Leaf Reddening
மற்றவை
இலைகள் உண்மையாக செந்நிறமாகுதலானது காரணம் மற்றும் பயிர் நிலையைப் பொறுத்து சற்று மாறுபடும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இலை ஓரங்கள் முதலில் செந்நிறமாகும், பின்னர் மீதமுள்ள இலைப் பரப்புக்கும் இந்த சிவப்பு நிறம் பரவும். தண்டுகள் வாடுதல், செந்நிறமாகுதல், மோசமான காய் வளர்ச்சி அல்லது வளர்ச்சியின்மை, இலை மற்றும் பழம் விழுதல் மற்றும் வளர்ச்சி குன்றிய தாவரங்கள் உள்ளிட்டவை பிற அறிகுறிகளுள் அடங்கும். முதிர்ச்சியடையும்போது, நிறமாற்றம் என்பது ஒரு இயற்கை செயல்முறையாகும், இது பொதுவாக வயல்கள் முழுவதும் காணப்படும். தழைச்சத்துக் குறைபாடுகளைத் தவிர, நேரடியான சூரிய வெளிச்சம், குளிர் வெப்பநிலை மற்றும் காற்றின் சேதம் ஆகியவற்றின் காரணமாகவும் இலை செந்நிறமாகுதல் ஏற்படலாம். அந்த சமயத்தில், நிறமாற்றம் என்பது முழு வயலை அல்லாமல் ஒரு இலையை மட்டுமே பாதிக்கும்.
அழுத்தம் மற்றும் வளர்ச்சி நிலை ஆகியவற்றைப் பொறுத்து, கரிம உரங்களின் பயன்பாடு தாவரத்திற்கு பயன்மிக்கதாக இருக்கும். பருவத்தின் இறுதியில் இலை செந்நிறமாகுதல் ஏற்பட்டால் அல்லது செயல்முறை உடலியல் காரணிகளால் தூண்டப்பட்டால், உயிரியல் கட்டுப்பாடு எதுவும் தேவையில்லை.
உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். பருத்திப் பயிர்களில் இலை செந்நிறமாவதற்கு எதிராக எந்தவித இரசாயணக் கட்டுப்பாடும் இல்லை. பண்ணை எருக்களை நல்ல முறையில் வழங்குதல், போதுமான அளவு நீர்ப்பாசனத் திட்டம் மற்றும் சமச்சீரான உரங்கள் இடுவதும் இந்தப் பிரச்சினையைத் தடுக்க உதவும். பருவத்தின் ஆரம்பத்தில் இந்த நோய் ஏற்பட்டால், ஊட்டச்சத்துக்களை மேலும் வழங்கி சரிசெய்வது இந்தப் பிரச்சினையைத் தீர்க்க உதவும். முதல் காய்கள் வெடிக்கும் அதே நேரத்தில் இந்த அறிகுறிகள் தென்படத் தொடங்கினால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வேண்டியதில்லை.
அறிகுறிகளானது தண்ணீர், தொடர்ச்சியான வெப்பநிலை அழுத்தம் அல்லது மோசமான மண் வளம் போன்ற பல்வேறு உயிரற்ற காரணிகளால் ஏற்படுகிறது. சில வகைகள் அல்லது கலப்பினங்கள் மற்றவைகளை விட அதிகமாக பாதிக்கப்படுகின்றன. செந்நிறமாதல் என்பது அந்தோசியனின் என்றழைக்கப்படும் சிவப்பு நிறமிகள் அதிகரிப்பதாலும், இலைகளில் பச்சை நிறமி குளோரோபில் குறைவதாலும் ஏற்படுகிறது. சிறு வேர்கள் சிதைவது இதன் காரணமாக இருக்கக்கூடும், இது தண்ணீர் மற்றும் ஊட்டச்சத்துக்கள் எடுத்துக் கொள்ளப்படும் திறனைக் குறைக்கிறது. முதிர்ச்சியடையும்போது, இந்தச் செயல்முறை இயற்கையானது மற்றும் விளைச்சலில் இது எந்தவித எதிர்விளைவுகளையும் ஏற்படுத்தாது. தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல்சத்துக்களும் பருவத்தின் ஆரம்பத்தில் இந்த நோய் ஏற்படுவதற்கான பிற காரணங்களாகும் (மெக்னீசியம் சம்பந்தப்பட்டதாக தெரியவில்லை). மேலும், அதிகப்படியான சூரிய வெளிச்சம், காற்று மற்றும் குளிர் வெப்பநிலை போன்றவையும் இந்த நிறமாற்றத்தைத் தூண்டக்கூடும்.