நாரத்தை / சாற்றுக்கனி வகைகள்

எலுமிச்சையின் விதைப்புள்ளி நோய்

Glomerella acutata

பூஞ்சைக்காளான்

5 mins to read

சுருக்கமாக

  • இலைகளில் பழுப்பு நிற புள்ளிகள் காணப்படும்.
  • புள்ளிகள் உதிர்ந்து, கீழே விழுந்துவிடும்.
  • இலைகள் மற்றும் இளம் தளிர்கள் கருகி, உதிர்ந்து விடும்.
  • இளம் பழங்கள் உரியக் காலத்திற்கு முன்னரே விழுந்துவிடும்.

இதிலும் கூடக் காணப்படும்


நாரத்தை / சாற்றுக்கனி வகைகள்

அறிகுறிகள்

எலுமிச்சையின் விதைப்புள்ளி நோய், மலர்கள், இளம் இலைகள் மற்றும் பழங்களை பாதிக்கிறது. மேலும் சிதைவுகள் சிறிய புள்ளிகளிலிருந்து, பெரும் பகுதிகளை மறைக்கும் அளவு வரை படரக்கூடும். இலைகளும், பழங்களும் பெரும்பாலும் கொட்டி விடும். கிளைகள் பட்டுப் போய்விடும், இதன் விளைவாக "உலர்ந்த முனை"-இன் அறிகுறிகள் தோன்றும். இலைகளின் அறிகுறிகள் சிதைந்த புள்ளிகளாகவும், இந்த சிதைந்த புள்ளிகள் உதிர்ந்த பின், குண்டுகளால் துளையிடப்பட்டது போன்ற ஒரு தோற்றத்தையும் ஏற்படுத்தும். கடுமையான தொற்றுநோய்களால் இலைகளும், இளம் தளிர்கள் முழுவதும் கருகி விழுந்துவிடும். கூடுதலாக, தளிர்கள் நுனியிலிருந்து உள்நோக்கி இறந்துவிட, இலைகளின் உருமாற்றம் ஏற்படலாம். இளம் பழங்களின் நோய்த் தொற்று, பொதுவாக உரியக் காலத்திற்கு முன்னரே அவற்றை விழுந்துவிடச் செய்யும். தாமதமான தொற்றுகள் பெரும்பாலும், பழங்களில் சிதைவுகளோடு, பெரிய ஆழமான காயங்களையும் ஏற்படுத்தும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

மன்னிக்கவும், குளோமெரெல்லா அக்யுடாட்டாவிற்கு எதிரான, வேறு மாற்று சிகிச்சையைப் பற்றி நாங்கள் அறியவில்லை. இந்த நோயை எதிர்த்துப் போராட உதவும் வகையில் உங்களுக்கு ஏதாவது தெரிந்திருந்தால் எங்களைத் தொடர்பு கொள்ளவும். உங்கள் குறிப்புகளைக் கேட்க ஆவலுடன் காத்திருக்கிறோம்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகளோடு, தடுப்பு நடவடிக்கைகளும் ஒருங்கிணைந்து கிடைத்தால், அத்தகைய அணுகுமுறையை எப்பொழுதும் கருதுங்கள். கேப்டான் அல்லது மானெப் ஆகியவற்றின் அடிப்படையிலான பூஞ்சைக் கொல்லிகள், குளோமெரெல்லா அக்யுடாட்டாவிற்கு எதிராகச் சிறந்த சிகிச்சையை வழங்க முடியும். பூக்கும் நிலையிலேயே சிகிச்சையைத் தொடங்கிவிடவும்.

இது எதனால் ஏற்படுகிறது

இந்த நோயின் நோய்தொற்றியல் முழுமையாக ஆய்வு செய்யப்படவில்லை. எலுமிச்சையின் விதைப்புள்ளி நோய், பட்டுப் போன கிளைகளிலும், முதிர்ந்த இலைகளின் சிதைவுகளிலும் பருவங்களைக் கடந்து சமாளித்து வாழும். நீர் தெளிப்பின் மூலம் வித்துகள் பரவுவதைத் தொடர்ந்து, இளம் திசுக்களை மட்டுமே இது பாதிக்கும். எப்போதும் எலுமிச்சையில் திரளாக புது இலைகள் தோன்றுவதும், இந்த திசுக்களில் உற்பத்தி செய்யக்கூடிய பெரும் அளவிலான தொற்றுப் பொருளைக் கொண்டிருப்பதும், எலுமிச்சையின் விதைப்புள்ளி நோயை கட்டுப்படுத்துவதைக் கடினமாக்குகின்றன.


தடுப்பு முறைகள்

  • எதிர்ப்பு சக்தி வாய்ந்த வகைகள் கிடைத்தால், அவற்றை வளர்க்கவும்.
  • ஆரோக்கியமான தாவரங்களில் இருந்தோ, சான்றளிக்கப்பட்ட இடங்களின் இருந்தோ பெற்ற விதைகளைப் பயன்படுத்தவும்.
  • நடவு செய்வதற்கு முன்னர் இலைகளின் புள்ளிகளுக்காக, நாற்றுகளை சோதிக்கவும்.
  • நோய் அறிகுறிகள் உள்ளனவா என்று பழத்தோட்டத்தை அடிக்கடி கண்காணியுங்கள்.
  • அறுவடைக்குப் பிறகு வயல் கழிவுகளை அகற்றி விடவும் அல்லது எரித்து விடவும்.
  • காற்றோட்டத்தை அதிகரிக்க எலுமிச்சை மரங்களுக்கு இடையில் போதுமான இடைவெளியை உறுதி செய்யவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க