அரிசி

நெற்பயிரில் இரும்பின் நச்சுத்தன்மை

Iron Toxicity

மற்றவை

சுருக்கமாக

  • தாவர திசுக்களில் அதிகப்படியான இரும்பு திரட்சி இலைகளை பழுப்பு நிறமாக அல்லது வெண்கல நிறமாக ஆக்குகிறது.
  • மண்ணில் உள்ள அதிகப்படியான இரும்புச்சத்தின் செறிவு, மோசமான வேர் ஆரோக்கியம் மற்றும் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் குறைவாக உறிஞ்சப்படுதல் ஆகியவற்றுக்கு வழிவகுக்கிறது .

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

அரிசி

அறிகுறிகள்

பயிர்களின் வளரும் காலம் முழுவதும் இரும்புச்சத்து நச்சுத்தன்மை ஏற்படக்கூடும். இது உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள தாழ்நில அரிசி வகைகளில் ஏற்படும். தாவர திசுக்களின் அதிகரித்த உறிஞ்சும் தன்மை மற்றும் இரும்பு சத்துக்களின் அதிகப்படியான திரட்சி போன்றவை நச்சு கலவைகளின் உற்பத்திக்கு வழிவகுக்கும். இதையொட்டி, பச்சையம் அழியத்தொடங்குதல் மற்றும் உடலியல் செயல்முறைகளில் சேதங்கள் ஏற்பட்டு, இலைகளில் பழுப்பு நிறமாற்றம் அல்லது வெண்கலம் போன்ற நிறமாற்றம் போன்றவற்றுக்கு வழிவகுக்கும். வேர்மண்டலத்தில் உள்ள அதிகப்படியான இரும்பு செறிவு, மோசமான வேர் ஆரோக்கியம் மற்றும் பல முக்கிய ஊட்டச்சத்துக்கள் குறைவாக உறிஞ்சப்படுதல் ஆகியவற்றுக்கு காரணங்களாக இருக்கிறது . இது கணிசமான விளைச்சல் இழப்புகளை (10-100%). ஏற்படுத்தக்கூடும்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

இந்த குறைப்பாட்டுக்கான உயிரியல் கட்டுப்பாடு எதுவும் அறியப்படவில்லை.

இரசாயன கட்டுப்பாடு

இரும்பு சத்து நச்சுத்தன்மை பிரச்சினையாக இருக்கும் மண்ணிலும், சூழ்நிலைகளிலும், உரங்களை பயன்படுத்துதல் (குறிப்பாக பொட்டாசியம்) மற்றும் சுண்ணாம்பு கலத்தல் போன்றவை இந்த கோளாறுகளை தவிர்ப்பதற்கு முக்கிய காரணியாக இருக்க கூடும். உர கலவையில் மாங்கனீசு போன்றவற்றை சேர்த்தல் தாவரங்களால் இரும்பு உறிஞ்சப்படுவதை குறைக்க உதவும். அமில மண்ணில் சுண்ணாம்பு கலத்தல் மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது. அதிக அளவு இரும்பு மற்றும் கரிம பொருட்களை கொண்டிருக்கும் மண் மீதும் மற்றும் வடிகால் மோசமாக இருக்கும் மண் மீதும், அதிகப்படியான கரிமப் பொருட்களின் (எரு, வைக்கோல்) பயன்பாட்டைத் தவிர்க்கவும். அம்மோனியா சல்பேட் (அதிக அமிலதன்மை கொண்டவை) க்கு பதிலாக யூரியாவை நைட்ரஜன் உரமாக (குறைவான அமிலதன்மை கொண்டவை) பயன்படுத்தவும்.

இது எதனால் ஏற்படுகிறது

தாவரங்களின் வேர்ப்பகுதியில் இருக்கும் அதிகப்படியான இரும்பு சத்து காரணமாக இரும்பு நச்சுத்தன்மை ஏற்படுகிறது. இந்த நோயானது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மண்ணுடன் தொடர்புடையது, மேலும் இவை முதன்மையாக தாழ்நில நெல் உற்பத்திகளை பாதிக்கிறது. நீருக்கடியில் அடியில் இருக்கும் மணல்கள் இரும்பு சத்துக்களின் செறிவை அதிகரித்து, தாவரங்களினால் உறிஞ்சப்படும் தன்மையையும் அதிகரிக்கிறது. பெரிய அளவில், அமில மணல், மண்ணில் ஆக்சிஜனேற்றம், மற்றும் நிலவளங்களின் அளவு ஆகியவை இந்த ஊட்டச்சத்துக்களின் திரட்சி மற்றும் உறிஞ்சும் திறனில் முக்கிய பங்கு வகிக்கின்றன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மணல்களில், ஹைட்ரஜன் அயனிச் செறிவின் அளவு 5.8 க்கு குறைவாகவும்,காற்றின் அளவு (சாதாரண ஆக்ஸிஜன் அளவுகள்) இருக்கும் போது மற்றும் ஹைட்ரஜன் அயனிச் செறிவின் அளவு 6 .5 க்கு குறைவாகவும்,காற்றின் அளவு (குறைவான ஆக்ஸிஜன் அளவுகள்) இருக்கும் போதும் இரும்பு நச்சுத்தன்மை ஏற்படுகிறது. மண்ணில் சுண்ணாம்பு கலத்தல், மண் வளத்தை மேம்படுத்துதல், பயிரின் குறிப்பிட்ட வளர்ச்சி நிலைகளில் மண் வடிகால் அமைத்தல் உள்ளிட்டவை தகுந்த மேலாண்மை வழிமுறைகள் ஆகும். மாங்கனீசு மண்ணில் உள்ள இரும்பு சத்துக்களுடன் போட்டியிடுவதால், இந்த நுண்ணூட்டச்சத்துக்களை சேர்த்தல், தாவரங்கள் இரும்பு சத்துக்களை உறிஞ்சுவதை குறிப்பிட்ட அளவிற்கு குறைக்க கூடும்.


தடுப்பு முறைகள்

  • மண்ணில் உள்ள அதிக அளவிலான இரும்பு சத்துக்களை சகித்துக்கொள்ளும் தாவர வகைகளை நடவு செய்ய வேண்டும்.
  • நேரடியாக விதைக்கப்பட்டால், விதைகளை ஆக்சிடன்ட்ஸ் (இரும்பின் விளைவை தடுக்கும் பொருட்கள்) கொண்டு பூசவும்.
  • இரும்பின் உச்சகட்ட செறிவு குறையும் வரை நடவு செய்வதை தாமதப்படுத்தவும் (வெள்ள நீர் பாய்ச்சிய 10-20 நாட்களுக்கு பிறகு).
  • இரும்பு மற்றும் கரிம பொருட்களின் அதிகப்படியான செறிவு கொண்ட மோசமான வடிகால் கொண்ட மணலில் விட்டுவிட்டு வெள்ள நீர் பாய்ச்சவும்.
  • திரண்ட இரும்பை, நடுத்தரமாக உழுவும் நிலையில், (நடவு செய்த/விதைத்த 25-30 நாட்களுக்கு பிறகு), குவிந்த இரும்பை அகற்ற வடிகால் வழிமுறையை மேற்கொள்ளவும்.
  • அறுவடைக்குப்பின் நிலத்தை உழுது, முடிந்தால் பல நாட்கள் அல்லது வாரங்களுக்கு வயல்களை அப்படியே விட்டுவிடவும்.
  • அமில மண்ணில் ஹைட்ரஜன் அயனிச் செறிவு அளவை அதிகரிக்க மேல்புற மணல்களில் சுண்ணாம்பை கலக்கவும்.
  • கூடுதல் மாங்கனீசு உரங்களைப் பயன்படுத்துதல் வேண்டும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க