உளுந்து & பச்சை பயிறு

உளுந்து பயிரின் துரு நோய்

Uromyces phaseoli

பூஞ்சைக்காளான்

5 mins to read

சுருக்கமாக

  • இலைகளின் கீழ்ப்புறத்தில் சிறிய, வட்ட வடிவ சிவந்த-பழுப்பு நிற கொப்புளங்கள் காணப்படும்.
  • கொப்புளங்கள் பின்னர் இணைந்து பெரிய பகுதிகளாக மாறி, இலைகளின் மேற்புறத்தில் காணப்படும்.
  • பருவ காலத்தின் இறுதியில் நேரியல்பான, கரும் பழுப்பு நிற பகுதிகள் தோன்றும்.
  • நோய்தொற்றுகள் இலை காம்புகள், காய்கள் மற்றும் தண்டுகளில் காணப்படும்.இலைகள் வறண்டு, சுருங்கி, விழுந்து விடும்.
  • இது இலை உதிர்வு மற்றும் விளைச்சல் இழப்புக்கு வழிவகுக்கும்.

இதிலும் கூடக் காணப்படும்


உளுந்து & பச்சை பயிறு

அறிகுறிகள்

பொதுவாக இலைகளின் கீழ் புறத்தில், வெள்ளை பூஞ்சை வளர்ச்சி புள்ளிகளுக்கு மத்தியில், இந்த நோய்க்கான ஆரம்ப அறிகுறிகள் சிறிய, வட்ட வடிவ, சிவந்த பழுப்பு நிற கொப்புளங்களாக வளரும். இந்த கொப்புளங்கள் சிறிய கொத்துக்களாக தோன்றும், பின்னர் அவை இலை பரப்புகளில் பெரிய பகுதிகளாக ஒன்றோடொன்று இணைந்துகொள்ளும். கூடுதலாக, பருவ காலத்தின் இறுதியில் நேரியல்பான, கரும்பழுப்பு நிற பகுதிகள் தோன்றும். கடுமையான தொற்று இலைகளின் மேற்பரப்பை பாதித்து, இதன் விளைவாக இலைகளை கொப்புளங்களால் சூழ்ந்து கொள்ளும். இலைகள் உலர்ந்து, சுருங்கி, கீழே விழும். நோய் தொற்றின் இத்தகைய நிலையில், இலை காம்புகள், காய்கள் மற்றும் தண்டுகளும் பாதிக்கப்படலாம். அதிகப்படியான இலை உதிர்வு, கடுமையான விளைச்சல் இழப்பை ஏற்படுத்துகிறது.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

நோய்தொற்று கண்டறிந்த பிறகு, சால்வியா அஃபிஸினாலிஸ் மற்றும் போடென்டில்லா எரக்டா ஆகியவற்றின் தாவரச் சாறுகள் பூஞ்சை வளர்ச்சிக்கு எதிராக திறம்பட செயல்படுகிறது.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்க பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். நோய்த்தொற்று அவற்றின் கடைசி நிலையில் கண்டறியப்பட்டால், இரசாயன சிகிச்சைகள் பயனளிக்காது. பூஞ்சைக் கொல்லிகள் தேவைப்பட்டால், மான்கோசெப், கார்பன்டசிம், பிராப்பிகொனாஜொல், செம்பு அல்லது கந்தக கலவைகள் கொண்ட தயாரிப்புகளை இலைவழி தெளிப்பான்களாக பயன்படுத்தலாம் (பொதுவாக 3 கிராம்/லிட்டர் தண்ணீர்). நோய்த்தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்ட உடனேயே சிகிச்சைகளை ஆரம்பிக்க வேண்டும் மற்றும் 15 நாட்களுக்குப் பிறகு மீண்டும் அதனை செய்யவும்.

இது எதனால் ஏற்படுகிறது

நோய் கிருமிகள் மண்ணில் உள்ள தாவர கழிவுகள் அல்லது மாற்று புரவலன்களில் வாழும். முதன்மை நோய்தொற்றானது, மண்ணிலிருந்து சிதல்கள் தாவரங்களின் அடிப்பகுதியில் உள்ள முதிர்ந்த இலைகளுக்கு பரவுவதன் மூலம் ஏற்படுகிறது. காற்று மூலம் ஒரு தாவரத்திலிருந்து பிற தாவரங்களுக்கு பரவுவதன் மூலம் இரண்டாம் நிலை நோய் தொற்று ஏற்படும். சூடான வெப்பநிலை (21 முதல் 26 டிகிரி செல்சியஸ் வரை), ஈரப்பதம் மற்றும் இரவில் கடுமையான பனியுடன் கூடிய மேகமூட்டமான வானிலை இந்த நோய் ஏற்படுவதற்கு மற்றும் பரவுவதற்கு சாதமாக அமைகிறது.


தடுப்பு முறைகள்

  • ஆரோக்கியமான தாவரங்களிலிருந்து விதைகள் அல்லது சான்றளிக்கப்பட்ட நோய்க்கிருமி இல்லாத விதைகளை பயன்படுத்தவும்.
  • உங்கள் பகுதியில் கிடைக்கும் நோய் எதிர்ப்பு திறன் கொண்ட தாவர வகைகளை பயன்படுத்தவும்.
  • உங்கள் வயலின் அருகில் மாற்று புரவலன்களை நடுவதை தவிர்க்கவும்.
  • உங்கள் வயலில் உள்ள மாற்று புரவலன்கள் மற்றும் களைகளை அகற்றவும்.
  • பாதிக்கப்பட்ட தாவரங்களின் பாகங்கள் ஏதேனும் உள்ளதா என கண்காணித்து அவற்றை அகற்றவும்.
  • ஒவ்வொரு மூன்று முதல் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை புரவலன் அல்லாத பயிர்களைக் கொண்டு பயிர் சுழற்சி செய்யவும்.
  • ஆழமாக உழுதல் வேண்டும், தாவர கழிவுகளை எரித்து அகற்றிவிடவும் அல்லது புதைத்துவிடவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க