Herbicides Cell Membrane Disruptors
மற்றவை
அறிகுறிகளானது பயன்படுத்தப்படும் களைக்கொல்லி, பயன்பாட்டு நேரம் மற்றும் அளவைப் பொறுத்தது. பொதுவாக, இலைகள் நீர் தோய்த்த காயங்களை வெளிப்படுத்துகின்றன, இவை பின்னர் உலர்ந்து போகின்றன. திசு கருகுதல் அல்லது முளைக்க தவறுதல் ஆகியவை முளைப்பதற்கு முன்பாக பயன்படுத்தும் இந்த களைக்கொல்லிகளின் சிறப்பியல்பு ஆகும். களைகள் முளைத்த பிறகு பயன்படுத்தும்போது, இவை புள்ளி வடிவத்தில் கருகிய தோற்றத்தினை ஏற்படுத்துகிறது. இது பராகுவட் ஏற்படுத்தும் சேதங்களுடன் குழப்பிக்கொள்ளக்கூடும், ஆனால் இதில் வெண்கல நிறமாற்றம் ஏற்படாது.
இந்த நிலைக்கு உயிரியல் சிகிச்சை எதுவும் கிடைக்கவில்லை. தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் நல்ல விவசாய முறைகள் முதலாவதாக ஏற்படும் தீங்குகளைத் தவிர்ப்பதற்கான திறவுகோல்கள். அதிகப்படியான அளவு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வழக்கில், தாவரங்களை நன்கு கழுவி அலசவும்.
உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். களைக்கொல்லி தெளிப்பைத் திட்டமிடுவதற்கு முன்பு, நீங்கள் கையாளும் களை வகை குறித்து அறிந்து வைத்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் (அடிப்படையில் அகலமான இலைகளை உடைய களைகள் மற்றும் புற்கள்) மற்றும் கிடைக்கக்கூடிய சிறந்த முறையைத் தேர்வு செய்யுங்கள். களைக்கொல்லியை கவனமாக தேர்ந்தெடுத்து, லேபிளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளபடி அளவுகளையும் வழிமுறைகளையும் பின்பற்றவும்.
சேதங்களானது பிபிஓ வினைத்தடுப்பிகளான களைக்கொல்லிகளால் ஏற்படுகிறது; டிஃபெனைல் ஈதர் குடும்பத்தைச் சேர்ந்த புளூமியாக்சசின், ஃபோம்சஃபென், லாக்டோஃபென், கார்ஃபென்ட்ரஸோன், அசிஃப்ளூர்ஃபென் ஆகியவை அடங்கும். இவை பச்சைய உற்பத்தியைத் தடுப்பதன் மூலம் உயிரணு படலத்தை சீர்குலைக்கின்றன. ஒளி மற்றும் வானிலை நிலைமைகளை பொறுத்து 1-3 நாட்களுக்குள் இலைகளில் அறிகுறிகள் தோன்றும். அறிகுறிகள் ஒளியால் தூண்டப்பட்டு பிரகாசமான, சூடான நாட்களில் மோசமடைகின்றன.