குடைமிளகாய் & மிளகாய்

வேனிற்கட்டி

Abiotic Sunburn

மற்றவை

சுருக்கமாக

  • ஓரங்களில் இருந்து தொடங்கி இலைகள் வாடுதல் மற்றும் மஞ்சள் நிறமாகுதல்.
  • இலை உதிர்வுக்கு பிறகு பழங்கள் மற்றும் தாவர பட்டையும் பாதிக்கப்படலாம்.

இதிலும் கூடக் காணப்படும்

59 பயிர்கள்
பாதாம் பருப்பு
ஆப்பிள்
சீமைவாதுழைப்பழம்
வாழைப் பழம்
மேலும்

குடைமிளகாய் & மிளகாய்

அறிகுறிகள்

உயிரற்ற வேனிற்கட்டி என்பது நேரடி சூரிய ஒளி மற்றும் அதிக வெப்பநிலை ஆகியவற்றின் மூலம் தாவரங்கள், புதர்கள் அல்லது மரங்களுக்கு ஏற்படும் சேதங்களைக் குறிக்கும். இந்தக் காரணிகள் தாவரத் திசுக்களின் ஈரப்பதத்தை மாற்றியமைத்து, ஆரம்பத்தில் இளம், மென்மையான இலைகளை உதிரச் செய்யும். இந்த இலைகள் படிப்படியாக வெளிர் பச்சை நிறமாக மாறி, 2-3 நாட்களுக்குப் பிறகு இறுதியில் நுனிப்பகுதி மற்றும் விளிம்புகளுக்கு அருகே காயங்களை ஏற்படுத்தும். வறண்ட காயங்கள் பின்னர் இலை பரப்புகளின் மைய பரப்பை நோக்கி மெதுவாக படரும். வறட்சி அழுத்தம் அல்லது பூச்சிகளின் தாக்குதலினால் ஏற்படும் இலை உதிர்தலானது பழங்கள் அல்லது மரப்பட்டைகளில் வேனிற்கட்டிகளை ஏற்படுத்தும். ஏனெனில் இவை இனி இலைகளின் நிழலில் இருப்பதில்லை. மரப்பட்டைகளில் இவை வெடிப்புகள் மற்றும் சொறி போன்று காணப்படும், இவை இறுதியில் அடிமரங்களில் இறந்த பகுதிகளாக உருவாகும்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

சூரிய ஒளியைத் தடுக்க வெள்ளை களிமண் அல்லது சீமைச் சுண்ணாம்புக்கல் சூத்திரங்களை இலை தொகுதிகள் மற்றும் மரப்பட்டைகள் மீது தெளிக்கலாம். இது வெப்பநிலையை 5-10° செல்சியஸ் வரை குறைக்கக்கூடும். கால்சியம் கார்பனேட் அல்லது படிக சுண்ணாம்பு அடிப்படையிலான தயாரிப்புகளும் பரிந்துரைக்கப்படுகின்றன. பனை நாரிழை வகை மெழுகு தயாரிப்புகள் தாவரங்களுக்கு இயற்கை சூரியஒளித் தடுப்பாக பயன்படுகின்றன.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்க பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். உர பிற்சேர்ப்பாக பயன்படுத்தப்படும் அப்ஸ்சிசிக் அமிலமானது ஆப்பிள் போன்ற பழங்களுக்கு ஏற்படும் வேனிற்கட்டி சேதங்களைக் குறைக்க உதவுகிறது மேலும் இவை பிற பயிர்களிலும் கூட வேலை செய்யக்கூடும். பாலி-1-பி மென்தேனை அடிப்படையாகக் கொண்டு, இலைகளால் ஏற்படும் தண்ணீர் இழப்பைக் குறைக்கும் நீராவிப்போக்கிற்கு எதிர்மறையான தயாரிப்புகள், சில ஆய்வுகளில் நல்ல முடிவுகளைக் காட்டுகின்றன.

இது எதனால் ஏற்படுகிறது

வேனிற்கட்டி காயங்களானது அதிக சூரிய ஒளிக் கதிர்வீச்சு, உயர் காற்று வெப்பநிலை மற்றும் குறைந்த ஈரப்பதம் கொண்ட பகுதிகளில் வளர்க்கப்படும் தாவரங்களில் அல்லது மரங்களில் பொதுவாகக் காணப்படும். அதிகப்படியான உயரத்தில் புற ஊதா (யூவி) கதிர்வீச்சு அதிகமாக இருப்பதால் உயரமும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இலைகள், பழங்கள் மற்றும் பட்டைகளில் அறிகுறிகள் காணப்படுகின்றன. வேனிற்கட்டி ஏற்படுதலும், அவற்றின் தீவிரத்தன்மையும் பல்வேறு வகையான தாவரங்கள், அதன் வளர்ச்சி நிலை மற்றும் மண் ஈரப்பதம் ஆகியவற்றைச் சார்ந்திருக்கிறது. பழங்கள் பழுக்கும் காலங்களில் காற்று வெப்பநிலை மற்றும் வெப்பமான நேரங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் போது வேனிற்கட்டி குறிப்பாகக் கடுமையாக இருக்கும். வானிலைகள் மாறுவதும் மிகவும் முக்கியமாகும்: இதனால் சூடான, வெப்பமான வானிலையைத் தொடர்ந்து திடீரென ஏற்படும் குளிர்ந்த அல்லது மிதமான வானிலையும் இத்தகைய சேதங்களை ஏற்படுத்தக்கூடும்.


தடுப்பு முறைகள்

  • வெப்பத்தாக்குதலை தாங்கக்கூடிய தாவர வகைகளைப் பயன்படுத்தவும்.
  • பயிர்களின் தண்ணீர் தேவைகளுடன் நன்கு பொருந்துகிற நீர்ப்பாசனத்தை தேர்வு செய்யவும்.
  • தாவர அழுத்தம் மற்றும் வேனிற்கட்டிகளைத் தவிர்க்க வெப்ப அலைகள் ஏற்படுவதற்கு முன்பு அல்லது வெப்ப அலைகள் ஏற்படும் போது நீர் பாசனம் செய்யவும்.
  • அதிகப்படியான கோடை சீரமைப்பு மற்றும் இலை நீக்கல் ஆகியவற்றைத் தவிர்க்கவும்.
  • கவிகைளின் மூலம் காற்று சுழற்சியை மேம்படுத்துதல்.
  • தாவரம் அல்லது மரம் தெளிப்பான் குளிர்ச்சி அமைப்புகளையும் செயல்படுத்தலாம்.
  • நிழல் தரும் வலைகள் அல்லது பழப் பைகளையும் தேவைப்பட்டால் பயன்படுத்தலாம்.மண்ணின் நீர் தக்க வைக்கும் திறனை அதிகரிக்க வரிசைகளுக்கு இடையே நிலவளங்காப்புப் பயிர்களைப் பயன்படுத்தவும் (உதாரணமாக அன்னாசிப் பழத்தோட்டத்தில் மக்காச்சோளம் அல்லது துவரம் பருப்பு).

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க