உருளைக் கிழங்கு

கிழங்கு நிறமாற்றம்

Anthocyanin pigmentation

மற்றவை

சுருக்கமாக

  • உருளைக்கிழங்கினுள் இளஞ்சிவப்பு நிறமாற்றம் காணப்படும்.

இதிலும் கூடக் காணப்படும்


உருளைக் கிழங்கு

அறிகுறிகள்

உருளையின் கிழங்குகளுக்குள் இளஞ்சிவப்பு அல்லது ஊதா நிற வளையம் போன்ற பகுதி அல்லது கொப்புளங்கள் காணப்படும். இளஞ்சிவப்பு நிறம் பிரகாசத்தில் மாறுபடும். சில நேரங்களில் நிறமாற்றம் முழுவதுமாக உள்ளே பரவும். மஞ்சள் தோல் கொண்ட சில வகையான உருளைக்கிழங்குகள் வெளியிலும் இளஞ்சிவப்பு நிறத்தைக் காட்டலாம்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

இந்தப் பிரச்சினைக்குக் காரணம் நோய்ப்பூச்சியோ நோயோ அல்ல; எனவே, இதற்குக் கரிமக் கட்டுப்பாடு தேவையில்லை அல்லது இதற்குக் கரிமக் கட்டுப்பாடு பொருத்தமானது அல்ல.

இரசாயன கட்டுப்பாடு

இந்தப் பிரச்சினைக்குக் காரணம் நோய்ப்பூச்சியோ நோயோ அல்ல; எனவே, இதற்குக் கரிமக் கட்டுப்பாடு தேவையில்லை அல்லது இதற்குக் கரிமக் கட்டுப்பாடு பொருத்தமானது அல்ல. இந்த அறிகுறிகள் பயிரில் ஒருமுறை ஏற்பட்டுவிட்டால், அவை போகாது.

இது எதனால் ஏற்படுகிறது

உருளையின் கிழங்குகளில் உள்ள இளஞ்சிவப்பு நிறமாற்றம், அந்தோசயனின் நிறமி எனப்படுகிறது, இது பல காரணங்களால் ஏற்படலாம். உருளைக்கிழங்கு இலைச் சுருள் வைரஸால் பாதிக்கப்படும்போது சில வகைகளில் இந்த இளஞ்சிவப்பு நிறம் தோன்றும். இந்த நிறமி சுற்றுச்சூழல் நிலைமைகளாலும் ஏற்படலாம். உதாரணத்திற்கு, ஒளியின் வெளிப்பாடு, குறிப்பாக மேற்பரப்புக்கு அருகிலுள்ள கிழங்குகள் மீது ஒளியின் வெளிப்பாடு, குளிர்ச்சியான இரவுகளும் சூடான நாட்களும் மாறி மாறி வருவது அல்லது உலர்ந்த அல்லது நைட்ரஜன் நிறைந்த மண்ணில் வளருவது போன்றவற்றின் காரணமாகவும் இந்த நிறமி ஏற்படலாம்.


தடுப்பு முறைகள்

  • உருளையின் கிழங்குகளில் இளஞ்சிவப்பு நிறமியைக் குறைக்க, பெரிய முகடுகளை உருவாக்குங்கள், இது சதைப்பகுதியில் நிறமாற்றத்தைக் கட்டுப்படுத்த உதவும்.
  • அடிக்கடி நீர்ப்பாசனம் செய்வதை உறுதி செய்யுங்கள், ஆனால் அதிகப்படியான நீர்ப்பாசனத்தைத் தவிர்க்கவும்.
  • கூடுதலாக, கிழங்குகளை அறுவடை செய்தல், சேமித்தல் மற்றும் பேக்கிங் செய்தல் போன்ற அவசியமான செயல்களைத் தவிர, மற்ற நேரங்களில் அவற்றைப் பகல் வெளிச்சத்தில் இருந்து விலக்கி வைக்கவும், முடிந்தவரை நேரடி சூரிய ஒளியில் அவை படாதபடி பார்த்துக் கொள்ளவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க