Herbicides Growth Regulators
மற்றவை
அறிகுறிகளானது இலை பரப்புகள் மடிந்துக் கொள்ளுதல், வளைந்துக் கொள்ளுதல் அல்லது முறுக்கிக்கொள்ளுதல் போன்ற அறிகுறிகள் மூலம் வளரும், இளம் இலைகளில் முக்கியமாகக் காணப்படும். தண்டுகள் மற்றும் காம்புகள் நீண்டு போகும், கொப்புளங்கள் மேற்பரப்பில் உருவாகி, அவை 'கம்பிக்கட்டு' அல்லது 'சூனியக்காரியின் கைகள்' போன்ற தோற்றத்தைக் கொடுக்கும். இலை நரம்புகள் வலையை போன்று அல்லாமல் இணையாக காணப்படும், மேலும் இலைகள் மஞ்சள் நிறத்தில் இருந்து வெள்ளை நிறமாகி, பின்பு பழுப்பு நிறமாக மாறும். முதிர்ந்த இலைகள் அல்லது வளர்ச்சியடைந்த காய்கள் போன்ற முதிர்ந்த தாவர பாகங்களுக்கு எந்தவித சேதமும் ஏற்படுவதில்லை.
சேதம் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கு முதலில் தடுப்பு மற்றும் நல்ல வேளாண் நடைமுறைகளை பின்பற்றுவது முக்கியம். இந்த நிலைக்கான உயிரியல் சிகிச்சைகள் ஏதும் இல்லை. அதிகப்படியான பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்பட்டால், நன்கு தாவரங்களைக் கழுவுதல் அல்லது அலசுதல் உதவக்கூடும்.
உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். களைக்கொல்லி தெளிப்பதற்கு திட்டமிடுவதற்கு முன்பு, நீங்கள் கையாளும் களை வகைகளை தெரிந்து வைத்திருக்கவும் (அடிப்படையில் அகண்ட இலைகளையுடைய களைகளையும் புற்களையும்) மற்றும் வேறு எந்த முறையும் இந்த தேவைக்குப் பொருத்தமாக இருக்காது என்பதையும் உறுதிசெய்து கொள்ளவும். கவனமாக களைக்கொல்லியைத் தேர்ந்தெடுத்து, கவனமாக லேபிளைப் படிக்கவும், மேலும் வழிமுறைகளையும் குறிப்பிடப்பட்டிருக்கும் அளவுகளையும் பின்பற்றவும்.
பருத்தித் தாவரங்கள், குறிப்பாக மேல்நாட்டுப் பருத்தி கோசிப்பியம் ஹிர்சுடம் மற்றும் பிமா பருத்தி ஜி பார்படென்ஸ் போன்றவை 2,4-டி அல்லது டிகம்பாவுக்கு மிகவும் உணர்திறன் கொண்டவை. இந்த களைக்கொல்லிகள் ஃபீனாக்ஷி அசிட்டிக் அமிலங்கள் அல்லது செயற்கை ஆக்ஸின்கள் (பிரிவு I) பிரிவிற்கு சொந்தமானவை மற்றும் இவை பரந்த இலைகளை உடைய களை வகைகளைக் கட்டுப்படுத்தப் பயன்படுகின்றன. தவறான நேரம், தவறான உருவாக்கம் அல்லது வெறுமனே பாதகமான வானிலை ஆகியவற்றைத் தேர்ந்தெடுப்பது போன்றவை களைக்கொல்லிகளை நகர்த்தி, பருத்திப்பயிர்களைப் பாதிக்கும். அண்டை வயல்களில் இருந்தும் மாசுபாடு ஏற்படலாம். மோசமான நடைமுறைகள் காரணமாக தாவரங்களின் முந்தைய அழுத்தமும் அறிகுறிகளை அதிகரிக்கலாம். பயன்படுத்தப்படும் களைக்கொல்லிகளின் அளவைப்பொறுத்து அறிகுறிகள் எவ்வளவு நாள் தென்படுகிறது என்பது அமையும். மேலும் விகிதங்கள் மிக அதிகமாக இருந்தால், அறிகுறிகளானது சில கணுக்களில் இருந்து முழுத் தாவரம் வரை ஏற்படக்கூடும். களைக் கொல்லிகளானது சிறிய அளவுகள் கூட பயிர்களைச் சேதப்படுத்தும் என்பதை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.