மற்றவை

கோதுமையின் இலை மற்றும் உமி கொப்புளங்கள்

Parastagonospora nodorum

பூஞ்சைக்காளான்

5 mins to read

சுருக்கமாக

  • நீர் தேங்கிய, சிறிய வெளிறிய சிதைவுகள் அடிப்புற இலைகளில் தோன்றும்.
  • பின்னர் பழுப்பு நிற முட்டை வடிவிலான கொப்புளங்கள் மஞ்சள் நிற ஓரங்களுடன் இலைகளில் ஏற்படும்.
  • மிகச்சிறிய பழுப்பு நிற கனி உடலுடன் பெரிய சாம்பல் நிற சிதைவுகள், பெரிதும் பாதிக்கப்பட்ட இலைகளில் காணப்படும்.
  • அடர் பழுப்பு முதல் அடர் ஊதா வரையிலான சிதைவுகள் உமிகளில் ஏற்படும்.
  • நாற்றுகள் பழுப்பு தளிர் நிற விளிம்புகளுடன் வளரும்.

இதிலும் கூடக் காணப்படும்

2 பயிர்கள்
பார்லிகோதுமை
கோதுமை

மற்றவை

அறிகுறிகள்

நீர் தேங்கிய, சிறிய வெளிறிய சிதைவுகள் அடிப்புற இலைகளில் தோன்றும். நோயானது கீழ்ப்புற இலையிலிருந்து தொடங்கி கொடியிலை வரை பரவும். காயங்கள் பின்னர், மஞ்சள் நிற ஓரங்களுடன் பழுப்பு நிற, முட்டை அல்லது ஒழுங்கற்ற கொப்புளங்களாக மாறும். நோய்கள் அதிகரிக்கையில், பெரிய சாம்பல் நிற காயங்களில் சிறிய பழுப்பு நிற கனி உடலங்களை உருப்பெருக்கி அல்லது நுண்ணோக்கி பயன்படுத்தி காணலாம். மோசமாக பாதிக்கப்பட்ட இலைகள், விளிம்புகளில் இருந்து கொப்புளங்களால் சூழப்பட்டு இறந்துவிடும். பூத்தலுக்குப் பின்னர், ஈரமான வானிலையில் உமிகளிலும் சிதைவுகள் உருவாகும். பெரும்பாலும், அறிகுறிகள் நுனிகளில் தொடங்கும், ஆனால் முழுப்பகுதிகளும் சாம்பல் நிற பகுதிகளுடன் அடர் பழுப்பு முதல் அடர் ஊதா நிற காயங்களால் சூழப்பட்டிருக்கும் (“உமியின் கொப்புளங்கள்”). அதிகமான பாதிப்புகள் எடை குறைதல், சுருங்கிய தானியங்களுக்கு வழிவகுக்கும். பாதிக்கப்பட்ட விதைகளில் ஒழுங்கற்ற வளர்ச்சி காணப்படும் மற்றும் நாற்றுக்கள் பழுப்பு தளிர் விளிம்புகளுடன் வளர்ந்திருக்கும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

மன்னிக்கவும், பாராஸ்டாகோனோஸ்போரா நோடோரம் எனும் இப்பூஞ்சைகளுக்கு எதிராக தற்போது எங்களிடம் எவ்வித மாற்று சிகிச்சை முறைகளும் இல்லை. எங்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதன் மூலம் இதுகுறித்து நீங்கள் தெரிந்துகொள்ளலாம். இந்த நோயினைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் ஏதேனும் இருந்தால் எங்களுடன் பகிர்ந்துகொண்டு பிறருக்கும் உதவவும். உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

இரசாயன கட்டுப்பாடு

நோய் ஏற்படுவதினால் விளையும் அபாயங்களை குறைக்க இரசாயன சிகிச்சை பயனுள்ளதாக இருக்கும், ஆனால் சிறிய இடங்களுக்கு சாத்தியமல்ல. பூஞ்சைக் கொல்லிகள் தேவைப்பட்டால், டைஃபெனோகோனஸோல், டிரைஅடிமெனோல் அல்லது ஃப்ளூகுயின்கோனாஸோல் போன்றவை கலந்த தயாரிப்புகளை பயன்படுத்தலாம். வேளாண்மை முறை மற்றும் நோய் ஏற்படும் காலத்தை பொறுத்து இதனைப் பயன்படுத்தும் முறை வேறுபடலாம்.

இது எதனால் ஏற்படுகிறது

பாராஸ்டாகோனோஸ்போரா நோடோரம் எனும் பூஞ்சைகளால் இந்த இலை நோய் ஏற்படுகிறது. இப்பூஞ்சைகள் கோதுமையின் வைக்கோல், பாதிக்கப்பட்ட விதைகள் அல்லது புரவலன் பயிர்களில் உயிர்வாழும். பூஞ்சைகள் நீரின் மூலம் பரவும், மேலும் இவை பரவுவதற்கு 12 முதல் 18 மணி நேர ஈரப்பதம் தேவை. மண்ணிற்கு அருகேயுள்ள முதிர்ந்த இலைகள் முதலில் பாதிக்கப்படும். பின்னர் காற்று அல்லது மழைச் சாரல்கள் அல்லது காற்றின் மூலம் பயிரின் மேல்பாகங்களுக்கும், பிற பயிர்களுக்கும் பரவுகின்றன. பருவகாலத்திற்குப் பின்னர் ஏற்படும் பாதிப்புகளில், நோய் பரவல் மேற்புறம் வரை சென்றால் உமியில் கொப்புளங்களை ஏற்படுத்தும். இது தானியங்களை சுருங்க செய்து, விளைச்சலை குறைத்து விடும். பருவ காலத்தின் பிற்பகுதியில் வித்துக்கள் காற்றின் மூலம் பரவி வெகுதொலைவில் உள்ள பிற நிலங்களிலுள்ள பயிர் நாற்றுக்களைப் பாதித்து, நோயினை பரவச் செய்யும் ஆற்றல் கொண்டவை. இதன் காரணமாக பின்னர் பயிரிடப்படும் பயிர்களில் சீக்கிரம் நோய்த்தொற்று ஏற்படும் மற்றும் ஒழுங்கற்ற முறையில் வளர்ச்சி இருக்கும். வெப்பநிலை 7 டிகிரி செல்சியஸ்க்கு குறைவாக இருக்கும்போது இதன் வாழ்க்கை சுழற்சி நின்றுவிடும். 20-27 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இந்நோய் வளர்ச்சிக்கான வெப்பநிலையாகும்.


தடுப்பு முறைகள்

  • நோய்க்காரணிகள் அல்லாத சான்றளிக்கப்பட்ட மூலங்கள் அல்லது ஆரோக்கியமான பயிர்களிடம் இருந்து கிடைத்த விதைகளைப் பயன்படுத்தவும்.
  • சகிப்புத் தன்மை கொண்ட பயிர்கள் அல்லது நீண்ட வைக்கோல் வகைகள் உங்கள் பகுதிகளில் கிடைத்தால் அவற்றினை பயன்படுத்தவும்.
  • தாமதமாக முதிரும் கோதுமை வகைகளை பயன்படுத்தவும் அல்லது பருவக்காலத்தின் பிந்தைய பகுதிகளில் நடவு செய்யவும்.
  • பயிரிடும்போது உகந்த விதைத்தல் அடர்த்தியினை பயன்படுத்தவும்.
  • வளர்ச்சி சீரமைப்பிகளை நடுத்தரமான அளவில் பயன்படுத்தவும், சமமான அளவில் உரமளிக்கவும்.
  • மண்ணின் பொட்டாசியம் அளவு ஆரோக்கியமான பயிர்களுக்கு போதுமான அளவில் இருப்பதை உறுதிசெய்யவும்.
  • களத்தில் அல்லது பயிர்களில் நோய் பாதிப்புகள் குறித்து ஆராய்ந்து பார்க்கவும்.
  • களைக் கொல்லிகளை நடுத்தரமான அளவில் பயன்படுத்தவும்.
  • புரவலன் அல்லாத பயிர்களை கொண்டு பயிர் சுழற்சியினை மேற்கொள்ளவும்.
  • எஞ்சிய பயிர்களை ஆழமாக உழுது புதைத்துவிடவும்.
  • வைக்கோல் மற்றும் பிற எஞ்சிய பயிர் பாகங்களை களத்திலிருந்து நீக்கவும்.
  • தானாக வளரும் பயிர்களை நீக்கவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க