நாரத்தை / சாற்றுக்கனி வகைகள்

நாரத்தை மீதான காற்றின் சேதம்

Wind Damage on Citrus

மற்றவை

சுருக்கமாக

  • நீண்ட காலத்தில், காற்றானது தாவரங்களின் வளர்ச்சி, உடற்கூறியல் மற்றும் உருவகம் ஆகியவற்றில் வெவ்வேறுபட்ட மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.
  • உடல் சார்ந்த சேதங்களானது கிளை அல்லது சிறு கிளைகள் உடைந்து போகுதல், பழங்கள் தக்கைபோன்றாகுதல், மற்றும் சிராய்ப்புகள் மற்றும் திசுக்களை அகற்றும் மணல் வீச்சு உள்ளிட்டவையாகும்.
  • கடுமையான சந்தர்ப்பங்களில், குறைவான பழங்கள் உற்பத்தி செய்யப்படும், தரம் பாதிக்கப்படக்கூடும் மற்றும் விளைச்சல் இழப்புகளும் எதிர்ப்பார்க்கப்படும்.

இதிலும் கூடக் காணப்படும்


நாரத்தை / சாற்றுக்கனி வகைகள்

அறிகுறிகள்

இதற்கான அறிகுறிகளானது இலைப்பேன்களால் ஏற்படும் அறிகுறிகளோடு பெரும்பாலும் குழப்பிக்கொள்ளப்படும். இளம் மரங்களின் மேல்புற வேர்கள் மற்றும் நிலப்பகுதிக்கு அருகேயுள்ள மரப்பட்டைகள் போன்றவை மணல் படிவதால் (மணல் வீச்சு என்றும் அழைக்கப்படுகின்றன) சிராய்ப்புக்கான அறிகுறிகளுடன் காணப்படும். இலைகள் மற்றும் தண்டுகள் மீதான காயங்களும் சிராய்ப்புகளால் ஏற்படுகின்றன, ஆனால் அங்கு சேதங்கள் இன்னும் அதிகமாக இருக்கும். காற்றின் அழுத்தத்தினால் வளர்ச்சி விகிதம் iமற்றும் விளைச்சல் குறையக்கூடும், காற்றில் வெளிப்படும் மரத்தின் பக்கங்கள் குறைவான பழங்களுடன் அல்லது பழங்கள் இல்லாமல் காட்சியளிக்கும். பருவத்தின் பிந்தைய பகுதியில் இளம் பழங்கள் (விட்டம் 8 மிமீ) காற்றின் சேதத்தினால் மிகவும் பாதிக்கப்படும். ஒற்றை அல்லது பல குறுக்கு அல்லது மூலைவிட்டமான சாம்பல் வடுக்கள் தோல் முழுவதும் காணப்படுகின்றன. இலைப்பேன்களின் சேதங்களுடன் ஒப்பிடும்போது, காற்று அழுத்தமானது பழங்களின் சுத்தமான திசுக்களின் மீது சிறிய திட்டுக்களை ஏற்படுத்துகிறது, ஆனால் இலைப்பேன்களானது தொடர்ச்சியான வடுக்களை ஏற்படுத்தும். வலுவான காற்று கிளைகளை உடைத்து, வளைக்கக்கூடும் அல்லது மரத்தை பிடுங்கி வீசியெறியக்கூட செய்யும்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

முதலில் சேதங்களை மதிப்பீடு செய்யவும். அவை எந்தளவுக்கு பரவியுள்ளது மற்றும் வளர்ச்சி நிலை பொறுத்து, மரங்களை அழிவில் இருந்து மீட்க முடியுமா என்பதை தீர்மானிக்கவும். வெட்டும் அல்லது சீர்திருத்தம் செய்யும் கருவிகள் மூலம் பாதிக்கப்பட்ட கிளைகள் மற்றும் பழங்களை அகற்ற வேண்டும். குறிப்பாக ஈரமான வானிலையின்போது, பேக்டீரியா மற்றும் பூஞ்சை நோய்கள் ஏற்படக்கூடிய இடங்களில் கரிம பசைகளை பயன்படுத்தவும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். சிகிச்சைகளானது வளர்ச்சி நிலை மற்றும் சேதத்தின் தீவிரத்தை சார்ந்து இருக்கிறது. கடுமையான நோய்த்தொற்றுகளில், சிகிச்சைகளானது பூஞ்சை மற்றும் பாக்டீரியா நோய்கள் தடுப்பு மீது கவனம் செலுத்தப்பட வேண்டும். சேதமடைந்த கிளைகளாக சுத்தமாக வெட்டி அகற்றுதல் மற்றும் பூஞ்சைக்கொல்லி மற்றும் பேக்டீரியாக்கொல்லி பாஷைகளை பயன்படுத்துதல் உள்ளிட்டவை சில உதாரணங்களாகும்.

இது எதனால் ஏற்படுகிறது

இதற்கான அறிகுறிகளானது காற்றினால் ஏற்படுகிறது, குறிப்பாக காற்று இடர் தடுப்புகள் இல்லாத பாதுகாப்பற்ற பகுதிகளில் இவை பெரும்பாலும் ஏற்படுகிறது. காற்று அடிக்கடி மற்றும்/அல்லது வலுவாக வீசினால், நாரத்தை அறுவடையின் பெரும்பாலான சதவீதம் தரத்தில் குறைந்துப்போகக்கூடும் அல்லது நிராகரிக்கப்படக்கூடும். இளம் பழங்கள் மீது காணப்படும் அடையாளங்கள் முதிர்ந்த இலைகள் அவற்றின் மேற்பரப்பில் பறந்து வந்து விழுவதால் ஏற்படுகிறது. பாதுகாப்பான , தக்கை போன்ற அடுக்கால் நிறமிழப்பு ஏற்படுகிறது. பழம் சுமார் 3 செமீ அளவு ஆனதும், தோல் தடிமனாகிறது.மேலும் உலர்ந்த சிறு கிளைகள் மற்றும் கிளைகள் போன்றவற்றின் சிராய்ப்புகளால் சேதங்கள் பெரும்பாலும் ஏற்படுகிறது. திசுக்களில் ஏற்படும் சேதங்களானது பேக்டீரியா மற்றும் பூஞ்சை திசுக்கள் உள்ளே சென்று, காலனித்துவப்படுத்தி, சேதங்களை இன்னும் அதிகமாக்கும் வாய்ப்பை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, உலர் காற்றானது இலை உதிர்வு, காற்று வெந்தப்பண் மற்றும் வாடுவதன் மூலம் மரங்களுக்கு சேதங்களை ஏற்படுத்தி, இறுதியாக இலைகள் இறந்து போவதற்கும், பழங்களில் வடுக்கள் ஏற்படுவதற்கும் வழிவகுக்கிறது.


தடுப்பு முறைகள்

  • காற்று வேகம், திசை மற்றும் அதிர்வெண் முறைகள் ஆகியவற்றை தொடர்ந்து நிரந்தரமாக அல்லது அவ்வப்போது காற்றுத் தடுப்புகளை நிறுவவும்.
  • காற்றின் திசைப்பக்கம் மரங்களை நடவு செய்யவும்.
  • மரங்களைப் பாதுகாக்க காற்று இடர்த்தடுப்புகளை பழுது பார்த்து நிர்வகிக்கவும்.
  • காற்றடிக்கும் என்ற முன்னறிவிப்பின்போது, மண்ணின் ஈரப்பதத்தை அதிகரிக்கவும்.
  • பெரிய சேதத்திற்குப் பிறகு புதிய வளர்ச்சியை ஊக்குவிக்க கூடுதலாக தழைச்சத்துக்களை பயன்படுத்துவதை கருத்தில் கொள்ளுங்கள்.
  • கடுமையான சூறைக்காற்று அல்லது கடுமையாக வெவ்வேறு திசைகளில் காற்றடிக்கும்போது, பல காற்று இடர் தடுப்புகளை நிறுவவும்.
  • முக்கியமாக காற்றடிக்கும் திசைப்பக்கம் தேர்ந்தெடுக்கப்பட்ட சீர்திருத்தம் செய்தல் பரிந்துரைக்கப்படுகிறது.
  • மேலும், அறுவடைக்குப்பிறகு பின்வரும் பருவக்காலத்தில் சேதங்கள் ஏற்படுவதை தடுக்க, இறந்த மரங்களை சீர்திருத்தம் செய்ய மறந்து விடாதீர்கள்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க