பருத்தி

பத்திவாடல் நோய்

Parawilt

மற்றவை

சுருக்கமாக

  • பத்திவாடல் நோய் என்பது உடலியல் கோளாறு ஆகும், நீர் தேங்கி நிற்கும் வயல்களில் விரைவான வளர்ச்சி உடைய தாவரங்களை இது பெரும்பாலும் பாதிக்கிறது.
  • இலை வாடல் மற்றும் நிறமாற்றம் போன்றவை இவற்றின் அறிகுறிகளாகும்.
  • இந்தக் கோளாறு அதிகரிக்கையில், இலையின் நிறம் வெளிறிய நிறத்திலிருந்து வெண்கலம்/சிவப்பு நிறமாக மாறும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

பருத்தி

அறிகுறிகள்

'திடீர் வாடல் நோய்' என்றும் அழைக்கப்படும் பத்திவாடல் நோய், வயல்களில் அவ்வப்போது பரவலாகவும், எதிர்பாராத விதமாகவும் நிகழ்கிறது. இந்தக் கோளாறுடன் தொடர்புடைய உண்மையான வயல் அமைப்பு எதுவுமில்லை, இது நோய்ப்பூச்சிகளால் ஏற்படும் நோய்களால் பெரும்பாலும் குழப்பிக்கொள்ளப்படுகிறது. இலைகள் வாடுதல் மற்றும் அவற்றின் நிறமாற்றம் இவற்றின் முக்கியமான அறிகுறிகள் ஆகும். இலையின் நிறம் வெளிறிய நிறத்திலிருந்து வெண்கலம் அல்லது சிவப்பு நிறமாக மாறும் மற்றும் பின்னர் இதனைத் தொடர்ந்து திசுக்கள் உலர்ந்துபோகும். இந்தக் கோளாறு குறிப்பாக விரைவான வளர்ச்சி , பெரிய விதானம் மற்றும் கனமான காய்ச்சுமை உடைய தாவரங்களைப் பாதிக்கிறது. காய்கள் மற்றும் இலைகள் சீக்கிரம் உதிர்தல், காய்கள் சீக்கிரம் வெடித்தல் போன்றவையும் ஏற்படும். தாவரங்கள் மீட்சி அடையக்கூடும், ஆனால் விளைச்சல் எதிர்மறையாக பாதிக்கப்படும்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

பத்தி வாடல் நோய்க்கு சிகிச்சை அளிக்க எந்த வித உயிரியல் சிகிச்சை முறைகளும் இல்லை. இந்தக் கோளாறைத் தவிர்க்க, பருத்தித் தாவரங்களுக்கான நீர்ப்பாசனம் மற்றும் உரங்கள் இடுதல் ஆகியவற்றைச் சரி செய்வதும், மண்ணுக்கு நல்ல வடிகாலினைத் திட்டமிட வேண்டியதும் முக்கியமாகும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். பத்தி வாடல் நோய்க்கு சிகிச்சை அளிக்க எந்த வித இரசாயண சிகிச்சை முறைகளும் இல்லை. இருப்பினும், வடிகால் வழியாக அதிகப்படியான நீரை அகற்றுவதன் மூலம் நீங்கள் தொடங்கலாம். பிறகு, 1 லிட்டர் தண்ணீரில் 15 கிராம் யூரியா, 15 கிராம் சாம்பல்சத்தின் முரேட் மற்றும் 2 கிராம் தாமிரம் ஆக்ஸிகோரைடு ஆகியவற்றைக் கொண்ட கரைசலைத் தயாரிக்கவும். தாவர வேர் மண்டலத்திற்கு அருகில் 100 -150 மில்லி தண்ணீரைச் சேர்க்கவும். இந்தத் கரைசல் தாவரத்திற்கு உடனடி ஊட்டச்சத்து அளிப்பதோடு பூஞ்சைக்கொல்லியானது பூஞ்சை நோயைத் தடுக்கிறது.

இது எதனால் ஏற்படுகிறது

பத்திவாடல் நோய் என்பது ஒரு உடலியல் கோளாறு ஆகும், அதாவது பூஞ்சை, பாக்டீரியா, வைரஸ் மற்றும் இவற்றைப் போன்ற எதனாலும் இவை ஏற்படுவதில்லை. பருத்தித் தாவரங்களில் இதேபோன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும் பிற நோய்கள் அல்லது அழுத்தங்களுக்கு முரணாக, பத்திவாடல் நோய் எந்தவித குறிப்பிட்ட இடம் சார்ந்த அமைப்பும் இல்லாமல், சில மணி நேரங்களில் ஏற்படும் தன்மையினைக் கொண்டது. ஆங்காங்கே பரவுதல் மற்றும் எதிர்பாராமல் ஏற்படுதல் போன்றவை பத்திவாடல் நோயின் பொதுவான அறிகுறிகள் ஆகும். சூடான வெப்பநிலை மற்றும் கடுமையான வெயிலைத் தொடர்ந்து வேர்களைச் சுற்றித் திடீரென்று தண்ணீர் தேங்கி நிற்பதனால் (திடீர் மழை அல்லது அதிகப்படியான நீர்ப்பாசனத்திற்குப் பிறகு) இந்தக் கோளாறு ஏற்படுகிறது என்று இப்போது அறியப்படுகிறது. விரைவான தாவர வளர்ச்சி மற்றும் ஊட்டச்சத்து சமநிலையின்மை ஆகியவையும் இதில் தொடர்புடையது. அதிக களிமண் உள்ளடக்கம் உடைய மணல் அல்லது மோசமான வடிகால் உடைய மணல் ஆகியவை இந்த நோயை உருவாக்கும் தாவரங்களின் சாத்தியத்தை அதிகரிக்கின்றன.


தடுப்பு முறைகள்

  • பத்திவாடல் நோய்க்கு சகிப்புத்தன்மை கொண்ட வகைகள் அல்லது கலப்பினங்களைத் தேர்வு செய்து, நடவு செய்யவும்.
  • தண்ணீர் தேங்கி நிற்பதைத் தவிர்க்க வயலில் நல்ல வடிகால் அமைந்திருப்பதை உறுதிசெய்யவும்.
  • குறிப்பிட்ட வளர்ச்சி நிலை மற்றும் / அல்லது வறண்ட நிலை முதலிய காரணங்களால் தேவைப்பட்டால் ஒழிய, அதிகப்படியான நீர்ப்பாசனம் அல்லது அடிக்கடி நீர்ப்பாசனம் செய்வதைத் தவிர்க்கவும்.
  • அதிக வெப்பநிலை மற்றும் கடுமையான வெயிலைத் தொடர்ந்த பலத்த மழைக்குப்பிறகு வயல்களைக் குறிப்பாகத் தொடர்ந்து கண்காணிக்கவும்.
  • அதிகப்படியான வளர்ச்சியைத் தவிர்ப்பதற்கு அதிகப்படியான உரங்களைப் பயன்படுத்தாதீர்கள் (எ.கா.
  • பெரிய விதானம் மற்றும் கனமான காய்ச்சுமை).
  • சீர்குலைவுக்கான (கடுமையான மழை மற்றும் சூரிய ஒளி) காரணங்களைத் தவிர்க்க விதைப்புத் தேதிகளை மாற்றியமைக்கவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க