நிலக்கடலை

வேர்க்கடலை துரு நோய்

Puccinia arachidis

பூஞ்சைக்காளான்

5 mins to read

சுருக்கமாக

  • முதலில் துரு போன்ற கொப்புளங்கள் இலைகளுக்கு அடிப்புறத்தில் தோன்றும்.
  • அதிகப்படியாக பாதிக்கப்பட்ட இலைகளில் இருபுறங்களிலும் இது போன்ற கொப்புளங்கள் காணப்படும்.
  • அதனைத் தொடர்ந்து இலைகள் மஞ்சள் நிறமாக மாறும், இறுதியாக இலைகள் சுருங்கிவிடும்.
  • இலை உதிர்தல் மற்றும் அதிகப்படியான விளைச்சல் இழப்புகளும் தொடரக்கூடும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

நிலக்கடலை

அறிகுறிகள்

வேர்க்கடலையில் துரு நோய் சிறிய,வட்ட வடிவில், ஆரஞ்சு பழுப்பு நிற துருபோன்ற கொப்புளமாக இலைகளின் அடிப்புறங்களில் தோன்றும். இவை அநேக நேரங்களில் மஞ்சள் நிற ஒளிவட்டங்களால் சூழப்பட்டிருக்கும். இவை இலைகளின் வளர்ச்சியினைத் தடுத்து, செடியினையும் பாதிக்கும். இந்நோய் வளர்ச்சியடையும் போது துரு போன்ற கொப்புளங்கள் இலைகளின் இருபுறங்களிலும் தோன்றி இலைகள் வெகுவாக பாதிக்கப்படும். அத்துடன் இலைகள் விரைவில் மஞ்சள் நிறமாக மாற்றமடைந்து இறுதியில் சுருங்கிவிடும். நீட்டிய சிவந்த பழுப்பு (பின்னர் கருப்பு) நிறம் கொண்ட கொப்புளங்கள் தண்டு, முளைகள் மற்றும் இலைக்காம்பு போன்றவற்றில் காணப்படலாம். இதனைத் தொடர்ந்து இலை உதிர்தல் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இந்த நோய் காய்கள் மற்றும் தீவன பயிர்களின் விளைச்சல் மற்றும் எண்ணெய்யின் தரத்தை பெருமளவில் குறைக்கக்கூடும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

உயிரியல் காரணிகள் நோயினால் ஏற்படும் பாதிப்பினை கட்டுப்படுத்த உதவும். சால்வியா அஃபிசினலிஸ் மற்றும் போடெண்டில்லா எரெக்ட்டா ஆகியவற்றிலிருந்து எடுக்கப்பட்ட சாறு, பூஞ்சைகள் வளர்ச்சியினைத் தடுத்து இலைகளுக்கு பாதுகாப்பு வழங்கக்கூடியவை. ஆளி விதை எண்ணெய் மற்றும் வேர்க்கடலை எண்ணெய் போன்ற பிற தாவர சாறுகள் கூட நோய் தாக்கத்தினைக் குறைக்கும் தன்மை கொண்டவை.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். இந்நோய் அதிகமாக வளர்ச்சியடைந்துள்ளதை கண்ட பின்னர் வேதியியல் காரணிகள் கொண்டு தடுப்பது இயலாத செயல்முறை. பூஞ்சைக் கொல்லிகள் தேவைப்பட்டால் மான்கோஸேப், ப்ரோபிகொனாஜோல் அல்லது குளோரோதலோனில் (3 கி/லி தண்ணீர்) அடங்கிய இலைத்திரள் தெளிப்பான்களைப் பயன்படுத்தலாம். நோய் தொற்று இருப்பதை கண்டறியப்பட்ட உடனே சிகிச்சை முறைகளை கையாள தொடங்கிவிட வேண்டும், மேலும் தொடர்ந்து 15 நாட்களுக்கு அடுத்து மறுபடியும் சிகிச்சையினைக் கையாள வேண்டும்.

இது எதனால் ஏற்படுகிறது

வேர்க்கடலை துரு நோயானது மண்ணில் இருக்கும் பயிர் கழிவுகள் அல்லது மாற்று புரவலனாக செயல்படும் பிற அவரையின தாவரங்களில் வாழும். பரவும் தன்மையை கொண்ட வித்துக்கள் இலைகளின் அடிப்புறத்தில் தொற்றுவதன் மூலம் ஆரம்ப கால பாதிப்பு துவங்குகிறது. காற்றின் மூலம் வித்துக்கள் பரவுவதினால் இதன் இரண்டாம் நிலை பாதிப்பு ஏற்படுகிறது. சாதகமான சுற்றுப்புறச் சூழ்நிலைகளினால் பாதிக்கப்பட்ட பகுதிகள் விரைவாக விரிவடையும் தன்மையுடையது. உதாரணமாக, வெதுவெதுப்பான வெப்பநிலை (21 முதல் 26 டிகிரி செல்சியஸ்) மற்றும் ஈரமான, மேகமூட்டமான வானிலை (பனிமூட்டம் அல்லது அதிகப்படியான இரவு நேர பனிப்பொழிவு) சூழ்நிலைகள். தண்டு மற்றும் வேர்ப் பகுதிகளின் வளர்ச்சிகளை இது ஒடுக்கும், இதனால் வளர்ச்சி குன்றிய செடிகளே உருவாகும். அதிகப்படியான பாஸ்பரஸ் கொண்ட உரங்களை மண்ணில் பயன்படுத்துவதன் மூலம் இந்நோய்த் தாக்கத்தினைக் குறைக்கலாம்.


தடுப்பு முறைகள்

  • சான்றளிக்கப்பட்ட மூலங்கள் அல்லது ஆரோக்கியமான செடிகளிடம் இருந்து கிடைக்கும் விதைகளை மட்டும் பயன்படுத்தவும்.
  • நோய் எதிர்ப்பு திறன் கொண்ட வகைகளை பயன்படுத்தவும்.
  • செடிகளுக்கு இடைப்பட்ட தூரத்தினை அதிகப்படுத்தி தாவரங்களுக்கு இடையேயான அதிக ஈரப்பதத்தினைக் குறைக்கவும்.
  • வயல்களில் மற்றும் அதனை சுற்றி வளர்ந்திருக்கும் களைகள் மற்றும் தானாக வளர்ந்திருக்கும் பிற பயிர்களை கட்டுப்படுத்தவும்.
  • மாற்று புரவலன்களை உங்கள் வயலுக்கு அருகாமையில் பயிரிடுவதைத் தவிர்க்கவும்.
  • நோயின் தாக்கத்தினைக் குறைக்க அதிகப்படியாக பாஸ்பரஸ் கலந்த உரங்களைப் பயன்படுத்தவும்.
  • பாதிக்கப்பட்ட செடிகளை நீக்கவும் அல்லது அழித்து விடவும் மற்றும் உங்கள் கழிவுகளை எரிக்கவும் அல்லது புதைக்கவும்.
  • ஒவ்வொரு மூன்று முதல் நான்கு ஆண்டுகள் இடைவெளியில், புரவலன் அல்லாத பயிர்களை கொண்டு பயிர் சுழற்சி செய்தல் பரிந்துரைக்கப்படுகிறது.
  • தொடர்ச்சியான பயிரிடலுக்கு இடையே நிலத்தை நீண்ட காலத்திற்கு தரிசாக விடுவது பற்றியும் திட்டமிடல் வேண்டும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க