இதற்கு என்ன தீர்வு . தண்டு நுனி பகுதி முதல் மேல்வரை காய்ந்த காணப்படுகிறது. இலைகள் கருகி நிலையிலும் மேலும் பச்சை மற்றும் மஞ்சள் கலந்த நிறத்துடனும் காணப்படுகின்றது
தண்டுகள் உடைய மேல் உரையானது காய்ந்த நிலையிலும் காணப்படுகிறது கருப்பு நிற படுகை காணப்படுகிறது
Shanmuga
68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
Stem Rot of Rice (லிங்க்) இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே Gauthaman
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!Gauthaman
81
4 ஆண்டுகளுக்கு முன்பு
குருத்துப் பூச்சி மற்றும் தண்டு அழுகல் நோய் இரண்டும் ஒன்றா..? இரண்டிற்கும் என்ன வித்தியாசம்...
Shanmuga
68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
இரண்டும் வேறு. Gauthaman
Gauthaman
81
4 ஆண்டுகளுக்கு முன்பு
குருத்துப் பூச்சி தாக்குதல் ஏற்படாமல் இருக்க முன்கூட்டியே மருந்து ஏதேனும் அடிக்கலாமா பருவநிலை மாற்றங்களால் சற்று பயமாக உள்ளது.....
Shanmuga
68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
Gauthaman Yellow Stem Borer DuPont கம்பெனியின் Ferterra ஒரு ஏக்கருக்கு 4 கிலோ பயன்படுத்தலாம். Gauthaman
Gauthaman
81
4 ஆண்டுகளுக்கு முன்பு
Ferterra இதை எவ்வாறு பயன்படுத்துவது உரத்துடன் பயன்படுத்தலாமா...? அல்லது தண்டு அழுகல் நோய்க்குப் பயன்படுத்தப்படும் மருந்துகளுடன் கலந்து பயன்படுத்தலாமா....
Shanmuga
68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
Gauthaman குருத்துப் பூச்சி தாக்காமல் இருப்பதற்கு அடியுரமாக ஒரு ஏக்கருக்கு 4 கிலோ பயன்படுத்த வேண்டும்
Gauthaman
81
4 ஆண்டுகளுக்கு முன்பு
அதை எதனோடு கலந்து எப்படி பயன்படுத்துவது Shanmuga Priya
Shanmuga
68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
நடவு செய்து 20 முதல் 30 நாட்களில் நாலு கிலோ மருந்தை 20 கிலோ மணலுடன் சேர்த்து அடியுரமாக போடுவதால் இந்த குருத்துப்பூச்சி முற்றிலும் தடுத்து விடமுடியும். Gauthaman
Gauthaman
81
4 ஆண்டுகளுக்கு முன்பு
Shanmuga Priya ஆனால் தோழி நான் நடவு செய்து 70 நாட்கள் ஆகின்றது.. தண்டின் அடிப்பகுதியில் கருது சூல் ஆகிய நிலையில் உள்ளது ..ஒரு சில இடங்களில் குருத்துப்பூச்சி தாக்குதல் தென்படுகின்றது என்ன செய்வது..?
Gauthaman
81
4 ஆண்டுகளுக்கு முன்பு
Shanmuga Priya மேலும் இன்று மா ஒன்றுக்கு நான்கு மரக்கால் யூரியா மற்றும் மூன்று மரக்கால் பொட்டாஷ் கொடுத்துள்ளேன்..
Shanmuga
68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
Gauthaman அடுத்த முறை பயிர் செய்யும் பொழுது இந்த fertrerra பயன்படுத்துங்கள். சில இடங்களில் குருத்துப் பூச்சி இருந்தால் அவற்றை Corogen மருந்தை ஒரு ml எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம். அல்லது fame மருந்தையும் பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம். Gauthaman
Shanmuga
68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
Gauthaman குருத்து அழுகல் நோயா அல்லது குருத்துப்பூச்சி யா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
Gauthaman
81
4 ஆண்டுகளுக்கு முன்பு
Shanmuga Priya குருத்துப்பூச்சி உள்ளது ,.ஆனால் ஒரு சில இடங்களில் மட்டுமே தென்படுகிறது... என்னுடைய பயிரில் பாக்டீரியா கருகல் நோய் உள்ளதால் அதற்குரிய மருந்தை நாளை மறுநாள் பயன்படுத்துவதாக இருக்கிறேன் மேலும் குருத்துப் பூச்சி தாக்குதலும் உள்ளது கவலை அளிக்கிறது...
Raja
271
4 ஆண்டுகளுக்கு முன்பு
நாத்தங்கல் குருத்து பூச்ச வருமா. அதற்கு தீர்வு என்ன மருந்து சொல்லவூம் Shanmuga Priya
Shanmuga
68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
Raja .C வயது முதிர்ந்த நாற்றுக்களை நடும் பொழுது குருத்துப் பூச்சி தாக்குதல் இருக்கும்
Gauthaman
81
4 ஆண்டுகளுக்கு முன்பு
Shanmuga Priya திருந்திய நெல் சாகுபடி முறையில் பாய் நாற்றங்கால் விட்டு உள்ளேன்... இன்றுடன் நாற்றுவிட்டு பத்து நாட்கள் ஆகிறது ...ஏதேனும் உரம் கொடுக்க வேண்டுமா...? அசோஸ்பைரில்லம் மற்றும் சூடோமோனஸ் கலந்து விதை நேர்த்தி செய்து விட்டு உள்ளேன்....
Raja
271
4 ஆண்டுகளுக்கு முன்பு
நாற்றங்களில் சரி செய்ய மருந்து அடாக்கலாமா... கடந்த"இரு வருடமாக இந்த பிரச்சனை....ஆட்கள் பற்றாகுறையால் 35 நடவு செயகிறேன்... சரி செய்ய"தீர்வு"கூறவும்....... Shanmuga Priya
M.
0
4 ஆண்டுகளுக்கு முன்பு
Shanmuga Priya spray panunga sp 1akaruku 250gm m45 250gm lamda.5ec 250ml zinc 250ml spray panunga
Vm
3
3 ஆண்டுகளுக்கு முன்பு
அனைவருக்கும் வணக்கம் எனது வயலில் கிச்சடி சம்பா மாப்பிள்ளை சம்பா பாய் நாற்றங்கால் அமைத்துள்ளேன் இது 15 நாள் நாத்து இப்படி இருக்கிறது இதற்கு என்ன என்ன காரணம் நான் இயற்கை முறையில் என்ன செய்யலாம் இதற்கு யாராவது பதில் சொல்லுங்கள்.
Shanmuga
68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Vm Natural Farm ஊட்ட சத்து பற்றாக்குறையால் இவ்வாறு ஏற்பட்டுள்ளது. அடி உரம் போட்டீர்களா??
Vm
3
3 ஆண்டுகளுக்கு முன்பு
உரம் மற்றும் பூச்சி மருந்து எதுவும் கொடுக்கவில்லை விதை விதைக்கும் போது வேஷ்டி கம்போசர் விதைநேர்த்தி செய்து விதை விட்டேன் வேற எந்த மருந்து கொடுக்கவில்லை. ஒரு சில நாத் கேக்கு மட்டுமே இப்படி இருந்தது மற்ற நாற்றுகள் நன்றாக உள்ளன
Shanmuga
68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Vm Natural Farm ஊட்டச்சத்து பற்றாக் குறையால் தான் இவ்வாறு ஏற்பட்டுள்ளது. நீங்கள் இயற்கை விவசாயம் செய்வதால் மீன் அமினோ அமிலத்தை யோ பஞ்சகாவியா வையோ பயன்படுத்துங்கள்
திருமலை
0
3 ஆண்டுகளுக்கு முன்பு
எனது பயிர் நுனியில் பழத்து காணப்படுகிறது என்ன செய்ய வேண்டும் அய்யா?