தக்காளி

நீர்க்கட்டு

Transpiration disorder

மற்றவை

சுருக்கமாக

  • இலைகள், தண்டுகள் மற்றும் பழங்களில் கொப்புளங்கள் காணப்படும்.
  • இலைகள் உடையும்.

இதிலும் கூடக் காணப்படும்


தக்காளி

அறிகுறிகள்

இலைகளின் அடிப்பகுதியில் நீர் தோய்த்த கொப்புளங்கள் மற்றும் மஞ்சள் நிற புள்ளிகள் காணப்படும். இது இலைகள் அசாதாரணமாக சுருண்டு கொள்ளும் தன்மையை ஏற்படுத்தும். தண்டுகள் மற்றும் பழங்களிலும் கொப்புளங்கள் ஏற்படலாம். இலைகள் உடையக்கூடியதாக மாறும் மற்றும் தொடும்போது அவை வெடிக்கலாம். கொப்புளங்கள் இலை அமைப்பைப் பலவீனப்படுத்துவதே இதற்குக் காரணம். நீர்க்கட்டு பொதுவாக தாவரத்தின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதில்லை என்றாலும், இது காய்கறிகளை விற்பனைக்குக் குறைவான ஈர்ப்புடையதாக ஆக்கி, பொருளாதார இழப்புகளுக்கு வழிவகுக்கும். சூழ்நிலைகள் சரியாக இருந்தால் காய்கறி பயிர்களின் அனைத்து மென்மையான பகுதிகளிலும் நீர்க்கட்டு ஏற்படலாம்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

இந்தப் பிரச்சனை நோய்ப்பூச்சியோ நோயோ அல்ல; எனவே, கரிமக் கட்டுப்பாடு தேவையில்லை அல்லது கரிமக் கட்டுப்பாடு இதற்குப் பொருத்தமானது அல்ல.

இரசாயன கட்டுப்பாடு

இந்தப் பிரச்சனை நோய்ப்பூச்சியோ நோயோ அல்ல; எனவே, இரசாயனக் கட்டுப்பாடு தேவையில்லை அல்லது இரசாயனக் கட்டுப்பாடு இதற்குப் பொருத்தமானது அல்ல.

இது எதனால் ஏற்படுகிறது

அதிகப்படியான நீர்ப்பாசனம், மண்ணின் மோசமான வடிகால், குளிர் மற்றும் மேகமூட்டமான நாட்கள், அதிக ஈரப்பதம். தாவரங்கள் தண்ணீரை வழக்கமாக உறிஞ்சுவதை விட வேகமாக உறிஞ்சும்போது நீர்க்கட்டு ஏற்படுகிறது. பெரும்பாலும் மேகமூட்டமான நாட்களில் போதிய வெளிச்சம், அதிக ஈரப்பதம் அல்லது குறைந்த காற்றோட்டம் போன்றவற்றின் காரணமாக நீர் அதிகம் தேங்குகிறது. முட்டைக்கோஸ் மற்றும் தக்காளி இந்தப் பிரச்சனையால் குறிப்பாக எளிதில் பாதிக்கப்படுகின்றன, அதுவும் நீர் தேங்கியிருக்கும் மண்ணில் அதிகம் பாதிக்கப்படுகின்றன. நீர்க்கட்டால் ஏற்படும் கொப்புளங்கள் வானிலை நிலைமைகள் மேம்படும்போது கூட நீடிக்கின்றன.


தடுப்பு முறைகள்

  • அதிகப்படியான நீர்ப்பாசனத்தைத் தவிர்க்கவும், குறிப்பாக குளிர்ந்த மற்றும் மேகமூட்டமான நாட்களில் தாவரங்களைச் சிறிது உலர வைக்க வேண்டும்.
  • காற்றோட்டத்தை அதிகரிக்கவும் மற்றும் காற்று சுழற்சியை மேம்படுத்த தாவரங்களை நெருக்கமாக நடுவதைத் தவிர்க்கவும்.
  • வானிலை சூழல்கள் நீர்க்கட்டுக்கு சாதகமாக இருக்கும்போது நீர்ப்பாசனத்தைக் குறைக்கவும், ஆனால் தாவரங்களை முழுமையாக உலர விடாதீர்கள்.
  • எப்பொழுதும் காலையில் மட்டுமே தண்ணீர் பாய்ச்சுங்கள்.
  • குறிப்பாக தாவரங்கள் மெதுவாக வளரும் காலக்கட்டங்களில் அதிக உரமிடுவதைத் தவிர்க்கவும்.
  • மண்ணில் உள்ள பொட்டாசியம் மற்றும் கால்சியம் அளவுகளின் மீது கவனம் செலுத்துங்கள், ஏனெனில் இந்தப் பொருட்கள் தாவர திசுக்களின் நிலைத்தன்மைக்கு உதவுகின்றன.
  • சில தாவர வகைகள் நீர்க்கட்டி மிகவும் எதிர்க்கக்கூடிய தன்மை கொண்டதாக இருக்கும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க