பனை செய்கிறார்கள்.? உரம் பூச்சிக்கொல்லிகள் கண்டுபிடிப்பதற்கு முன்பு எப்படி விவசாயம் செய்திருப்பார்கள் என வியப்பாக உள்ளது.
பூச்சி கொல்லிகள் பூச்சிகளை கொல்லவா.? பூச்சிகளை பெருக்கவா.?
Shanmuga
68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Vinoth Rice Leafroller (லிங்க்) இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே Vinoth
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!Vm.Logesh
427
3 ஆண்டுகளுக்கு முன்பு
ஆரோக்கியமான உணவு இயற்கை விவசாயம்.
Raj
169
3 ஆண்டுகளுக்கு முன்பு
Leaf roller and kuruthu puchii ku rendum kekera matheri fertilizers sollunga mam Shanmuga Priya
Shanmuga
68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Raj குருத்துப் பூச்சி தாக்குதலும் உள்ளதா??? இரண்டிற்கும் ஒரே மருந்து சரிவராது தோழரே. Fame அல்லது coragen மருந்தை முயற்சி செய்து பாருங்கள் Raj
Vm.Logesh
427
3 ஆண்டுகளுக்கு முன்பு
Vinoth நீங்கள் எந்த முறையில் விவசாயம் செய்கிறார்கள்.இயற்கையா.செயற்கையா
Vinoth
89
3 ஆண்டுகளுக்கு முன்பு
Vm.Logesh பெரும்பாலும் பூச்சி மருந்துகள் பயன்படுத்துவது இல்லை.
Raj
169
3 ஆண்டுகளுக்கு முன்பு
Cannon marunthu koduthanga Shanmuga Priya mam adikalama sollunga