தக்காளி

தக்காளியின் விரிசல் நோய்

Fruit Deformation

மற்றவை

சுருக்கமாக

  • தோலின் நெகிழ்வுத்தன்மை மீதான அதிகப்படியான அழுத்தம் பழங்களின் மீது விரிசல்களை ஏற்படுத்துகிறது.
  • தண்டுப்பகுதிகளைச் சுற்றிலும் விரிசல்களும் பிளவுகளும் ஏற்படக்கூடும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

தக்காளி

அறிகுறிகள்

பழத்தின் வெளிப்புறத் தோலில் விரிசல் மாற்றுப் பிளவுகள் வடிவில் அறிகுறிகள் தென்படுகிறது. விரிசல்களும் பிளவுகளும் ஆழம் மற்றும் அளவுகளைப் பொறுத்து மாறுபடும், மேலும் இது பழத்தின் மேல்பாகத்தைச் சுற்றி பொதுவாக ஏற்படும். காயங்களின் செறிவு அல்லது சுற்றளவின் சமச்சீர்மை பல்வேறு உடலியல் பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டலாம். சில நேரங்களில் பூக்களின் அடிப்பகுதியும் பாதிக்கப்படக்கூடும். பாதிக்கப்பட்ட பழங்கள் எவ்வளவு இளசாக இருக்கிறதோ, அந்தளவுக்கு விரிசல்களானது அதிக சேதங்களை ஏற்படுத்தும். தண்டுகளைச் சுற்றி விரிசல்களும் பிளவுகளும் ஏற்படக்கூடும். இந்தக் குறைப்பாடானது பழத்தோலில் அதிகப்படியான அழுத்தம் இருக்கும்; சிறிய விரிசல்கள் ஏற்பட்டு, அது இறுதியாக வெடித்துத் திறந்துவிடும்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

இந்த நோய்க்கான உயிரியல் சிகிச்சைகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. தடுப்பு நடவடிக்கைகளால் மட்டுமே இந்த நோய்க்கு சிகிச்சை அளிக்க முடியும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். தடுப்பு நடவடிக்கைகளால் மட்டுமே இந்த நோய்க்கு சிகிச்சை அளிக்க முடியும். இருப்பினும், தழைச்சத்துக்கள் கொண்ட உரங்களை அதிகப்படியாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும் மற்றும் மண்ணில் உள்ள சாம்பல்சத்துக்களின் அளவு மீது கவனம் செலுத்தவும்.

இது எதனால் ஏற்படுகிறது

பிளவுகள் மற்றும் விரிசல்களைப் பழங்களின் திடீர் மற்றும் விரைவான வளர்ச்சியினால் ஏற்படுகிறது. இது பொதுவாகத் தாவரங்கள் வழக்கத்திற்கு அதிகமாகத் தண்ணீரை உறிஞ்சுவதன் மூலம் ஏற்படுகிறது. அதிகப்படியான ஈரப்பதத்துடன் குளிர்ச்சியான, ஈரமான சூழலில் இருந்து உலர்வான மற்றும் வறண்ட காலநிலைக்கு மாறுவது போன்ற சுற்றுச்சூழல் நிலைகளில் மாற்றத்தால் தாவரங்களின் திடீர் வளர்ச்சி தூண்டப்படக்கூடும் அல்லது அதிகரிக்கக்கூடும். பிரச்சினையைத் தீர்ப்பதற்குச் சமச்சீரான உரங்கள் இடுவதும் முக்கியமாகும். உதாரணமாக, பூக்கள் மற்றும் பழங்கள் வளர்ச்சியின் போது தழைச்சத்துக்களை அதிகமாக பயன்படுத்துவதும், சாம்பல் சத்துக்களைக் குறைவாகப் பயன்படுத்துவதும் பழங்களின் அதிகப்படியான வளர்ச்சிக்கும், விரிசல்கள் ஏற்படுவதற்கும் வழிவகுக்கும்.


தடுப்பு முறைகள்

  • விரிசலுக்கான-எதிர்ப்புத் திறன் உடைய தக்காளி வகைகளைத் தேர்வு செய்யவும்.
  • அதிகப்படியான நீர்ப்பாசனத்தைத் தவிர்க்கவும், திடீரெனெ வெள்ள நீர் பாய்ச்சுவதற்குப் பதிலாக நிலையான முறையில் தண்ணீர் பாய்ச்சுவதை இலக்காகக் கொள்ளவும்.
  • எதிர்வரும் தீவிர வானிலை நிகழ்வுகள் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும்; சாத்தியமானால் அதிக ஈரப்பதத்தின் போதும் குறைவான சூரிய வெளிச்சத்தின் போதும் எச்சரிக்கையாக இருக்கவும்.
  • அழுத்தத்தைத் தவிர்க்க, ஒவ்வொரு தாவரத்திலும் இலைகள் மற்றும் பழங்களுக்கு இடையே சமநிலையைப் பராமரிக்கவும்.
  • தழைச்சத்துக்கள் கொண்ட உரங்களை அதிகமாகப் பயன்படுத்துவதையும், சாம்பல்சத்து கொண்ட உரங்களைக் குறைவாக பயன்படுத்துவதையும் தவிர்க்கவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க