மக்காச்சோளம்

மக்காசோளம் இலைக் கீற்று வைரஸ்

MSV

நோய்க்கிருமி

5 mins to read

சுருக்கமாக

  • நோய்த் தொற்று நிலைகளின் ஆரம்பத்தில், இளம் இலைகளின் அடிப்பகுதியில் சிறிய, வெளிறிய, வட்ட வடிவிலான புள்ளிகள் காணப்படும்.
  • புள்ளிகளின் எண்ணிக்கை பின்னர் அதிகரித்து மற்றும் பின்னர் ஒன்றிணைகின்றன.
  • இவை இலை நரம்புகளுக்கு இணையாகக் குறுகலான, வெள்ளை முதல் மஞ்சள் நிறக் கோடுகளாக உருவாக்குகிறது.
  • இவை இலை முழுவதையும் மூடிவிடுகிறது மற்றும் இவை தாவரங்களின் வளர்ச்சி குன்றிப்போகுதல், வளர்ச்சி முழுமையற்ற சோளக்காதுகள் மற்றும் பலவீனமான தானியங்கள் நிரப்புதல் போன்றவற்றுக்கு வழிவகுக்கிறது.

இதிலும் கூடக் காணப்படும்

5 பயிர்கள்
பார்லிகோதுமை
மக்காச்சோளம்
சோளம்
கரும்பு
மேலும்

மக்காச்சோளம்

அறிகுறிகள்

தாவர வகைகள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைமைகளைப் பொறுத்து, அறிகுறிகள் சிறிது வேறுபடுகின்றன. நோய்த் தொற்று நிலைகளின் ஆரம்பத்தில், இளம் இலைகளின் அடிப்பகுதியில் சிறிய, வெளிறிய, வட்ட வடிவிலான புள்ளிகள் காணப்படும். நோய்த்தொற்று அதிகரிக்கையில், புள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்து மற்றும் ஒருங்கிணைய முனைகின்றன. நோய்த்தொற்று ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் கொண்ட தாவர வகைகளில், இந்தப் புள்ளிகள் இலை நரம்புகளுக்கு இணையாகக் குறுகலான, வெள்ளை-மஞ்சள் நிறக் கோடுகளாக உருவாகிறது. நோய்த்தொற்றானது தாவர வளர்ச்சியின் ஆரம்ப காலத்தில் ஏற்பட்டால், இந்தக் கோடுகள் மொத்த இலையையும் மூடிவிடும் மேலும் இவை தாவரங்களின் வளர்ச்சி குன்றிப்போகுதல், வளர்ச்சி முழுமையற்ற சோளக்காதுகள் மற்றும் மஞ்சரிகள், அத்துடன் பலவீனமான தானியங்கள் நிரப்புதல் போன்றவற்றுக்கு வழிவகுக்கிறது.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

மன்னிக்கவும், எம்.எஸ்.வி.க்கு எதிரான வேறு எந்த மாற்றுச் சிகிச்சைகளையும் நாங்கள் அறியவில்லை. இந்த நோயை எதிர்த்துப் போராட உதவும் வகையில் ஏதாவது ஒன்றை நீங்கள் அறிந்திருந்தால் எங்களைத் தொடர்பு கொள்ளவும். உங்களிடம் இருந்து செய்தியை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். வைரஸ் நோய்களுக்கான இரசாயன சிகிச்சை எதுவும் இல்லை.நோயைப் பரப்பும் காரணியின் எண்ணிக்கை குறைப்பானது பொதுவாக நோய் பரப்பு விகிதங்கள் குறைக்க வழிவகுக்கிறது. டைமீதோயேட் அல்லது மாலதியான் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட தயாரிப்புகளை இலைத் தொகுதிகளில் பயன்படுத்தலாம், ஆனால் சாத்தியமான விளைச்சல் இழப்பு மற்றும் நோய் திடீரென ஏற்படுதல் பற்றிய நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையைச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.

இது எதனால் ஏற்படுகிறது

மக்காச்சோள இலைக் கோடு நோய் பெரும்பாலும் ஆப்பிரிக்க கண்டத்தில் ஏற்படும் நோயாகும், ஆனால் இது தென்கிழக்கு ஆசியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது. இது வைரஸால் ஏற்படுகிறது மேலும் இந்த வைரஸ் சிகாடுலினா தத்துப்பூச்சியின் சில இனங்களால் பரவுகிறது. இந்தப் பூச்சிகள் வளரும் இளம் இலைகளை உண்ணுவதன் மூலம் இந்த வைரஸை தொற்றிக்கொள்கிறது. பூச்சியின் வளர்ச்சி காலம் வானிலை நிலைமைகளைப் பொறுத்து, 22 முதல் 45 நாட்கள் வரை இருக்கும். 20 - 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இதன் வளர்ச்சிக்கு உகந்ததாக இருக்கிறது, மற்றும் இதன் விளைவாக பயிர்களுக்கு நோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. பல தானிய வகைகள் மாற்று வைரஸ் புரவலனாகச் செயல்படுகிறது (கோதுமை, ஓட், கம்பு, பார்லி, சோளம்... போன்றவை)


தடுப்பு முறைகள்

  • ஆரோக்கியமான தாவரங்கள் அல்லது சான்றளிக்கப்பட்ட மூலங்களில் இருந்து பெறப்படும் விதைகளைப் பயன்படுத்தவும்.
  • நோய் எதிர்ப்புத் திறன் அல்லது சகிப்புத் திறன் கொண்ட தாவர வகைகள் கிடைக்கப்பெற்றால் அவற்றைப் பயன்படுத்தவும்.
  • வெட்டுக்கிளிகளை ஈர்க்கும் மாற்றுப் புரவலன்களைக் கொண்டு பயிர்ச் சுழற்சி செய்யவும், மற்றும் இதனால் பயிர்களுக்கு ஏற்படும் நோய்த்தொற்றுகளைக் குறைக்க முடியும்.
  • தத்துப் பூச்சியின் இயக்கங்களைக் குறைக்கத் தடைகளைப் பயன்படுத்தவும்.
  • வயல்களைக் கண்காணித்து, பாதிக்கப்பட்ட தாவரங்கள் ஏதேனும் தென்பட்டால் அவற்றை எடுத்து மற்றும் அழித்துவிடவும்.
  • வயலில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் உள்ள களைகளைக் கட்டுப்படுத்தவும்.
  • ஒரே வயலில் இரண்டு மக்காச்சோளப் பயிர்களை இணைப்பதைத் தவிர்க்கவும்.
  • பீன்ஸ், தட்டைப்பயறு அல்லது பிற மாற்றுப் புரவலன் பயிர்கள் போன்ற அவரை வகைகளை கொண்டு பயிர் சுழற்சி செய்யவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க