அரிசி

வெப்ப அழுத்தம்

Thermal stress

மற்றவை

சுருக்கமாக

  • வெள்ளை நிறத்தில், பூங்கொத்துக்கள் வாடியிருக்கும்.
  • நெல் இலைகள் சுருண்டுகொண்டு கருகிய நிலையில் காணப்படும்.
  • பக்கக்கன்றுகள் (தண்டுகள்) குறைவான எண்ணிக்கையிலும் சிறியதாகவும் இருக்கும்.
  • கதிர் கொத்துக்களில் நெல் தானியங்கள் இருக்காது.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

அரிசி

அறிகுறிகள்

நெற்பயிர்களின் வெப்ப அழுத்தத்தின் அறிகுறிகள் நெற்பயிரின் வளர்ச்சிக் கட்டத்திற்கு ஏற்ப மாறுபடும். ஆரம்பகாலத்தில், இது இறந்த நாற்றுகள் மற்றும் குறைவான பக்கக்கன்றுகளுக்கு (நெற்பயிர்த் தண்டுகள்) வழிவகுக்கும். இலைகள் சுருண்டு கொண்டு கருகத் தொடங்கும். பூக்கும் கட்டத்தில், நெற்பயிர் கொத்துகள் வெண்மையாக மாறி, மகரந்தங்கள் பலவீனமாக இருப்பதைக் குறிக்கும். நெல் தானியங்கள் உருவாகும்போது, ​​வெப்பம் முழுமையற்ற வளர்ச்சியை ஏற்படுத்தும். முக்கிய விளைவு என்னவென்றால், வெப்ப அழுத்தம் அறுவடை செய்யப்பட்ட நெற்பயிரின் அளவு மற்றும் தரம் இரண்டையும் குறைக்கும்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

இந்தப் பிரச்சினைக்குக் காரணம் நோய்ப்பூச்சியோ நோயோ அல்ல; எனவே, கரிமக் கட்டுப்பாடு தேவையில்லை அல்லது கரிமக் கட்டுப்பாடு பொருத்தமானதாக இருக்காது.

இரசாயன கட்டுப்பாடு

இந்தப் பிரச்சினைக்குக் காரணம் நோய்ப்பூச்சியோ நோயோ அல்ல; எனவே, இரசாயனக் கட்டுப்பாடு தேவையில்லை அல்லது இரசாயனக் கட்டுப்பாடு பொருத்தமானதாக இருக்காது.

இது எதனால் ஏற்படுகிறது

பயிர் வளரவும், வளர்ச்சி அடையவும் மற்றும் இனப்பெருக்கம் செய்யவும் வேண்டியதைத் தாண்டி வெப்பநிலை அதிகரிக்கும்போது இந்த வகையான அழுத்தம் ஏற்படுகிறது. பகல் மற்றும் இரவு வெப்பநிலை இரண்டும் வெப்ப அழுத்தத்தை ஏற்படுத்தும் என்றாலும், பகலை விட இரவில் விளைவுகள் மோசமாக இருக்கும். தற்போது இந்தப் பிரச்சினை அதிகமாகி வருவதற்கு பருவநிலை மாற்றமே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அதிக வெப்பம் மற்றும் போதுமான தண்ணீர் இன்மை ஆகிய இரண்டும் இந்தச் சிக்கலை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்வது அவசியம்.


தடுப்பு முறைகள்

  • விரைவாக முதிர்ச்சியடையும் நெற்பயிர் வகைகளைத் தேர்ந்தெடுங்கள் அல்லது பருவத்தின் பிற்பகுதியில் உங்கள் நெற்பயிரைப் பயிரிடுங்கள், இது முக்கியமான இனப்பெருக்கக் கட்டத்தில் வெப்ப அலைகள் ஏற்படுவதைத் தவிர்க்கும்.
  • வேகமாக முதிர்ச்சியடையும் நெற்பயிர், வெப்பமான கோடை மாதங்களுக்கு முன்பே அதன் முக்கியக் கட்டத்தை அடைந்துவிடும், அதே வேளையில் தாமதமாக நடவு செய்யும்போது உச்சக்கட்ட வெப்பத்திற்குப் பிறகு இனப்பெருக்கக் காலம் ஏற்படும், இது பயிரைத் தீவிர வெப்பநிலையிலிருந்து பாதுகாக்கும்.
  • மண்ணின் அமைப்பை மேம்படுத்த பொருத்தமான உழவு நடைமுறைகளை பராமரிக்கவும், இது வேர்கள் ஆனது நீர் மற்றும் ஊட்டச்சத்துக்களை மிகவும் திறம்பட அணுக உதவும்.
  • குறிப்பாக வெப்ப அலைகளின்போது உங்கள் பயிருக்குத் தண்ணீர் பாய்ச்சுங்கள்.
  • நீங்கள் பயன்படுத்தும் நைட்ரஜனின் மொத்த அளவை சிறிய அளவுகளாகப் பிரித்துப் பயன்படுத்தவும்.
  • உங்கள் நைட்ரஜன் அளவைப் பிரித்துப் பயன்படுத்தும்போது, அவை ​​மண்ணில் படிப்படியாக வெளியேறுவதை உறுதிசெய்ய, மெதுவாக வெளியிடும் மேல் உரமாக அவற்றைப் பயன்படுத்தவும்.
  • மண்ணின் அடுக்குகளைக் கலக்கவும் அதன் கட்டமைப்பை மேம்படுத்தவும் உங்கள் மண்ணை ஆழமாக உழவும்.
  • உங்கள் மண்ணின் தரத்தை மேம்படுத்துவதற்கு கரிமப் பொருட்களைச் சேர்க்கவும்.
  • இந்த நடவடிக்கைகள் சிறந்த வளரும் சூழலை உருவாக்கி, உங்கள் தாவரங்கள் வெப்ப அழுத்தத்தை எதிர்க்க உதவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க