பப்பாளி

பப்பாளியின் கரும்புள்ளி நோய்

Asperisporium caricae

பூஞ்சைக்காளான்

5 mins to read

சுருக்கமாக

  • இலைகளின் அடிப்பகுதியில் பழுப்பு நிற புள்ளிகள் தோன்றும்.
  • இந்த புள்ளிகள் பின்னர் பெரிதாகி, கருப்பு நுண்துகள்கள் கொண்ட கொப்புளங்களாக பெரிதாகும்.
  • பழங்களின் மீது கரு நிற மையங்களுடன் மேலோட்டமான, வெளிர் பழுப்பு நிற சிதைவுகள் காணப்படும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

பப்பாளி

அறிகுறிகள்

ஆரம்பத்தில், சிதறிய பழுப்பு நிற புள்ளிகள், சில நேரங்களில் மஞ்சள் நிறத்தில் இலைகளின் அடிப்பகுதியில் காணப்படும். . இலைகளின் அடிப்பகுதியில், இந்தப் புள்ளிகள் பின்னர் பெரிதாகி, கருப்பு நுண்துகள்கள் கொண்ட கொப்புளங்களாக 4 மிமீ விட்டங்கள் வரை வளரும். நோய் மேலும் அதிகரித்த பிறகு, இந்தக் கொப்புளங்கள் மேலும் சிதைவடைந்து, இலைகளின் பெரும் பகுதிகளில் படரும். பிற பூஞ்சை நோய்கிருமிகளுடன், அதிகமான தொற்றுநோய்கள் அல்லது கூட்டு நோய்த்தொற்றுகளின்போது, நோயுற்ற இலைகள் கீழே விழுந்து, பாதிக்கப்பட்ட மரங்களின் வீரியத்தைக் குறைக்க செய்யும். நடுவில் கருப்புப் பூஞ்சை புள்ளிகளுடன் மெல்லிய, வெளிர் பழுப்பு நிற ஒழுங்கற்ற சிதைவுகள் பாதிக்கப்பட்ட பழங்கள் மீது காணப்படுகின்றன. இது இலைகளில் காணப்படுவதை விட குறைவான அளவில் இருக்கும். ஆரம்பகால வளர்ச்சி நிலைகளில் பழங்கள் பாதிக்கப்படும் போது, முதிர்ச்சியடைவதற்கு முன்னரே அந்த பழங்கள் கீழே விழுந்துவிடும். சிதைவுகள் ஏற்பட்டபோதிலும், பழத்தின் சதைகள் அழுகக்கூடிய எந்த அறிகுறிகளையும் வெளிப்படுத்தாது.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

அஸ்பெரிஸ்போரியம் கேரிகே நோய்த்தொற்றுக்கு எதிரான மாற்று சிகிச்சைகள் இன்னும் கண்டறியப்படவில்லை. இந்த நோயை எதிர்த்துப் போராட உதவும் வகையில் ஏதாவது ஒன்றை நீங்கள் அறிந்திருந்தால் தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும். உங்களிடமிருந்து பதிலை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். டிதியோகார்பாமேட் போன்ற இலைவழி பூஞ்சைக்கொல்லி தெளிப்பான்கள் கடுமையான நோய் தொற்றுகளின்போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இது எதனால் ஏற்படுகிறது

இந்த நோயின் அறிகுறிகள் அஸ்பெரிஸ்போரியம் கேரிகே என்னும் பூஞ்சையால் ஏற்படுகிறது. இந்த நோய் மத்திய அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவின் மேற்கு பகுதிகள் மற்றும் கிழக்கு-ஆப்பிரிக்காவில் அதிகளவில் காணப்படுகிறது. இலைகள் மற்றும் பழங்கள் இரண்டும் பாதிக்கப்படும், பயிர் வகைகள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைமைகளைப் பொறுத்து அறிகுறிகள் சிறிது மாறுபடும். இலைகளின் அடிப்பகுதிகளில் மற்றும் ஈரப்பதமான காலங்களில் நோயின் தீவிரம் அதிகமாக இருக்கும். பப்பாளி மட்டுமே இந்த நோய்குறியின் ஒரே அறியப்பட்ட புரவலன் ஆகும். சாதாரணமாக சிறிய தாக்கத்தைக் கொண்டிருப்பதால், பழங்கள் மீதான அறிகுறிகள் பொதுவாக மேலோட்டமானவை. இருப்பினும், இந்த நோய் பழத்தின் தரத்தை குறைக்கக்கூடும்.


தடுப்பு முறைகள்

  • பாதிக்கப்பட்ட தாவரப் பகுதிகள் அல்லது விழுந்த பழங்களை அகற்றி அழித்துவிடவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க