Wind Damage on Cucumber
மற்றவை
கடுமையான வறட்சி நிலைகளில் வளர்க்கப்படும் தாவரங்களைப் போலவே அறிகுறிகள் காணப்படுகின்றன. வலுவான சூறைக்காற்றின்போது புதிதாக விதைக்கப்பட்ட விதைகள் மண்ணிலிருந்து வீசியெறியப்படலாம். புதிதாக வெளிவந்த நாற்றுகள் மணல் வீச்சினால் சேதமடையக்கூடும். பழைய தாவரங்களில், தொடர்ச்சியான காற்றழுத்தத்தினால், இலைகள் வாடி, இறுதியாக உலர்ந்து, உடையக் கூடியதாகிவிடும். இலைத்திரள்களில் நரம்புகளுக்கு இடையேயான வெளிறிய சோகையும் காணப்படும், கடுமையான பாதிப்புகளில் இவை துண்டுகளாகி, கந்தலாகக்கூடும். தாவரங்கள் தொடர் காற்றழுத்தத்திற்கு உட்படுத்தப்பட்டால், தாவரங்களின் வளர்ச்சி குன்றிவிடும். பருவத்தின் பிந்தைய பகுதியில், மலர்கள் உதிர்தல், பழங்களில் சிராய்ப்பு மற்றும் காயம் போன்றவையும் அறிகுறிகளின் பட்டியலில் சேர்க்கப்படுகின்றன. பரு போன்ற காயங்களுடனும் சிராய்ப்புடனும் காணப்படும் பழங்கள் விற்பனையாவதில்லை. மலர்களின் மோசமான நிலைப்பாட்டினால், விளைச்சலில் இழப்புகள் ஏற்பட்டு, பழத்தின் தரமிழப்பு எதிர்ப்பார்க்கப்படுகிறது.
காற்று சேதத்திற்கு எதிரான உயிரியல் கட்டுப்பாடுத் தீர்வுகள் எதுவும் இல்லை. தடுப்பு நடவடிக்கைகள், உதாரணமாக, காற்று இடர்த்தடுப்புகள் அமைத்தல் போன்றவை சேதங்களைத் தவிர்க்க உதவும்.
உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். முதலில் சேதத்தின் அளவை மதிப்பிடுவது மற்றும் பயிரை அழிவிலிருந்து மீட்க முடியுமா என்று தீர்மானிக்க வேண்டியது முக்கியம். சாத்தியமான சிகிச்சைகள் தாவரத்தின் வளர்ச்சி நிலையையும் சார்ந்திருக்கும். கடுமையான சந்தர்ப்பங்களில், சிகிச்சைகளானது பூஞ்சை மற்றும் பாக்டீரியா நோய்களைத் தடுப்பது மீது கவனம் செலுத்தப்பட வேண்டும், உதாரணமாக சேதமடைந்த தாவர பாகங்களை சரியாக வெட்டுதல் மற்றும் பூஞ்சைக்கொல்லி மற்றும் பாக்டீரியா கொல்லி தயாரிப்புகளைப் பயன்படுத்துதல் உள்ளிட்டவையாகும்.
அறிகுறிகளானது காற்றினால் ஏற்படுகிறது, குறிப்பாக தொடர்ச்சியாக கடுமையான காற்றடிக்கும் பகுதிகளிலும், காற்றுத் தடுப்புகள் இல்லாத வயல்களிலும் இது பிரச்சினையாக இருக்கிறது. சேதங்களானது காற்றுத் துகள்கள் பரப்பதனாலும், கிளைகள் ஆடுவதினாலும் ஏற்படுகிறது. காற்றின் வேகம், தாவரங்களின் வெளிப்பாடு மற்றும் அவற்றின் வளர்ச்சி நிலை ஆகியவை அறிகுறிகளின் தீவிரத்தைத் தீர்மானிக்கிறது. மணற்பாங்கான பகுதிகளில் வளர்க்கப்படும் இளம் வெள்ளரி தாவரங்கள் குறிப்பாக மணல் சிராய்ப்பு மற்றும் காயங்களால் பாதிப்புக்குள்ளாகின்றன. கிளைகள் அசைவது இலை மற்றும் பழங்களின் மேற்பரப்புகளில் காயங்களை ஏற்படுத்துகிறது. பாதிப்படைந்த திசுக்களில் பாக்டீரியா மற்றும் பூஞ்சை குடியேறி, இவை அழுகுவதற்கு வழிவகுக்கும். இந்த சேதங்களில் இருந்து மீட்சி அடைவது தாவரங்களின் வளர்ச்சி நிலை, மண்ணின் ஈரப்பதம் மற்றும் அதே போல் வானிலையையும் சார்ந்து இருக்கிறது.